Saturday, June 5, 2010

ஐந்து தலைநாகம் அறிய புகைப்படம்!!!!!!!!!!!!

unbilivable

Thursday, June 3, 2010


மும்பை நாம் தமிழர் இயக்கம் சார்பில் இபா விருது வழங்கும் நிகழ்விற்காக இலங்கை செல்லும் இந்தி திரைத்துரையினரை கண்டித்து நேற்று (01-06-10) ௦மும்பை ஆசாத் மைதானத்தில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் மும்பையை சேர்ந்த இருநூறுக்கும் மேற்பட்ட உணர்வுள்ள தமிழர்கள் கலந்துகொண்டனர். இந்த போராட்டத்தில் மகாராஷ்டிர மாநில ரஜினிகாந்த் ரசிகர் மன்றமும் இன்னும் பிற அமைப்புகளும் இணைந்து செயல்பட்டது.
மகாராஷ்டிர மாநில ரஜினிகாந்த் ரசிகர் மன்ற தலைவர் ஆதிமூலம், நாம் தமிழர் இயக்கத்தின் மாநில தலைவர் சேலம் செல்லதுரை, மாநில செயலாளர் ராஜேந்திரன், மாநில அமைப்பாளர் கணேசன், பெரியார் திராவிட கழகத்தை சேர்ந்த சித்தார்த்தன், மும்பை ப.ஜா.க தலைவர் கேப்டன் தமிழ்செல்வன் ஆகியோர் முன்னின்று நடத்தினர்.




உண்ணாவிரதத்தின்
இறுதியில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. நாம் தமிழரின் IIFA இலங்கையில் நடப்பதற்கு எதிரான தீர்மானங்களையும் அதன் விளக்கமும் அளிக்கப்பட்டது. கலந்துகொண்ட பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் ஈழத்தின் பிரச்சனை பற்றி விரிவாக விளக்கப்பட்டது.

Monday, May 31, 2010

காங்கிரஸ் மந்திரி சபையில் சிரஞ்சீவி கட்சி சேருகிறது !!!!!!!

ஆந்திராவில் ரோசய்யா தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து வருகிறது.

கடப்பா தொகுதி காங்கிரஸ் எம்.பி.யும், மறைந்த முதல்-மந்திரி ராஜசேகரரெட்டியின் மகனுமான ஜெகன்மோகன் ரெட்டி செல்வாக்கு மிக்க தலைவராக உருவெடுத்து வருவது காங்கிரஸ் மூத்த தலைவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ஜெகன்மோகன் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடவும், அதே சமயத்தில் விரைவில் நடைபெற உள்ள பாராளுமன்ற மேல்-சபை தேர்தலுக்கு ஆந்திராவில் இருந்து காங்கிரஸ் எம்.பி.க் களை சுலபமாக தேர்வு செய்யவும் நடிகர் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் கட்சியை காங்கிரஸ் நாடியுள்ளது. பிரஜா ராஜ்ஜியம் கட்சிக்கு ஆந்திரா சட்டசபையில் 14 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

இவர்கள் ஆதரவுடன் காங்கிரஸ் எம்.பி.க்கள் மிக, மிக எளிதாக தேர்வாக முடியும். டெல்லியில் சோனியாவை சந்தித்து பேசிய பிறகு காங்கிரசுக்கு ஆதரவு கொடுக்க சிரஞ்சீவி சம்மதம் தெரிவித்தார்.

ஆந்திராவில் 2014ம் ஆண்டு தான் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்குள் காங்கிரசுடன் சிரஞ்சீவி கட்சி ஐக்கியமாகி விடும் என்று ஒரு பேச்சு நிலவுகிறது. ஆந்திர அரசியலில் இது புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் ஆளும் காங்கிரஸ் மந்திரி சபையில் சேர சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதற்காக அவர்கள் சிரஞ்சீவியை வற்புறுத்தத்தொடங்கி உள்ளனர். மந்திரி பதவியில் இருந்தால் தான் கட்சியை வளர்க்க முடியும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

பிரஜா ராஜ்ஜியம் கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் கூறு கையில், தொகுதி மக்கள் எங்களை இப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ. மாதிரி தான் பார்க்கிறார்கள். எனவே ரோசய்யா மந்திரி சபையில் சேருவதில் எந்த தவறும் இல்லை என்றார்.

