Wednesday, June 9, 2010

குடிப்பழக்கத்தை எதிர்த்ததால் அத்தையை கொன்று சூட்கேசில் பிணத்தைஅடைத்து எரித்தேன்; கைதான மருத்துவ மாணவர் வாக்குமூலம்!!!!!!!!


போரூர் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பெண் கொலை செய்யப்பட்டு பிணம் எரிக்கப்பட்டது தெரிய வந்தது. இதற்கிடையே போரூர் ஆனந்தா குடியிருப்பில் வசித்த அப்ரூப் தாசரி (20) என்ற மருத்துவ மாணவர் போரூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், தனது அத்தையை காணவில்லை என கூறியிருந்தார். போலீசார் அத்தையின் படத்தை கேட்டனர். வீட்டிற்கு சென்று எடுத்து வருவதாக கூறி அப்ரூப் சென்று விட்டார். ஆனால் அவர் போலீஸ் நிலையத்திற்கு வர வில்லை.
இதனால் போலீசார் அவரது வீட்டிற்கு சென்று பார்த்த போது வீடு பூட்டிக் கிடந்தது. போரூர் ரவுண்டானா அருகில் போலீசார் ரோந்து சென்றபோது அப்ரூப் சிக்கினார். அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
அப்போது அப்ரூப், தனது அத்தையை கத்தியால் குத்தி கொன்று விட்டு பிணத்தை எரித்து விட்ட தகவலை தெரிவித்தார். அவர் அளித்த வாக்குமூலம் வருமாறு:-
எனது சொந்த ஊர் ஆந்திர மாநிலம் வாரங்கல் அருகில் உள்ள பாபுபள்ளி. அப்பா சீனிவாசராவ், தாய் ரேமா. 2 பேரும் டாக்டர்கள். அமெரிக்காவில் வசித்து வருகின்றனர்.
என்னையும் டாக்டருக்கு படிக்க வைக்க ஆசைப்பட்டனர். நான் சரியாக படிக்காமல் இருந்தேன். சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் என்னை சேர்த்து விட்டனர்.
போரூரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி படித்து வந்தேன். ஒழுங்காக படிக்காததால் தேர்வுகளில் தோல்வி அடைந்தேன். அதனால் என்னை கவனித்து கொள்வதற்காக ஊரில் இருந்து அத்தை தனுஜாவை (வயது 40) அனுப்பி வைத்தார்கள்.
அவர் எனக்கு சமைத்து கொடுத்து கவனித்து வந்தார். தினமும் குடித்து விட்டு வந்து அத்தையிடம் தகராறு செய்வேன். இதனால் எனது நடவடிக்கை பற்றி அப்பாவிடம் கூறினார். அப்பா என்னை போனில் திட்டினார்.
இதனால் அத்தை மீது ஆத்திரம் ஏற்பட்டது. 5-ந்தேதி இரவு வீட்டிற்கு வந்தேன். அப்போது அவர் குடித்து விட்டு வராதே என்று திட்டினார். இதனால் மேலும் ஆத்திரம் அதிகமாகியது. காய்கறி வெட்டும் கத்தியால் அத்தையின் நெஞ்சில் குத்தினேன். அவர் கீழே விழுந்து இறந்து விட்டதால் பயந்து போனேன்.
கொலையை மறைக்க திட்டம் தீட்டினேன். சிறிய சூட்கேசில் பிணத்தை வைக்க முயன்றேன்.அது முடியவில்லை. அதில் இருந்து ரத்தம் வெளியேறி கொண்டிருந்தது. அதனால் பெரிய சூட்கேசை நான் கல்லூரிக்கு சென்று எடுத்து வந்தேன்.
வரும் வழியில் ஒரு பெட்ரோல் பங்கில் டீசல் வாங்கினேன்.
வீட்டுக்கு வந்ததும் பிணம் இருந்த சிறிய சூட்கேசை பெரிய சூட்கேசில் அடைத்தேன். ஒரு கால்டாக்சியில் சூட்கேசை ஏற்றி குன்றத்தூர் சென்றேன். அங்கு டாக்சியை அனுப்பி விட்டு குப்பை கிடங்கில் சூட்கேசில் டீசல் ஊற்றி பிணத்தை எரித்து விட்டேன். கொலையை மறைக்க அத்தையை காண வில்லை என்று போலீசில் புகார் செய்தேன். ஆனால் போலீசாரின் அதிரடி விசாரணையால் மாட்டிக் கொண்டேன்.
இவ்வாறு வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
கைது செய்யப்பட்ட அப்ரூப் பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.

2 comments:

  1. கொடுமை...

    உங்களுக்கு ஒட்டு போட்டாச்சு என் பதிவு தமிளிஷ்யில் வெளியாகி உள்ளது. எனக்கும் ஒரு ஒட்டு போடுங்க...
    http://rkguru.blogspot.com/2010/06/blog-post_08.html

    ReplyDelete
  2. வலையுலகின் இன்றைய டாப் ட்வென்டி பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்

    ReplyDelete