Monday, September 27, 2010

யாரு டீமுல யாரு? சென்னை டீம்ல யாரு?

ஐபிஎல் 3-ஐ அடுத்து எதிர்பார்க்கப்பட்ட சாம்பியன்ஸ் லீக்கையும் கைப்பற்றிவிட்ட சந்தோஷத்தில் உள்ள சென்னை ரசிகர்களுக்கு, ஞாயிற்றுக்கிழமை கோப்பையை வென்ற பின் கேப்டன் தோனி பத்திரிகையாளர்களிடம் இறுதியாக தெரிவித்த ஒரு விஷயம் பெரும் கவலையை ஏற்படுத்திவிட்டது.http://www.vikatan.com/vc/cmspic/I_1289.jpg

"வீரர்களின் கூட்டு முயற்சியால் வெற்றி பெற்ற நாங்கள் அடுத்த ஐபிஎல் தொடரில் யார் யார் சென்னை அணியில் இருப்பார்கள் என்பது தன்னால் இப்போது கணிக்க முடியவில்லை," என்று கூறியிருந்தார். அப்போது அவர் முகத்தில் தெரிந்த சிறிய ஏமாற்றம் யாரும் கவனிக்காமல் இல்லை.

காரணம்... சென்னை உரிமையாளர்களும், சென்னை சூப்பர் கிங்ஸ் தேர்வாளர்கள் தோனியின் கருத்து இல்லாமல் இறுதி முடிவு எடுத்ததில்லை. கிட்டத்தட்ட கேப்டன் தோனி மற்றொரு சென்னை உரிமையாளராகவே வலம் வந்தார். அவரது கருத்துப்படியும் சென்னை அணி செயல்பட்டது. அதற்கு ஒரு சிறு எடுத்துக்காட்டு...

முதல் ஐபிஎல் போட்டியில் இறுதி ஆட்டம் வரை சென்ற சென்னை அணி, இரண்டாவது ஐபிஎல் போட்டியில் அரையிறுதியுடன் வெளியேறியது. போதுமான வேகப்பந்து வீச்சு இல்லாததையே இது உணர்த்தியதால் மூன்றாவது ஐபிஎல் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் போலிங்கர் அணியில் சேர்க்கப்பட்டார். அதுவும் மூன்றாவது ஐபிஎல் போட்டி தொடர் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் வேகமாக இடையில் சேர்க்கப்பட்டவர்தான் போலிங்கர்.

முன்னதாக இது தொடர்பான உள் தேர்வு நிகழ்ச்சியில் தோனியின் முடிவு எது என்பதால் சென்னை அணியின் முக்கிய தலைவரான சீனிவாசன் உடனடியாக போலிங்கரை அணுகி அவரை உடனடியாக சென்னை அணியில் இணைத்தார். அதன் பிறகுதான் சென்னை அணி பந்து வீச்சில் வலு பெற்று வெற்றிகள் குவித்தது.

இதுவரை தோனியின் கருத்துக்கும் ஆசைக்கும் முழு ஆதரவு கொடுத்த சென்னை அணியில் தோனியே தொடர்ந்து இருப்பாரா என்ற கேள்வியும் கூடவே எழுந்துள்ளது. காரணம், தோனி ஜார்க்கண்டை சேர்ந்தவர். அவரை தக்க வைத்தாலும் அவர் முடிவு செய்த வீரர்கள் தொடர்ந்து சென்னை அணியில் நீடிப்பார்களா என்ற கேள்வியும் எழுகிறது.