பிரஜா ராஜ்ஜியம் எம்.எல். ஏ.க்களிடம் ஏற்பட்டுள்ள மந்திரி பதவி ஆசையை பயன்படுத்திக் கொள்ள ரோசய்யாவும் தீர்மானித் துள்ளார். பிரஜா ராஜ்ஜியம் கட்சிக்கு 4 மந்திரி பதவிகளை தருவதாக அவர் கூறியுள்ளார்.

ராஜசேகரரெட்டி மந்திரி சபை அமைத்த போது, தங்கள் கூட்டணியில் 26 எம்.எல்.ஏ.க்களுடன் இருந்த தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சிக்கு 6 மந்திரி பதவிகளை கொடுத்தார். தெலுங்கானா மாநில கோரிக்கைக்காக அவர்கள் பிறகு பதவி விலகினார்கள்.


எனவே சிரஞ்சீவி கட்சிக்கு மந்திரி பதவி கொடுக்க எந்த இடையூறும் இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் மந்திரி சபையில் சேருவது பற்றி நடிகர் சிரஞ்சீவி இன்னும் இறுதி முடிவு எதுவும் எடுக்கவில்லை.

ஜெயலலிதா வெற்றி பெற்று பழைய சட்ட மன்றத்திலே ஆட்சி அமைப்போம் என்ற கேள்விக்கு "சிரித்த" முதல்வர்!!!!!!!!!!!!!!

கேள்வி:- தி.மு.க. சார்பாக மாநிலங்களவை தேர்தலில் யார் யார் போட்டியிடுகிறார்கள் என்பதை எப்போது அறிவிப்பீர்கள்?


பதில்:- இப்போதேகூட அறிவிக்கலாம். மூன்று பேர் கழகத்தின் சார்பில் போட்டியிடுகிறார்கள். இன்று நடைபெற்ற கூட்டத்தின் முடிவில் பொதுச் செயலாளர் பேராசிரியர், கழகத்தின் சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பெயர்களை, கழகத் தலைவர் அறிவிக்க உயர்நிலை செயல் திட்டக்குழு அதிகாரம் அளிக்கின்றது என்ற தீர்மானத்தை முன்மொழிந்து அதை உயர்நிலை செயல் திட்டக்குழு ஏற்றுக் கொண்டிருக்கின்றது. அதன்படி பொதுச்செயலாளர் பேராசிரியரை கலந்து கொண்டு அறிவிக்கின்ற பெயர்கள்

17-6-2010 அன்று நடைபெறும் மாநிலங்களவைத் தேர்தலில் தோழமைக் கட்சிகளின் ஆதரவோடு கழகத்தின் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றவர்கள் -

1. கே.பி.ராமலிங்கம்,
2. ச.தங்கவேல்,
3. டி.எம்.செல்வகணபதி
காங்கிரஸ் ஒரு இடத்தில்...

கேள்வி:- மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை இடம்?
பதில்:- அவர்களுக்குள்ள உறுப்பினர்களின் அடிப்படையில் ஒரு இடத்தில் அவர்களே நின்று வெற்றி பெறுவார்கள்.

கேள்வி:- உயர்நிலை செயல்திட்டக் குழுவில் ராஜதந்திரமான ஒரு முடிவை பா.ம.க. உறவு குறித்து தீர்மானமாக நிறைவேற்றியிருக்கிறீர்கள். இதை பா.ம.க. ஏற்றுக் கொள்ளும் என்று நம்புகிறீர்களா?

பதில்:- எனக்குத் தெரியாது. நாங்கள் நல்ல எண்ணத்தோடு எடுத்த முடிவு இது. இதிலே ராஜதந்திரம் ஒன்றும் கிடையாது.

கேள்வி:- தீர்மானத்தைப் பார்க்கும்போது பா.ம.க. இந்த கூட்டணியில் தொடர்ந்து இருப்பதை உறுதி செய்யும் வகையில் முடிவு செய்திருக்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா?

பதில்:- ஆமாம்.

