Wednesday, June 9, 2010

குடிப்பழக்கத்தை எதிர்த்ததால் அத்தையை கொன்று சூட்கேசில் பிணத்தைஅடைத்து எரித்தேன்; கைதான மருத்துவ மாணவர் வாக்குமூலம்!!!!!!!!


போரூர் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பெண் கொலை செய்யப்பட்டு பிணம் எரிக்கப்பட்டது தெரிய வந்தது. இதற்கிடையே போரூர் ஆனந்தா குடியிருப்பில் வசித்த அப்ரூப் தாசரி (20) என்ற மருத்துவ மாணவர் போரூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், தனது அத்தையை காணவில்லை என கூறியிருந்தார். போலீசார் அத்தையின் படத்தை கேட்டனர். வீட்டிற்கு சென்று எடுத்து வருவதாக கூறி அப்ரூப் சென்று விட்டார். ஆனால் அவர் போலீஸ் நிலையத்திற்கு வர வில்லை.
இதனால் போலீசார் அவரது வீட்டிற்கு சென்று பார்த்த போது வீடு பூட்டிக் கிடந்தது. போரூர் ரவுண்டானா அருகில் போலீசார் ரோந்து சென்றபோது அப்ரூப் சிக்கினார். அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
அப்போது அப்ரூப், தனது அத்தையை கத்தியால் குத்தி கொன்று விட்டு பிணத்தை எரித்து விட்ட தகவலை தெரிவித்தார். அவர் அளித்த வாக்குமூலம் வருமாறு:-
எனது சொந்த ஊர் ஆந்திர மாநிலம் வாரங்கல் அருகில் உள்ள பாபுபள்ளி. அப்பா சீனிவாசராவ், தாய் ரேமா. 2 பேரும் டாக்டர்கள். அமெரிக்காவில் வசித்து வருகின்றனர்.
என்னையும் டாக்டருக்கு படிக்க வைக்க ஆசைப்பட்டனர். நான் சரியாக படிக்காமல் இருந்தேன். சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் என்னை சேர்த்து விட்டனர்.
போரூரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி படித்து வந்தேன். ஒழுங்காக படிக்காததால் தேர்வுகளில் தோல்வி அடைந்தேன். அதனால் என்னை கவனித்து கொள்வதற்காக ஊரில் இருந்து அத்தை தனுஜாவை (வயது 40) அனுப்பி வைத்தார்கள்.
அவர் எனக்கு சமைத்து கொடுத்து கவனித்து வந்தார். தினமும் குடித்து விட்டு வந்து அத்தையிடம் தகராறு செய்வேன். இதனால் எனது நடவடிக்கை பற்றி அப்பாவிடம் கூறினார். அப்பா என்னை போனில் திட்டினார்.
இதனால் அத்தை மீது ஆத்திரம் ஏற்பட்டது. 5-ந்தேதி இரவு வீட்டிற்கு வந்தேன். அப்போது அவர் குடித்து விட்டு வராதே என்று திட்டினார். இதனால் மேலும் ஆத்திரம் அதிகமாகியது. காய்கறி வெட்டும் கத்தியால் அத்தையின் நெஞ்சில் குத்தினேன். அவர் கீழே விழுந்து இறந்து விட்டதால் பயந்து போனேன்.
கொலையை மறைக்க திட்டம் தீட்டினேன். சிறிய சூட்கேசில் பிணத்தை வைக்க முயன்றேன்.அது முடியவில்லை. அதில் இருந்து ரத்தம் வெளியேறி கொண்டிருந்தது. அதனால் பெரிய சூட்கேசை நான் கல்லூரிக்கு சென்று எடுத்து வந்தேன்.
வரும் வழியில் ஒரு பெட்ரோல் பங்கில் டீசல் வாங்கினேன்.
வீட்டுக்கு வந்ததும் பிணம் இருந்த சிறிய சூட்கேசை பெரிய சூட்கேசில் அடைத்தேன். ஒரு கால்டாக்சியில் சூட்கேசை ஏற்றி குன்றத்தூர் சென்றேன். அங்கு டாக்சியை அனுப்பி விட்டு குப்பை கிடங்கில் சூட்கேசில் டீசல் ஊற்றி பிணத்தை எரித்து விட்டேன். கொலையை மறைக்க அத்தையை காண வில்லை என்று போலீசில் புகார் செய்தேன். ஆனால் போலீசாரின் அதிரடி விசாரணையால் மாட்டிக் கொண்டேன்.
இவ்வாறு வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
கைது செய்யப்பட்ட அப்ரூப் பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.

கருணாநிதி என்ன கடவுளா? - பழ. கருப்பையா

கருணாநிதி செம்மொழி மாநாட்டை முடித்துவிட்டு ஓய்வு பெறப் போவதாகச் சொன்னாலும் சொன்னார். அடுத்த முடிசூட்டு விழா குறித்த பரபரப்பு செய்தி நாட்டைக் கலக்கத் தொடங்கிவிட்டது. தேர்தலை முன்கூட்டியே சந்திப்பார் கருணாநிதி என்கிறார்கள். பொதுத் தேர்தல் என்பது இடைத்தேர்தல் அல்லவே.


எத்தனையோ நிலை மாற்றங்களும், அணி மாற்றங்களும் ஏற்படுவது மட்டுமன்று; கடுமையான விலைவாசி உயர்வு; நான்காண்டு காலமாக நாடு இருளில் மூழ்கிக் கிடக்கும் அவல நிலை ஆறுகளை எல்லாம் கட்டாந்தரைகளாக்கி, மலைகளை எல்லாம் தரைமட்டமாக்கி கொழுத்துவிட்ட ஓர் ஆட்சியை மக்கள் தரைமட்டமாக்க வேண்டிய தேர்தல் அது. தமிழ்நாட்டில் எம்ஜிஆர் காலமும், காங்கிரஸ் காலமும் நீங்கலாக, ஆட்சி மாறி மாறியே
அமைந்திருக்கிறது. அவ்வாறு நிகழ்ந்து இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஆளுங்கட்சித் தலைவராகும் நிலையில், "அடித்து வைத்திருப்பதைக்' காப்பாற்றிக் கொள்வதுதான் ஒவ்வொருவரின் முழுநேர வேலையாக இருக்கும். ஆட்சி கிடக்கட்டும் கட்சித் தலைமையைப் பிடித்து வைத்துக் கொள்வதற்குக் கூட முயல மாட்டார்கள்.