இப்போது இருக்கும் ஐபிஎல் விதிமுறைப்படி ஒரு அணியில் நான்கு முக்கிய வீரர்களை மட்டுமே வைத்துக்கொள்ளலாம். அதாவது, சென்னையை சேர்ந்த வீரர்களை தவிர்த்து சுரேஷ் ரெய்னா, ஜகாட்டி, ஜோகிந்தர் சர்மா, கோனி என்று உள்நாட்டு வீரர்களை குறிப்பிட்டு சொன்னாலும், இவர்களை தவிர வெளிநாட்டு வீரர்களான மேத்யூ ஹெய்டன், மைக்கெல் ஹசி, ஆல்பி மோர்கள், போலிங்கர், முரளிதரன், துஷாரா, சுரேஷ் பெரேரா என வரிசையாக அணி வகுக்கும் நட்சத்திர வீரர்களின் வரிசையில் சென்னை அணி எந்த நான்கு வீரருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் என்றும் தெரியவில்லை.

கேப்டன் தோனியே மற்ற அணி விலை பேச வாய்ப்பு உள்ளதால், அவரை எந்த விலைகொடுத்தும் தக்க வைக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முயலும். அப்படி அதிக விலை பேசி இவரை ஒப்பந்தம் செய்தால் மற்ற வீரர்களை வாங்க போதுமான பணம் இருக்குமா என்ற ஐயமும் எழுந்துள்ளது. இதற்காக ஒரு குறிப்பிட்ட விலையையும் ஐபிஎல் நீர்ணயிக்கும் என்று கூறப்படுகிறது.

அதே வேளையில் வெளிநாட்டு வீரர்களில், முக்கியமாக இரண்டு வேகப்பந்து வீச்சாளார்கள் முரளிதரன், போலிங்கர், துஷாரா, மக்காயா நிட்டினி ஆகியோரில் யாரை தக்க வைக்க முடியும்? பந்து வீச்சியில் இப்படியென்றால் பேட்டிங் வரிசையில், மேத்யூ ஹெய்டன், மைக்கெல் ஹசி, சுரேஷ் பெரேரா, ஆல்ரவுண்டரில் ஆல்பி மோர்கள், ஜேக்கப் ஓரம், ஆண்ட்ரூ பிலிண்டாப் என இந்த லிஸ்ட் நீழுகிறது. இதில் பிலிண்டாப் மீண்டும் எடுக்க வாய்ப்பு இல்லை.

வெளிநாடு வீரர்கள் தான் இப்படி என்றால், உள்நாட்டு வீரர் சுரேஷ் ரெய்னாவை வாங்க அனைத்து ஐபிஎல்லில் உருபினர்களும் இவரை எந்த விலை கொடுத்தும் வாங்க தயாராக உள்ளனர். இவரை தக்க வைக்கவும் சென்னை அணி அதிக விலை கொடுக்க வேண்டியது இருக்கும். ஆரம்பத்தில் ஒன்று ரெண்டு வீரர்கள் வைத்துக்கொண்டு அவர்களின் திறமையாக மெருகேற்றி சமாளித்து வந்த மற்ற அணிகள் கூட தற்போது சிறந்த வீரர்களை அணியில் சேர்க்கவே விரும்புகின்றனர்.

முன்னதாக சென்னை அணியிலிருந்து யார் யார் வெளியேறுவார்கள் என்ற கேள்வி எழுந்த போது மேத்யூ ஹெய்டன், சென்னை தன் தாய் வீடு போன்றது என்றும், நான் சென்னை அணியை விட்டு எந்த அணிக்கும் மாற தயாராக இல்லை எனக் கருத்து கூறினார்.

நேற்று போட்டி முடிவடைந்த உடன் மைக்கெல் ஹசி, நாங்கள் ஒன்றினைந்து முழு அர்பணிப்புடன் விளையாடியதால் ஐபிஎல் மற்றும் சாம்பியன் லீக்கை கைப்பற்ற முடிந்தது. தன்னை இதுவரை உற்சாகமாகவும், மரியாதையாகவும் நடத்திய சென்னை அணியை விட்டு போக மனமில்லை. ஆனால் அது என் கையில் இல்லையே என வேதனையுடன் குறிப்பிட்டார்.