கேள்வி:- பா.ம.க.வின் "லாயல்டியை'' சோதனை செய்வது போன்ற முடிவா?
பதில்:- உங்களுடைய கற்பனைக்கெல்லாம் நான் ஆள் அல்ல. என்னுடைய கற்பனையாக நிறைய எழுத முடியும். சொல்ல முடியும். ஆனால் இந்தக் கற்பனைக்கெல்லாம் நான் ஆள் அல்ல.

கேள்வி:- பா.ம.க. உங்கள் கூட்டணியில் சேருவதற்கு காங்கிரஸ் தலைவர்கள் ஒப்புக் கொள்வார்கள் என்று நினைக்கிறீர்களா?

பதில்:- ஒப்புக் கொள்ள வைப்பதற்கு முயற்சிப்பேன்.

கேள்வி:- பா.ம.க. சில நாட்களுக்கு முன்பு வரை உங்களை தரக்குறைவாகப் பேசினார்கள். திடீரென்று அவர்களுடன் கூட்டணிக்கு என்ன காரணம்?

பதில்:- உங்களைப் போன்ற சில செய்தியாளர்கள் பேசாததையா அவர்கள் பேசிவிட்டார்கள்? யார் யார் உண்மையாக என்னை வாழ்த்துவார்கள், யார் யார் தரக் குறைவாக பேசுவார்கள் என்பதெல்லாம் எனக்கு தெரியும்.

கேள்வி:- தி.மு.க., பா.ம.க. கூட்டணி என்று சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் டாக்டர் ராமதாஸ் தேர்தலில் வாக்குப் பதிவு இயந்திரத்தைப் புறக்கணிப்போம் என்று சொல்லியிருக்கிறார். அந்த கருத்தை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?

பதில்:- நான் அவரைப் பற்றியும், அவருடைய தலைமையிலே உள்ள கட்சியைப் பற்றியும் தி.மு.க.வின் உயர்நிலை செயல்திட்டக் குழுவிலே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் விளக்கிச் சொல்லியிருக்கிறேன். இதுபோன்ற கேள்விகளைக் கேட்டு நான் பதில் சொல்லி, அவரை நீங்கள் பதில் சொல்ல வைத்து ஒரு "சிண்டு முடிகிற'' வேலையை தயவு செய்து செய்ய வேண்டாம்.

கேள்வி:- ஈரோட்டைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சு.முத்துசாமி தி.மு.க.வில் சேரப் போவதாக கடந்த மூன்று நாட்களாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறதே?

பதில்:- தி.மு.க.வில் சேருவதைப் பற்றி முத்துசாமி இன்னும் எங்களிடம் பேசவில்லை.

கேள்வி:- முன்னாள் அமைச்சர் சு.முத்துசாமி தி.மு.க.வில் இணைந்தால் ஏற்றுக் கொள்வீர்களா?

பதில்:- ஏற்றுக் கொள்ளலாமா, வேண்டாமா? நீங்கள் என்ன சொல்கிறீர்கள்.

கேள்வி:- இலங்கை தமிழர் பிரச்சினை குறித்த தீர்மானத்தில் இனியாவது ஆக்கப்பூர்வமாக நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறீர்கள். அப்படியென்றால் இதுவரை அவர்கள் செய்ததில் உங்களுக்கு திருப்தி இல்லை என்று சொல்லலாமா?

பதில்:- திருப்தியே இல்லை என்று சொல்லமுடியாது. போதுமான அளவிற்கு மனநிறைவு இல்லை.

கேள்வி:- இலங்கை பிரச்சினையில் மத்திய அரசு இன்னும் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

பதில்:- அனுப்பப்பட்ட பொருள்களை இன்னும் சரிவர அவர்களுக்கு விநியோகிக்கப்படவில்லை என்று புகார் இருக்கின்றது. அது உண்மையாக இருந்தால், அதை மத்திய அரசு உடனடியாக சரி செய்ய வேண்டுமென்பது எங்களுடைய வேண்டுகோள்.