ஆட்சி இல்லாத கட்சியால் என்ன பயன்? இப்போதைய ஆட்சி முடிவதற்குள் மணிமுடியை மாற்றிச் சூட்டக் கருணாநிதி முன்வந்தால், அது பலத்த விளைவுகளை ஏற்படுத்திக் கட்சியைக் கடகடக்கச் செய்துவிடும். கருணாநிதி ஆட்சியைக் கைவிடுவது என்பது அவரை அறியாதவர்கள் முன்வைக்கும் வாதம். இப்போது சக்கர நாற்காலியில் சட்டமன்றம் செல்லும்
கருணாநிதி,பதவியிலிருந்து இறக்கப்பட்டால் ஒழியப் பதவியை விடுவதற்கான மனப்பழக்கம்
உடையவரில்லை. மேலும் கருணாநிதி என்ன தயரதனா?


மகனுக்கு முடிசூட்டிவிட்டுக் காட்டுக்குத் தவம் செய்யப் (வானப்பிரஸ்தம்) போகலாம் என்று கருதுவதற்கு? பிறந்திருக்கிற மக்களெல்லாம் இராமனும் பரதனுமா? ""எனக்கு வேண்டாம்; நீயே வைத்துக் கொள்'' என்று பற்றற்று உதற? வதற்கு! தனக்குப் பின்னால் யார் என்பதற்குத்தான் மகன் என்பது விடையே தவிர, தன் கண்ணோடு சாவியைக் கொடுத்துவிட்டு, மகன் வாயைப் பார்த்துக்கொண்டு, எஞ்சிய காலத்தைப் பாயில் படுத்துக் கொண்டு பழைய நினைவுகளை அசைபோடும் அளவுக்கு உலக அனுபவம் இல்லாதவரா கருணாநிதி? ஆரியர்களுக்கு நான்கு வேதங்கள் இருக்கும்போது, திராவிடர்களுக்கு ஒரு வேதமாவது வேண்டாமா என்னும் குறையைப் போக்கத்தான் முத்தமிழ் அறிஞர் கருணாநிதி பராசக்திக்கு வசனம் எழுதித் தமிழை மானக்கேட்டிலிருந்து காப்பாற்றினார் என்று கூவிக் கூவிப் பாடும் புதுக் கவிஞர்களெல்லாம், அடுத்த நொடியே அத்தாணி மண்டபங்களை மாற்றிக் கொண்டு விடுவார்கள் என்பதை அறியாதவரா என்ன? தன்னுடைய பலம் கோபாலபுரத்தில் இல்லை கோட்டையில்தான் இருக்கிறது என்பதை எல்லாரையும்விட நன்கு புரிந்தவர் கருணாநிதி.


கருணாநிதியைச் சாணக்கியர் என்று சொல்லி அவரை மகிழ்விப்பவர்கள் இருக்கிறார்கள். எதிரியின் வலிமையை தன் மன விருப்பத்திற்கேற்றவாறு மதித்து மகிழாமல், உள்ளவாறு உணர்வதுதான் சாணக்கியம். ஆனால் கருணாநிதி எம்ஜிஆரின் வலிமையை வெறுந் திரைப்படக் கவர்ச்சியினால் வந்த வலிமை என்று குறைவாக மதிப்பிட்டு, இன்னொரு மாற்று நடிகனை அவருக்கு எதிராக உருவாக்குவதன் மூலம் எம்ஜிஆரைச் சாய்த்துவிடலாம் என்று தப்பாகக் கணக்கிட்டுத் தன் மகன் மு.க. முத்துவை உருவாக்கி மோத விட்டவர். அதன் காரணமாகப் படம் தோற்றால்கூடக் குற்றமில்லை; ஆட்சியையும் அல்லவா தோற்றார் கருணாநிதி.


அதற்குப் பிறகு ஓராண்டா, ஈராண்டா? பதினான்கு ஆண்டு காலமல்லவா வனவாசம் போக நேரிட்டது. உட்கார இடமில்லாமல், மேலவைக்குப் போனார்; மேலவையும் கலைக்கப்பட்டதே. எம்ஜிஆர் வங்கக் கடலோரம் நீள்துயில் கொண்ட பிறகுதானே, மீண்டும் அரசியலையே கருணாநிதியால் நினைத்துப் பார்க்க முடிந்தது. இதுவா சாணக்கியம்? இன்றும் கருணாநிதியின் அரசு சிறுபான்மை அரசுதானே. நாதியற்றுப் போன கருணாநிதியின் அரசை
எற்றுவதற்கு எவ்வளவு நேரமாகும் காங்கிரஸிக்கு? கருணாநிதியைச் சார்ந்து இன்றைய காங்கிரஸ் அரசும் இல்லையே! இவ்வளவு அனுபவமுடைய தானே பொய்க்காலில் நிற்கும்போது, தன் மகனுக்குக் கருணாநிதி எப்படி முடிசூட்டுவார்? கருணாநிதி ஆட்சிக் காலத்தில் அவருடைய குடும்பங்கள் சொல்லொணா வகையில் செழிப்புற்றதுபோல,கட்சியும் வலிவு பெற முடிந்தது.