இவர் இப்படியென்றால் தமிழகத்தின் மருமகன் முரளிதரனை கேட்கவே வேண்டாம். சென்னை நகரமும், ரசிகர்களும் தன்னை இதுவரை பிரித்து பார்த்ததே இல்லை. தான் இன்னும் தன் தாய் நாட்டுக்கு விளையாடுவது போன்றுதான் உணருகிறேன். இறுதி வரை சென்னை அணிக்கு விளையாடவே விரும்புகிறேன் என்று ஐபிஎல் 3-ஐ கைப்பற்றியதும் வெளிப்படையாகவே தன் கருத்து தெரிவித்தார்.

ஒட்டு மொத்தத்தில் சென்னை அணி கோப்பை வென்ற மகிழ்ச்சியை விட தற்போது யார் யாரை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற டென்ஷன் தான் பெரிதாக எழுந்துள்ளது.

அதே நேரத்தில் சென்னை அணியும் மற்ற அணிகளில் இடம் பெற்று சிறந்த வீரர்களை வாங்கவும் முயற்சி செய்யும்.

சச்சினின் எதிப்பு...

சென்னைக்கு மட்டுமல்ல மற்ற அணிகளும் இந்த கவலை தற்போது எழுந்துள்ளது. ஐபிஎல் விதிமுறைக்கு மும்பை அணித்தலைவர் சச்சின் டெண்டுல்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தன் அணியில் தற்போது தான் ஒன்றிணைத்து முழு சிறந்த அணியாக மாற்றியுள்ளளோம். இந்த நிலையில் நான்கு வீரர்கள் மட்டுமே அணியில் தக்க வைக்க முடியும் என்பது ரொம்ப கஷ்டமான பணி என கருத்து தெரிவித்துள்ளார்.

சரி... சென்னை அணியில் எந்தெந்த வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம்? நீங்களே யோசனை சொல்லுங்களேன்...

Saturday, September 25, 2010

"அண்ணாவிடம்" பல்பு "வாங்கிய வடஇந்தியர்கள்

1962. தமிழ்நாட்டுல இந்தி எதிர்ப்பு போராட்டம் கொழுந்து விட்டு எரிஞ்சிட்டிருந்தது. டெல்லில இருந்தவங்க இங்க இருக்க சூழ்நிலை புரியாம, கண்டபடிக்கு பேட்டி குடுத்திட்டிருந்தாங்க.

அந்த காலத்துல தமிழ்நாட்டுல 'அண்ணா'ன்னு சொன்னா போதும், சின்னப் பசங்கலேந்து பல்லு போன கிழவனார்கள் வரைக்கும் அப்படியே ஒரு வேகம் தொத்திக்கும். அண்ணா எங்கயாவது பேசறார்னு தெரிஞ்சா, அந்த ஏரியாவே சும்மா கதிகலங்கும். கேக்கற எல்லாரையும் அப்படியே கட்டிப்போடற அளவுக்கு அண்ணாவோட தமிழ் தித்திக்கும். தான் சொல்ல வந்த விஷயத்தை எல்லார் மனசுலேயும் நல்லா பதியற மாதிரி பேசறதுல அண்ணாவுக்கு நிகர் அண்ணா தான்.

டெல்லி பார்லிமெண்ட். இந்தி மொழியை தேசிய மொழியா ஆக்கறது பத்தி தீர்மானம் போட கூட்டம் கூடியிருந்தது. ஆளுங்கட்சியை சேர்ந்தவர் ஒருத்தர் எழுந்தார். "இந்தியை தேசிய மொழியா அங்கீகரிக்க ஏன் எதிர்க்கறீங்கன்னு புரியலை.."ன்னு சொல்லி, தன் தரப்பு பாயிண்ட்டுகளை அடுக்கி வெச்சார். " சிம்பிள் லாஜிக். சின்ன குழந்தைக்கு கூட இது புரியும்.. இந்தியாவுல அதிகமான மக்கள் பேசற மொழி இந்தி.. அதனால இந்தி மொழிய தானே தேசிய மொழி ஆக்க முடியும்..!"னு முடிச்சார்.