கேள்வி:- கோவை செம்மொழி மாநாட்டுக்காக உங்களைப் பாராட்டுகிறோம். ஆனால் மாநாட்டு இலச்சினையில் தமிழ் பிராமி எழுத்துக்கள் ஒன்று கூட இடம் பெறவில்லையே? சிந்து சமவெளி நாகரிகம் தான் அதிலே இடம்பெற்றுள்ளது.

பதில்:- திராவிட நாகரிகத்தினுடைய ஆதி சிந்து நாகரிகம்.

கேள்வி:- மாநாட்டு இலச்சினையைத் திருத்தி தமிழ் பிராமி எழுத்துக்களை இடம்பெறச் செய்வீர்களா?

பதில்:- அந்த இலச்சினையை மீண்டும் வரைய வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் திருத்தம் சரியென்றால் ஏற்றுக் கொள்வோம்.

கேள்வி:- ஜெயலலிதா வெற்றி பெற்று பழைய சட்ட மன்றத்திலே ஆட்சி அமைப்போம் என்று சொல்லியிருக்கிறாரே?

பதில்:- (சிரிப்பு)

கேள்வி:- சிறுதாவூர் நில பிரச்சினைக்காக தி.மு.க. எப்போது ஆர்ப்பாட்டம் நடத்தப்போகிறது?

பதில்:- காஞ்சீபுரம் மாவட்டக் கழகத்தின் சார்பில் அந்த போராட்டத்தை நடத்துவதற்கு எங்களிடம் அனுமதி கேட்டிருக்கிறார்கள். நாங்கள் அதற்கு அனுமதி கொடுப்பதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறோம்.

இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி பதில் அளித்தார்.

Sunday, May 30, 2010

நகைச்சுவை புகைப்படங்கள்.!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


சத்தியமா நான் இல்லை .................








தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணு குட்டி நான்.............



மேல பார்க்காதீங்க கொங்சம் கீழ பாருங்க ................





நீங்கள் எதிர் பார்த்த அந்த்த போடோவுக்கு கொஞ்சம் கீழ வாங்க....
-
--
-
-
-
-
-
-
-
--
-
-
--
-
-
-
-
-

-
-
-
-
-
-
-
-
-
-




எப்பூடி.................................................

எக்ஸ்பிரஸ் ரெயில் கவிழ்ப்பு: சதிகாரர்கள் 2 பேர் அடையாளம் தெரிந்தது; ரெயில் ஊழியரை பயன்படுத்தி நாசவேலை!!!!!!!!!!!

மேற்கு வங்காள மாநிலம் மிட்னாபூரில் நேற்று முன்தினம் தண்டவாளத்தில் நாசவேலை செய்து எக்ஸ்பிரஸ் ரெயில் கவிழ்க்கப்பட்டது. அந்த ரெயில் மீது பக்கத்து தண்டவாளத்தில் வந்த சரக்கு ரெயில் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இதில் பலியானவர்கள் எண்ணிக்கை 141 ஆக உயர்ந்துள்ளது.


ரெயில் கவிழ்ப்புக்கு மாவோயிஸ்டுகள்தான் காரணம் என்று கருதப்பட்டது. ஆனால் மாவோயிஸ்டுகள் நாங்கள் காரணம் அல்ல என்று கூறினார்கள். இது தொடர்பாக மேற்கு வங்க போலீசார் விசாரித்து வந்தனர். அதில் ரெயிலை கவிழ்த்தவர்கள் யார்? என்று கண்டுபிடித்து உள்ளனர்.


மேற்கு வங்காளத்தில் “போலீஸ் அடக்கு முறைக்கு எதிரான மக்கள் இயக்கம்” என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இவர்கள்தான் தண்டவாளத்தில் நாசவேலை செய்து ரெயிலை கவிழ்த்து உள்ளனர்.


இந்த இயக்கம் மாவோயிஸ்டு ஆதரவுடன்தான் செயல்படுகிறது. ஆனாலும் மாவோயிஸ்டுகளுக்கு தெரிவிக்காமல் தன்னிச்சையாக இவர்களே நாசவேலையில் ஈடுபட்டுள்ளனர். இந்த இயக்கத்தின் தலைவர்கள் உமாகந்த மகதோ, பாபி மகதோ ஆகியோர் உள்ளூர் தொண்டர்கள் சிலருடன் சேர்ந்து ரெயிலை கவிழ்த்துள்ளனர்.