அதிகாரத்தை வைத்துப் பணம் திரட்டல்; பணத்தை வைத்து அதிகாரத்தைப் பெறல் என்னும் நச்சுச் சுற்று கருணாநிதியால் தமிழக அரசியலில் தோற்றுவிக்கப்பட்டது. தமிழ்நாட்டு அரசியலுக்குக் கருணாநிதி வழங்கிய கொடை இது என்று வரலாறு வரிந்து வரிந்து எழுதும்.
அவரிடமிருந்த "செல்வம்' அவருடைய குடும்பங்களுக்குள் பங்கிடப்பட்டதுபோல, அரசியல் அதிகாரமும் பங்கிடப்பட்டது. தமிழ்நாடு வடக்கு, தெற்காகப் பிரிக்கப்பட்டு இரு மகன்களும் பொறுப்பாக்கப் பெற்றனர். தமிழ்நாட்டு ஆட்சியில் ஒரு மகனும், மத்திய ஆட்சியில் இன்னொரு மகனும் அமர்த்தி வைக்கப்பட்டனர்.


மகள் மாநிலங்களவைக்கு நியமனம் பெற்றார். அண்ணா காலத்துக்குப் பிறகு இரா. செழியனை மெல்ல அகற்றிவிட்டு அந்த இடத்தில் தன்னுடைய அக்காள் மகன் முரசொலி மாறனை அமர்த்தி அமைச்சராக்கியதுபோல, மாறனின் மகன் தயாநிதி மாறனையும் தில்லியில் அமைச்சராக்கினார் கருணாநிதி. தன்னுடைய சுற்றம் முழுவதையும் கோபாலபுரத்தில் பக்கம் பக்கத்தில் குடியேற்றியதுபோல, தன்னுடைய முதல் சுற்றம், இரண்டாம் சுற்றம் என்று வரிசைப்படி அவர்களின் நிலைகளுக்கும் உறவுக்கும் தகப் பதவிகளையும் பங்கிட்டவர் கருணாநிதி. ஒரு குடும்பத்திற்குள்ளேயே அதிகார மொத்தமும் இருந்துவிட்டால், வெளிப்போட்டி இருக்காது என்பது கருணாநிதியின் எண்ணம்.


ஆனால், அதற்குப் பிறகு குடும்பத்திற்குள்ளேயே குத்து வெட்டு நடக்கும் என்பது வரலாற்றின் அடிமட்ட மாணவர்களுக்கே தெரியுமே. "உனக்கு இது, உனக்கு அது'' என்று கருணாநிதி பங்கிட்டுக் கொடுத்ததை அப்படியே ஏற்றுக்கொள்வதற்கு அதிகாரம் என்ன சோற்றுருண்டையா? ஒருவர் நான்கு உருண்டையோடு போதும் என்று எழுந்து விடுவார்; இன்னொருவருக்கு ஆறு உருண்டைகள் தேவைப்படும். வயிற்றுத் தேவையும்,
அதிகாரத் தேவையும் ஒன்றல்லவே! சொத்தைச் சமமாகப் பங்கிட முடியும்; அதிகாரத்தைச் சமமாய்ப் பங்கிட முடியுமா என்ன? இருப்பது ஒரு முதலமைச்சர் நாற்காலிதானே?


இரண்டு பேரின் குறியும் ஒன்றின்மீதுதான் என்றால் எப்படிச் சிக்கறுக்க முடியும்? கருணாநிதி பல மோசமான அரசியல் செல்நெறிகளை உண்டாக்கியதுபோல, அழகிரி "திருமங்கலம் சூத்திரம்' என்னும் புதிய செல்நெறியை உண்டாக்கவில்லையா? அழகிரிக்கு ஆங்கிலம் தெரியாது; அது ஒரு குற்றமா? கருணாநிதி குடும்பத்தில் யாருக்கு ஆங்கிலம் தெரியும்? மேலும் இந்தியா என்ன இங்கிலாந்தா? பத்தாண்டு காலமாகப் பாரதிய ஜனதாவும், காங்கிரஸýம் கருணாநிதியின் தயவால் ஆட்சியில் இருந்தும், கண்ணையே திறக்காமல் ஓராண்டுக் காலம் படுத்த படுக்கையாக இருந்த முரசொலி மாறனை துறை இல்லாத அமைச்சராக வைத்துக் கொள்ளத் தேவையில்லாமல் தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்திய கருணாநிதி, இந்திய மொழிகளை எல்லாம் ஆட்சி மொழிகளாக்க தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்தியதுண்டா?


அப்படிச் செய்திருந்தால் தமிழுக்கு மட்டுமா வாழ்வு வந்திருக்கும்? அழகிரிக்குமல்லவா வந்திருக்கும்! "கருணாநிதியைத் தவிர யாரையும் தலைவராக ஏற்க மாட்டேன்' என்று அழகிரி சொன்னதன் பொருள், "நீ விலகி நில் நான் பார்த்துக் கொள்கிறேன்' என்பதுதான்!
கி.பி. 2000-ல் அழகிரியைத் தி.மு.க.வை விட்டு விலக்கி வைத்து அறிக்கை வெளியிட்டார்
பொதுச் செயலர் அன்பழகன். விவரம் தெரிந்த அழகிரி, அன்பழகனின் மீது கோபம் கொள்ளவில்லை. தன்னுடைய நீக்கத்துக்குப் பின்னணியில் இருந்த தன் தகப்பனார் கருணாநிதியோடேயே மோதிப் பார்த்தவர் அழகிரி. தி.மு.க.வுக்கு எதிராக 2001-ல் போட்டி வேட்பாளர்களை நிறுத்திப் பணமும் செலவழித்துக் கலங்க அடித்தவர் அழகிரி.