அண்ணா எழுந்தார். "அதிகமான மக்கள் பேசற மொழி தான் தேசிய மொழியா இருக்கணும்னு சொல்றீங்க.. அப்படி பாத்தா, நம்ம நாட்டுல அதிகமா இருக்கற பறவை காக்கா தான். பின்ன ஏன் மயில் தேசியப் பறவையா இருக்கு...? நாட்டுல எலி இல்லாத மாநிலமே இல்லை.. அதனால இனிமே புலிக்கு பதிலா இனிமே எலியை தேசிய விலங்கா அறிவிச்சிடலாமா..?"ன்னு கேட்டதுக்கு பார்லிமெண்ட் கட்டடம் அதிர்ற அளவுக்கு கைதட்டினாங்க..

குல்லாகாரர் கேட்டார். "சரி.. அப்டீனா இந்தியர்கள் ஒருத்தொருக்கொருத்தர் பேச, இணைப்பு மொழியா எது இருக்கும்..?"

"ஏன்.. இப்ப தான் பள்ளிகூடத்துலயே ஆங்கிலம் சொல்லித் தரோமே.."

"ஆங்கிலம் சொல்லித் தரது உலகத்தோட தொடர்பு கொள்ள.. இந்தியர்களுக்குள்ள தொடர்பு கொள்ள ஒரு மொழி வேணும்.. இந்தியாவுல நிறைய பேருக்கு தெரிஞ்ச மொழி இந்தி.. அதனால கொஞ்சம் பேர் மட்டும் இந்தி கத்துகிட்டா போதும்.. அதுக்கு தான் இந்திய தேசிய மொழி ஆக்கணும்னு சொல்றோம்.."

"வெளிநாட்டுக்காரங்களோட பேச பயன்படற அதே ஆங்கிலத்தை, இந்தியாவுல இருக்கவங்ககிட்டயும் பேச பயன்படுத்திக்கலாம்.. எதுக்காக இன்னொரு மொழி கத்துக்கணும்..? உங்க வீட்ல ரெண்டு நாய் இருக்குன்னு வெச்சுக்கங்க.. ஒண்ணு பெரிசு.. ஒண்ணு சின்னது.. பெரிய நாய்க்காக ஒரு கதவும், சின்ன நாய்க்காக ஒரு கதவும் வெப்பீங்களா.. பெரிய நாய் வந்து போகுற கதவையே சின்ன நாயும் பயன்படுத்திக்கும் தானே.. ?ன்னாரு..

அறிஞர் அண்ணாவோட டைமிங் சென்ஸ், டெல்லிகாரங்களையே வாயடைக்க வெச்சிடுச்சு..!

மேற்கண்ட உரையாடல் ஆங்கிலத்தில் தான் நடந்தது. அண்ணா இவ்ளோ சூப்பரா ஆங்கிலம் பேசுவார்னு அங்க இருக்கவங்க ஒருத்தரும் எதிர்பாக்கலை. அண்ணா சொன்னார் : "I rarely speak English; But my English is not rare..!".

Thursday, September 23, 2010

Sunday, September 12, 2010




WATCH ALL THE PHOTOS CAREFULLY








Friday, August 20, 2010

எம்.ஜி.ஆர்ருக்காக சட்டத்தை திருத்திய இந்திரா காந்தி!!!!!!!!!!!!!!!!


தற்பொழுதுதான் திரு.ரவீந்தர் எழுதிய "பொன்மனச்செம்மல் " எம்.ஜி.ஆர் நூலை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது...... திரு.ரவீந்தர் செம்மல்லோடு 35 ஆண்டு காலம் பணியாற்றியவர் .... அந்நூலில் என்னை கவர்ந்த செம்மல் வாழ்க்கை யில் நடந்த சில சுவாரசியங்களை என் பதிவுலக நண்பர்களுக்காக இங்கு எழுதுகிறேன் ... உங்களின் மேலான ஆதரவு வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன் ....


1979 ம் ஆண்டு செம்மலின் ஆட்ச்சியை கலைத்த இந்திரா காந்தி அம்மையார் , எம்.ஜி.ஆர் ருக்காக ரிசர்வ் வங்கியின் சட்டத்தையே மாற்றி அமைத்தார் என்றால் , அது செம்மல் ஒருவருக்கே சாத்தியப்படும் ...

நடப்புக்கு ஒரு உதாரணம் சொல்லுவார்கள் ..நெல்லுக்குல்தான் அரிசி.அது பிரிந்து விட்டால் ஒட்டாது. அப்படிதான் நட்பும் என்று. அதையும் முறியடித்தார் செம்மல் .இரண்டாவது முறை மக்களால் அரியணையில் அமர்ந்த பிறகு அன்னை இந்திரா , செம்மல் மீது மக்கள் வைத்திருக்கும் மதிப்பை உணர்ந்தார்.மோதல் இருந்த போதும் சஞ்சய் காந்தி இறந்த பொழுது , இரங்கல் தெரிவிக்க சென்ற செம்மலின் உன்னத குணத்தை அறிந்தார். தமிழகம் தன நட்பில் இல்லையென்றால் தென்னகமே தன்னாட்சிக்குள் இருக்கத் தகுதியில்லை என நினைத்து, செம்மலுக்கு ஒரு தாயானார் . தாய் தோழியானார் . செம்மல் சொல்லையும் கேட்டார் .

1984 ம் ஆண்டு செம்மல் வாதநோயால் பாதிக்க பட்டு இருந்தபொழுது .அன்னை இந்திரா செம்மலின் உடல் நிலை அறிந்து பறந்து வந்தார். ஒரு நாட்டுப் பிரதமர் , தான் மருத்துவமனைக்கு வந்தது பெருமையென நினைத்தார் . செம்மலின் அருகே செல்ல மருத்துவர்கள் தடை விதித்திருந்ததால் , அவர் இருக்கும் கருப்புக் கண்ணாடி அறையில் ,சிறு வெள்ளைக் கண்ணாடி வழியாக பார்த்தார் , பார்த்துவிட்டு அன்னை கேட்ட முதல் கேள்வி "இவர் எம்.ஜி.ஆரா ?" என்பதுதான்.


திருமதி ஜானகி அம்மாளுக்கு இந்திரா ஆறுதல் சொன்னார் . அமேரிக்கா போக அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருவதாக உறுதி அளித்தார் . மேலும் ரிசர்வ் வங்கியின் அன்னிய செலவாணி சட்டம் தளர்த்தப்படும், எவ்வளவு செலவானாலும் இந்த உன்னத உயிர் பிளைக்ளகட்டும் அவரது தர்மமே அவரை காக்கும் , உங்கள் & என் பிராத்தனை , வெளியே நிக்கும் லட்சோப லட்சம் மக்களின் பிராத்தனை ஒன்றாவது பலிக்காமலா போக போகிறது , என்று ஜானகியம்மாவை கட்டி பிடித்து கண்ணை துடைத்தார் அன்னை. அதன் பிறகு செம்மல் பிரச்சாரத்துக்கு செல்லாமலே முதல்வர் ஆனது தனி வரலாறு ....


இன்று வரலாற்றில் தன் பெயர் நிற்க என்ன வெல்லாமோ செய்கிறர்கள் , செம்மலின் வாழ்க்கை வரலாறை எடுக்கவும் அவரது நண்பர்கள் முனைந்தனர், ஆனால் நடந்தது ??????????

உங்கள் வாக்கு தான் என்னை உற்சாக படுத்தும் , மறக்காமல் உங்கள் வாக்கினை இட்டு செல்லுங்கள் நண்பர்களே ...........