கட்சிக்கு ஏற்பட்ட சேதத்துக்கு அஞ்சி அழகிரியிடம் சமாதானத்தை விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானார் கருணாநிதி. இதுதான் இன்றைக்கும் அழகிரியின் நிலைப்பாடு. மரியாதையைக் காப்பாற்றிக் கொள்வது கருணாநிதியின் பாடு. இது விசுவாசமற்ற நிலை இல்லையா என்று கேட்டால், அதிகாரத்துக்கான போட்டியில் விசுவாசம் என்ன
விசுவாசம்? மத்திய அமைச்சர் பதவியில் இருக்க விருப்பமில்லை அழகிரிக்கு. தலைவராகலாம் என்று நினைக்கிறார். அதற்குள் திமுக ஒரு ஜனநாயகக் கட்சி; கட்சிதான் முடிவு செய்ய வேண்டும் என்று யாருக்குச் சொல்கிறார் கருணாநிதி? திமுக என்ன சங்கர மடமா? என்பது கருணாநிதியின் புகழ் பெற்ற சொல்லாட்சி! சங்கர மடத்தில் நியமனம் பெற ஒருவர் ஸ்மார்த்த பிராமணராக இருக்க வேண்டும்.


திமுகவில் நியமனம் பெற கருணாநிதியின் குடும்பத்தவராக இருக்க வேண்டும். என்ன வேறுபாடு? நினைத்தாலும் வீரபாண்டி ஆறுமுகம் ஆக முடியுமா? "அப்படியானால் தேர்தல் நடக்கட்டும்; தலைவரைக் கட்சி முடிவு செய்யட்டும்' என்று வெளிப்படையாக
அந்த அறைகூவலை அழகிரி ஏற்றுக் கொண்டு விட்டாரே! "நீயாக ஏன் முடிவு செய்கிறாய்? குடும்பத்திற்குள்ளாவது ஜனநாயகம் வேண்டும்' என்பது அழகிரியின் கூக்குரல்.
""என் மக்கள் இருவருக்கும் இடையே மோதல் என்றால் என் இதயத்தில் ரத்தம் வடியும்'' என்று எதற்குப் புலம்புகிறார் கருணாநிதி? யார் தோற்றாலும் யார் வென்றாலும் கோபாலபுரத்துக்கு அது மொத்தத்தில் வெற்றிதானே! 1961-ல் சம்பத், 1972-ல் எம்ஜிஆர், நெருக்கடிநிலை காலத்தில் நெடுஞ்செழியன், ஈழப் போரின்போது வைகோ என்று ஒவ்வொருவரையாக வெளியேற்றிக் கட்சியைக் குடும்பச் சொத்தாக மாற்றிவிட்ட பிறகு, குடும்பத்திற்குள்ளே ஜனநாயகம் வேண்டும் என்று அழகிரி கோருவது அதிசயமானது என்றாலும் நியாயமானதுதானே!
முதல்வருக்கான போட்டி நடக்கப் போவதில்லை; கருணாநிதி நாற்காலியை விட்டு இறங்கப் போவதில்லை.


அப்படி ஒருவேளை நடக்கும் என்று கொண்டால், அது கருணாநிதி நினைப்பதுபோல் இருமுனைப் போட்டியாக இருக்காது; மும்முனைப் போட்டியாகவே இருக்கும்.
தயாநிதி மாறன் திமுககாரராகவே, நேரே முகங்காட்டாத காங்கிரஸôல் களமிறக்கப்படுவார்.
தயாநிதியிடம் இல்லாத பணமா? ஒவ்வொரு திமுக சட்டமன்ற உறுப்பினரும் "போதும்; போதும்' என்னும் அளவுக்குப் பணத்தால் அடிக்கப்படுவார்கள். காங்கிரஸின் தயவில்லாமல் கருணாநிதியே ஆட்சியில் இருக்க முடியாதே! கருணாநிதியின் மகன்களால் எப்படி முடியும்? திமுகவின் சார்பாக சிறுபொழுதுக்கு யார் ஆள்வது என்பதைக் காங்கிரஸ் தீர்மானிக்கும்.


தீர்மானிக்கும் சக்தி மாறுவதோடு திமுக வரலாறு முடியும்! தோன்றியவை எல்லாம் அழிந்தே தீரும்என்பது இயற்கை விதி!


அப்படியல்லாமல் நீருள்ள அளவும், நிலமுள்ள அளவும், காருள்ள அளவும், கடலுள்ள அளவும் நானே எல்லாவற்றையும் தீர்மானிக்கும் சக்தியாக இருப்பேன் என்று சொல்வதற்குக் கருணாநிதி என்ன கடவுளா?


"ஓடாத மானும், போராடாத மனித இனமும் வென்றதாக வராலாறு இல்லை" - புதுவை இரத்தினதுரை

Tuesday, June 8, 2010

பார்ப்பன ஞாநியின் சிங்கள பாசம் !!!!!!!!

நாம எவ்வளவுதான் அம்பலப்படுத்தினாலும் முற்போக்கு முகமூடிக்குள் ஒளிந்திருக்கும் பார்ப்பன ஞாநி தன்னோட திரிப்பு வேலையை நிறுத்துற மாதிரி தெரியல. வழமை போல தனது “ஓ”ட்டை பக்கத்தில் பார்பன வன்மத்தை அள்ளித்தெளித்திருக்கிறார் பார்பன ஞாநி. இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா கொழும்பில நடைபெறுவதை கண்டித்து பல்வேறு உணர்வாளர்களும் போராடி, விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்வது தமிழர்களின் உள்ளங்களை புண்படுத்தும் என்ற எண்ணத்தை அழுத்தமாக பதிவு செய்திருக்கின்றனர். முன்னர் கலந்து கொள்வதாக கூறிய முன்னணி திரைக்கலைஞர்கள் தமிழர்களின் உணர்வுகளை மதித்து நிகழ்வை புறக்கணித்து இருக்கின்றனர் என்ற செய்தி நம்மை வந்தடைவதற்கு முன்னர் பார்ப்பன ஞாநியின் வன்மம் நிறைந்த கட்டுரையை நாம் வாசிக்க வேண்டியிருக்கிறது. ஞாநி எழுத்துக்களில் நேர்மையை எதிபார்ப்பது கூட ஒருவகையில் மூட நம்பிக்கைதான் போலும் .


இந்த வார குமுதம் இதழில் சங்கரனின் பார்ப்பன மனசாட்சி வெளிப்படையாக சிங்கள பேரினவாதத்திற்க்கு வருவாய் இழப்பு ஏற்படலாமா? என்று வருந்தியிருக்கின்றது. இந்திய திரைக்கலைஞர்கள் சில அமைப்புகளின் போராட்டங்களைக் கண்டு நிகழ்வை புறக்கணித்தது சரியல்ல என்று மனம் குமுறியிருக்கின்றார். ஈழம் என்றாலே அரைவேக்காடுத் தனமான கருத்துகளை வெளியிடுவது ஞாநியின் வழக்கம்.


முன்னர் “ஓ”ட்டைப் பக்கங்களில் ஈழப்பிரச்சனை குறித்து எழுதும் போது மலையக தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்ட போது ஈழத் தமிழர்கள் கண்டுகொள்ள வில்லை என முட்டாள் தனமாக உளறியவர் தான் ஞாநி.மலையகத் தமிழர்களின் குடியுரிமையை சிங்கள பேரினவாதம் பறித்த போது க‌ண்டிக்காத‌ த‌மிழ்த் தேசிய‌ காங்கிர‌சை விட்டு வெளியேறி த‌மிழ‌ர‌சு க‌ட்சியை த‌ந்தை செல்வா உருவாக்கினார் என்ப‌து கூட‌ தெரியாம‌ல் உள‌றிய‌த‌ன் மூல‌ம் ஈழ‌ வ‌ர‌லாற்றின் அரிச்சுவ‌டி கூட‌த் தெரியாத‌வ‌ன் தான் என்ப‌தை த‌ன் எழுத்துக‌ள் மூல‌ம் அம்ப‌ல‌ப‌டுத்திக் கொண்ட‌வ‌ர் தான் ஞாநி.
ஏதோ இந்திய‌ திரைப்ப‌ட‌க்க‌லைஞ‌ர்க‌ள் இல‌ங்கைக்கு சென்று அங்குள்ள‌ சிங்க‌ள‌வ‌ர்க‌ளையும் த‌மிழ‌ர்க‌ளையும் ஒருங்கிணைத்து அப்ப‌டியே இந்தியாவிற்க்கும் இல‌ங்கைக்கும் ந‌ல்லுற‌வை பேண‌ப் போவ‌து போல‌வும், இது பொறுக்காம‌ல் த‌மிழ் உண‌ர்வாள‌ர்க‌ள் பிர‌ச்ச‌னை செய்துவிட்டார்க‌ள் என்ப‌து போல‌ க‌தை க‌ட்டுகிறார் ஞாநி. IIFAவின் நோக்க‌ம் என்ன‌வென்று எல்லோருக்கும் தெரியும். உலக மனித உரிமை அமைப்புகள் இலங்கையின் போர் குற்றத்தை உலகுக்கு அம்பல படுத்துகின்ற இந்த நேரத்தில், இந்த‌ நிக‌ழ்வு மூல‌ம் இல‌ங்கையில் மக்கள் மகிழ்வுடன் இருப்பது போலும், இலங்கை ம‌னித‌ உரிமை பேணும் நாடு போன்று ஒரு மாயையை உல‌க‌ நாடுக‌ளுக்கு பிரக‌ட‌ன‌ ப‌டுத்துவ‌தே இத‌ன் உள்நோக்க‌ம்.திரைக்க‌லைஞ‌ர்க‌ள் ஆபாச‌ ந‌ட‌ன‌ங்க‌ள் மூல‌மும், 20க்கு 20 கிரிக்கெட் போட்டியின் மூல‌மும் க‌லை வ‌ள‌ர்ப்ப‌தை த‌டுக்க‌லாமா? என்று ரொம்ப‌வே கோப‌ப்ப‌டுகின்றார் ஞாநி.


த‌மிழ‌ர்க‌ள் இன்ன‌மும் முகாம்களில் அடைக்கப்பட்டு வாழ‌ வ‌ழி இல்லாத‌ ஒரு ம‌ண்ணில், இர‌த்த‌ம் சிந்திக்கொண்டிருக்கும் ஒரு ம‌ண்ணில் கேளிக்கை விழாவா? என்று மே 17 இய‌க்க‌ம்,நாம் தமிழர் இயக்கம், சேவ் த‌மிழ் இய‌க்க‌ம், பெரியார் திராவிட கழகமும் மற்றும் ப‌ல‌ இய‌க்க‌ங்க‌ளும், க‌விஞ‌ர். தாம‌ரை , சீமான், இய‌க்குந‌ர். இராம் போன்ற‌ த‌மிழ் க‌லைஞ‌ர்க‌ளும் முன்னெடுத்த‌ போராட்ட‌ங்க‌ளை போகிற‌ போக்கில் ச‌க‌தி வாரி இரைத்திருக்கின்றார் பார்ப்ப‌ன‌ ச‌ங்க‌ர‌ன்.


த‌மிழ் உண‌ர்வாள‌ர்க‌ள் ப‌டைப்பாளிக‌ளாக‌ சாதித்த‌து என்ன‌ என்ற‌ கேள்வி மூல‌ம் ப‌டைப்புல‌கில் உள்ள‌ க‌விஞ‌ர். தாம‌ரை நோக்கி கேள்வியை வைக்கின்றார். சிங்க‌ள‌ பேரின‌வாத‌ம் த‌மிழ‌ர்க‌ளை கொன்ற‌ழித்த‌து க‌ண்டு ம‌ன‌ம் வெதும்பிய‌தால் தன்னால் முன்பு போல‌ க‌விதைக‌ளை ப‌டைக்க‌முடிய‌வில்லை என்று க‌விஞ‌ர். தாம‌ரை ப‌ல‌ இட‌ங்க‌ளில் ப‌திவு செய்துள்ளார். மேலும் த‌மிழ‌ர்க‌ளின் இத‌ய‌ங்க‌ளில் நீங்காத‌ இட‌ம் பிடித்து விட்ட‌ “க‌ண்ண‌கி ம‌ண்ணிலிருந்து ஒரு க‌ருஞ்சாப‌ம்” என்ற‌ க‌விதையினை எழுதிய‌வ‌ர் க‌விஞ‌ர்.தாம‌ரை என்ப‌து பார்ப்ப‌ன‌ ச‌ங்க‌ர‌னுக்கு தெரியாம‌ல் போன‌து விய‌ப்ப‌ல்ல‌.

த‌மிழ் உண‌ர்வாள‌ர்க‌ளை நோக்கி கேள்வி எழுப்பும் பார்ப்ப‌ன‌ ச‌ங்க‌ரா. சிங்க‌ள‌ ப‌த்திரிகையாள‌ரான‌ இல‌ச‌ந்த‌ விக்க‌ர‌ம‌துங்கா சிங்க‌ள‌ பேரின‌வாத‌த்தின் கோர‌ முத‌த்தை அம்ப‌ல‌ ப‌டுத்தி ம‌ர‌ண‌த்தை ப‌ரிசாக‌ பெற்ற‌ போது நீ என்ன‌ எழுதினாய் என்று நினைவிருக்கின்றதா. திசைநாய‌க‌த்திற்க்கு இருப‌து ஆண்டு க‌டுங்காவ‌ல் த‌ண்ட‌னை விதிக்க‌ப்ப‌ட்ட‌ போது க‌ந்த‌சாமி ப‌ட‌க்குழுவின‌ரோடு க‌தா கால‌ச்சேப‌ம் ந‌ட‌த்திக் கொண்டிருந்த‌வ‌ன் நீ என்ப‌தை ம‌ற‌ந்து விட்டாயா?. சிங்க‌ள‌ இய‌க்குந‌ர் ச‌ட்டை கிழிந்தால் “நீதி செத்துருச்சு” என்று சொம்பு தூக்கும் நீ, சிங்க‌ள‌ காடைய‌ன் செத்து விழுந்த போராளி பெண்ணின் ஆடைகிழித்து மிருக‌ம் கூட‌ செய்ய‌த்துணியாத‌ காரிய‌த்தை நிக‌ழ்த்திய‌ பொழுது சொம்போடு காணாம‌ல் போன‌ ம‌ர்ம‌மென்ன‌?


த‌மிழ் ப‌டைப்பாளிக‌ளை சிங்க‌ள‌ ப‌டைப்பாளிக‌ளுட‌ன் ஒப்பிடுவ‌த‌ற்கு முன் இல‌ச‌ந்தா, திசைநாய‌க‌த்துட‌ன் உன்னை ஒப்பிட்டு உன‌து ம‌ன‌சாட்சியை வெளிப்ப‌டையாக‌ பேச‌ச் சொல். இல‌ச‌ந்தா, திசைநாய‌க‌ம் போன்ற‌ ப‌த்திரிகையாள‌ர்க‌ளுட‌ன் ஒப்பிடும் அள‌விற்க்கு நீ என்ன‌ கிழித்திருக்கின்றாய்? என்றும் உன் ம‌ன‌சாட்சியை நீயே கேள். இறுதி க‌ட்ட‌ போரின் போது த‌மிழ‌க‌ அர‌சும், த‌மிழ‌க‌ முத‌ல்வ‌ரும் புரிந்த‌ துரோக‌த்தை பேசுவ‌த‌ற்கு முன் அத‌ற்கான‌ த‌குதி உன‌க்கு இருகின்றதா பார்ப்ப‌ன‌ ச‌ங்க‌ரா? க‌ருணாநிதி ஆட்சியில் இருந்து துரோக‌ம் செய்த‌ பொழுது ப‌டைப்புல‌கில் ஈழ‌ப் போராட்ட‌த்திற்க்கு எதிராக‌ எழுத்துக‌ள் மூல‌ம் துரோக‌ம் செய்த‌வ‌ன் நீ என்ப‌தை த‌மிழ‌ன் இன்னும் ம‌ற‌க்க‌வில்லை!

Monday, June 7, 2010

ஓட்டல்களில் ௨௦ ரூபாய் சாப்பாடு எங்கே? ஜெயலலிதா கேள்வி???????

அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பூந்தமல்லி அருகே ஒரு ரவுடி மர்ம கும்பலால் வெட்டிக்கொலை, திருச்சி பஞ்சாயத்து கவுன்சில் கூட்டத்தில் எதிர்க்கட்சியினர் மீது திமுக கவுன்சிலர்கள் கொலை வெறித் தாக்குதல், சென்னை மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர் வெட்டிக்கொலை, ஓய்வுபெற்ற காவல்துறை சார் ஆய்வர் பட்டப்பகலில் வெட்டிக் கொலை, ஜாமீனில் வெளிவந்த இருவர் ஒசூர் அருகே வெட்டிக்கொலை, புளியந்தோப்பில் ரவுடி வெட்டிப்படுகொலை, ஏ.டி.எம். மையகாவலாளி படுகொலை, சைதாப்பேட்டையில் ரவுடி கழுத்தறுத்து கொலை என அடுக்கிக் கொண்டே போகும் அளவுக்கு கடந்த நான்கு நாட்களில் மட்டும் பல்வேறு கொலைகள் நடைபெற்று இருக்கின்றன. காவல் துறையினர் ரவுடிகளை பார்த்து அஞ்சி நடுங்குகின்றனர்.

தமிழக மக்களின் முக்கிய பிரச்சினையாக விஸ்வரூபம் எடுத்திருப்பது விண்ணை முட்டும் விலைவாசி. அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மட்டுமல்லாமல், நோட்டுப் புத்தகங்கள், காய் கனிகள், நூல், பால் மற்றும் பால் பொருட்கள் என அனைத்துப் பொருட்களின் விலையும் விஷம் போல் உயர்ந்து கொண்டே செல்கின்றன. ஒரு கிலோ கொத்தமல்லி கட்டு 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. விலைவாசி ஏறுவதற்கு முக்கிய காரணமே பதுக்கல் தொழிலையும், கடத்தல் தொழிலையும் ஊக்குவிப்பதால் தான் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். 20 ரூபாய்க்கு உணவகங்களில் சாப்பாடு போடப்படும் என சென்ற ஆண்டு தி.மு.க. அரசால் அறிவிக்கப்பட்டது என்ன ஆயிற்று என்பதை கருணாநிதியால் விளக்க முடியுமா?

தமிழகத்தில் எந்தக் காலத்திலும் இல்லாத அளவுக்கு மின்வெட்டு ஏற்பட்டிருக்கிறது. இதன் விளைவாக தொழில் உற்பத்தியும், வேளாண் உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டு தொழிலாளர்களுக்கு வேலையிழப்பும், ஊதிய இழப்பும் ஏற்பட்டுள்ளது. நிலக்கரியின் விலை உயர இருப்பதாக செய்தி வந்துள்ளது பற்றியும், தமிழ்நாடு மின்சார வாரியம் காற்றாலைகளிடமிருந்து மின்சாரத்தை பெறுவதில் சுணக்கம் காட்டி வருவதாக வந்துள்ள செய்தி குறித்தும், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் 12 மணி நேர மின்வெட்டு நிலவுவது பற்றியும் கருணாநிதிக்கு தெரியுமா?

என்மீது புனையப்பட்டுள்ள பொய் வழக்குகள் குறித்து அறிக்கைகள் விடுவதில் நேரத்தை வீணடிக்காமல், தமிழக மக்களின் முக்கியப்பிரச்சினைகளான சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு, விலைவாசி உயர்வு, மின்வெட்டு, குடிநீர்ப் பிரச்சினை, தொழில் உற்பத்தி குறைவு, விவசாய உற்பத்தி பாதிப்பு, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றில் கவனம் செலுத்தினால் அது தமிழக மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Sunday, June 6, 2010

தமிழர் பிரச்சனை தீரும் வரை அவமானம் தொடரும்!-சிங்கள பெண் எம்பி !!!!!!!!!!!!!

கொழும்பு: வதை முகாம்களில் உள்ள தமிழ் மக்களை மீளக்குடியேற்றி, நியாயமான அரசியல் தீர்வை வழங்காவிட்டால் சர்வதேசத்தின் முன் தொடர்ந்து தலைகுனிவுக்குள்ளாவதை இலங்கை தவிர்க்க முடியாது. ஐஃபா விழாவில் நடந்துள்ள அவமானம் தொடரும் என்று இலங்கை ஐக்கிய தேசிய கட்சியின் சிங்கள பெண் எம்பி ரோஸி சேனநாயக்க கூறியுள்ளார்.


மேலும் அமிதாப் பச்சன் இல்லாத ஐஃபா விழா, மணமகன் இல்லாத திருமணத்துக்குச் சமமாகிவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.


கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பங்கேற்ற ரோஸி கூறியதாவது:


போரினால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்து வாழும் மக்களை மீளக்குடியேற்றி விட்டதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே வெளிநாட்டு ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். இது அப்பட்டமான பொய்.


உண்மையில், மூன்றில் இரண்டு பெரும்பான்மையான மக்கள் இன்றும் அகதி முகாம்களில் எதுவிதமான வசதிகளுமின்றி வாழ்கின்றனர். மக்களை மீளக் குடியேற்றியதாக அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் அம் மக்கள் இன்றும் தகரக் கொட்டகைகளில் மிருகங்களைப் போல் வாழ்கின்றனர்.


உண்ண உணவில்லை, வாழ்வதற்கு வழியில்லாது, தொழில் இல்லாது பிள்ளைகளுக்கு கல்வி இல்லாது, அடிப்படை வசதிகளின்றி பரிதாபமான நிலையில் உள்ளனர்.


மறுபுறம் யுத்தம் முடிந்து ஒரு வருடம் கழிந்தபோதும் இதுவரையில் தமிழ் மக்களுக்கு வழங்கப்போகும் அரசியல் தீர்வு என்னவென்பதை மகிந்த அரசாங்கம் முன்வைக்கவில்லை.


இந்த சூழலில் சர்வதேச ரீதியாக புகழ்பெற்ற ஐஃபா திரைப்பட விழா இலங்கையில் நடைபெறுகிறது. இது இலங்கைக்கு கௌரவம்தான்.


ஆனால் தமிழ் மக்களுக்கு எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் தென்னிந்தியா உட்பட சர்வதேச நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் இவ் விழாவில் நடிகர்கள் கலந்து கொள்ளக்கூடாது என கடும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள்.


இதன் மூலம் இலங்கைக்கு களங்கமும் அவமானமும் ஏற்பட்டுள்ளது. இதற்கான முழுப்பொறுப்பும் மகிந்த அரசாங்கத்தையே சேரும்.


ஐஃபா சினிமா விழாவின் தூதுவரும் ஏற்பாட்டாளருமான அமிர்தாப்பச்சன், அபிஷேக் பச்சன், உலகப் புகழ் பெற்ற நடிகை ஐஸ்வர்யா ராய் உட்பட தென்னிந்திய புகழ் நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், இயக்குநர் மணிரத்னம் போன்ற முக்கிய பிரமுகர்கள், புகழ் பெற்றவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளனர். இலங்கை அரசாங்கம் சார்பில் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டும் அதை வாங்கவே மறுத்திருக்கிறார் ரஜினிகாந்த்.


தென்னிந்தியாவிலும் சர்வதேச ரீதியிலும் இலங்கை அரசுக்கு எதிராக எழுந்துள்ள எதிர்ப்பு நிலைதான் இதற்குக் காரணம். இதன் மூலம் தமிழ் மக்களுக்கு இலங்கை எந்த நியாயத்தையும் வழங்கவில்லையென்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


யுத்தத்தில் வெற்றி பெற்று பயங்கரவாதத்தை ஒழித்து ஒரு வருடம் கழிந்த போதும் இனப் பிரச்சினைக்கு தீர்வை அரசாங்கம் வழங்கவில்லை.


வெறுமனே அரசியலமைப்பு திருத்தம், ஆசியாவில் ஆச்சர்யமிக்க நாடாக மாற்றுவோம் என அரசு தரப்புில் வாய் கிழிய கூறித் திரிகிறார்களே தவிர தமிழ் மக்களுக்கு அதிகாரப் பரவலாக்கலை வழங்குவதற்கான அறிகுறியே இல்லை.


இப்படியொரு சூழலில் இந்தியாவிலும் உலகிலும் அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ச்சிகள் தொடர்ந்த வண்ணமே இருக்கும். இலங்கைக்கு அவமானங்களும் தொடரவே செய்யும்.


ஐஃபா சினிமா விழா என்பது உலகப் புகழ் பெற்றது. ஆசியாவின் ஆஸ்கர் என வர்ணிக்கப்படுவது. சர்வதேச திரைத்துறையில் மூன்றில் இரண்டு பங்குடன் பெரும் ஜாம்பவானாகத் திகழும் இந்திய திரைத்துறை வேறு நாடுகளில் இதனை நடத்துவது அந்த நாட்டுக்கு கௌரவத்தையும் புகழையும் பெற்றுக் கொடுக்கும்.


ஆனால் இலங்கை அரசாங்கத்தின் பிழையான செயற்பாடுகளால் கௌரவத்துக்குப் பதில் அவமானமே மிஞ்சியுள்ளது.


அரசாங்கம் தமிழ் மக்களுக்கு சம அந்தஸ்து, அதிகாரப் பரவலாக்கல், இனத்துவ கௌரவத்தை வழங்கும் அரசியல் தீர்வை உடனே அறிவிக்க வேண்டும். அதைவிடுத்து தமிழ் மக்களை ஓரம் கட்டும் நடவடிக்கைகளை தொடர்ந்தால் உலக நாடுகளிலிருந்து நாம் தனிமைப்படுத்தப்படுவோம்," என்றார்.

தமிழரை ஒழித்துக்கட்டிய கருணாநிதி!: டி.ஆர் தாக்கு

தமிழின கூட்டமைப்பு 'தமிழர் மீட்சி மாநாட்டை' விரைவில் நடத்தவிருக்கிறது.

இம்மாநாடு குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் டி.ராஜேந்திரன் பேசுகையில் முதல்வர் கருணாநிதி மற்றும்செம்மொழி மாநாட்டை தாக்கி பேசினார்.

அவர் பேசியதாவது:

'தமிழர் மீட்சி மாநாடு என்று சொன்னால்... இன்று செம்மொழி மாநாடு நடக்கவிருக்கிறது. அது செம்மொழி மாநாடு அல்ல. அது ஒரு ஆட்சி மாநாடு. ஆளும் தமிழரின் மாநாடு. ஆனா இவர்கள் இலங்கைத் தமிழர் விஷயத்தில் என்ன செய்தார்கள்?


தெலுங்கானா என்றால் இந்தியா அதிர்கிறது. கர்நாடகத்தில் தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் தரமாட்டோம் என்று அனைத்துக் கட்சிகளையும் அழைத்தால் அனைத்துக் கட்சியும் அங்கே வரணும். அப்படி வரவில்லையென்றால் அந்தக் கட்சி அங்கே கட்சியாகவே இருக்க முடியாது. அந்த கன்னட மொழி உணர்வினை நான் மதிக்கிறேன். தமிழ் இந்தி தெலுங்கு படங்களை கன்னடத்தில் டப்பிங் செய்து கர்நாடகத்தில் திரையிட முடியாது.


ஆனால் இங்கே என்ன வாழுது? இலங்கையில் தமிழர்கள் செத்தார்கள். ஒரே நாளில் 40 ஆயிரம் தமிழர்கள் சாகடிக்கப்பட்டார்கள். இங்கே இருக்கிற 6.5 தமிழர்கள் என்ன பண்ணாங்க? இதைவிட பெரிய இழிநிலை வேண்டுமா?


கருணாநிதியின் பிறந்தநாளுக்கு கூட நான் போகாமல் வெளியே நிற்கிறேன். காரணம் நான் கொள்கை பரப்பாளராக இருந்த இடத்தில் குஷ்பு வந்திருக்காங்க. கருணாநிதியை என் தலைவராக நான் போற்றிய போது அவர் தமிழ்மொழியைச் சுமந்துகொண்டிருந்தார். இப்போதோ அவர் இலங்கைத் தமிழனை ஒழித்துக் கட்டிய பழியைச் சுமக்கிறார்.


மாவீரனை பெற்ற தாயை தமிழ்நாட்டில் சிகிச்சை பெற வைப்பதில் கூட இவர் தேடியது விளம்பரம்தான். இலவச போதைக்கு அடிமையாகி தமிழன் காணாமல் போகிறான். தமிழன் தன்னுடைய மரபியலை மறந்துவிட்டான். கலாச்சாரத்தை விட்டுவிட்டான்' என்று பேசினார்.

--