இதற்காக அந்த பகுதி ரெயில்வே லைன்மேன் தயாராம் மகதோ என்பவரையும் பயன்படுத்தி உள்ளனர். தயாராம் மகதோ அன்று இரவு 9.30 மணியளவில் வீட்டில் இருந்தார். அப்போது உமா கந்தமகதோ, பாபி மகதோ மற்றும் சிலர் ஆயுதங்களுடன் அவரது வீட்டுக்கு வந்தனர்.


அவரை அங்கிருந்து வலுக்கட்டாயமாக கடத்தி சென்றனர். இந்த விஷயத்தை வெளியே சொன்னால் குடும்பத்தினர் அனைவரையும் கொன்று விடுவதாக மிரட்டினார்கள்.


பின்னர் தயாராம் மக தோவை ரெயில் தண்டவாளத்துக்கு அழைத்து சென்றனர். தண்டவாளத்தை சிலிப்பர் கட்டையுடன் இணைத்து இருக்கும் “பான்டரஸ்” கிளிப்பை அகற்றும் படி கூறினார்கள். அதற்கான கருவி மூலம் அவர் இணைப்பை கழற்றினார். இதனால் தண்டவாளம் சிலிப்பர் கட்டையில் இருந்து விலகியது.


அப்போது நள்ளிரவு 1 மணி. அடுத்த 15 நிமிடத்தில் அந்த வழியாக ஞானேசுவரி எக்ஸ்பிரஸ் அந்த வழியாக வரும். இதை எதிர்பார்த்தே தண்டவாளத்தில் நாசவேலை செய்தனர்.


பின்னர் அவர்கள் அந்த இடத்திலேயே காத்து இருந்தனர். அவர்கள் எதிர்பார்த்தப்படியே 15 நிமிடத்தில் ரெயில் வந்தது. நாச வேலை செய்யப்பட்டு இருந்த இடத்தில் வந்ததும் தண்டவாளத்தை விட்டு விலகி ஓடி கவிழ்ந்தது. அதன் பெட்டிகள் பக்கத்து தண்டவாளத்தில் விழுந்து கிடந்தன.


உடனே பாபிமகதோ பக்கத்தில் உள்ள சர்திகா ரெயில் நிலையத்துக்கு சென்று அந்த வழியாக வந்த சரக்கு ரெயிலை நிறுத்த சென்றார். ஆனால் அவர் செல்வதற்குள், சரக்கு ரெயில் அங்கிருந்து கடந்து வந்து விட்டது. தண்டவாளத்தில் கிடந்த ரெயில் பெட்டிகள் மீது சரக்கு ரெயில் மோதி பெரும் விபத்து நேரிட்டு விட்டது.


போலீசாரிடம் ரெயில்வே ஊழியர் தயாராம் மகதோ நடந்த சம்பவங்கள் அனைத் தையும் கூறியுள்ளார். அவரை தங்கள் பாதுகாப்பில் வைத்து விசாரித்து வருகின்றனர்.


உமாகந்த மகதோ, பாபி மகதோ மற்றும் சதிவேலைகளில் ஈடுபட்ட அனைவரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை பிடித்தால் சதி பின்னணி குறித்து முழு விவரமும் தெரிய வரும்.

விஜய் படங்களுக்கு வரவேற்பு! எஸ்.ஏ.சந்திரசேகர் ‌ காமெடி பேட்டி!!!!!!!!!!!!!

விஜய் நடிக்கும் படங்களுக்கு மக்களிடையே ‌மிகுந்த வரவேற்பு உள்ளது. அவர் எனுக்கு மகனாக கிடைத்ததற்கு கடவுளுக்கு நன்றி தெரிவித்துக்‌ கொள்கிறேன், என்று விஜய்யின் தந்தை டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் வெளுத்துக்கட்டு. இப்படத்தின் பாடல் அறிமுக விழா ஏற்கனவே சென்னையில் நடந்துவிட்ட நிலையில், திருச்சி மற்றும் மதுரையிலும் அறிமுக விழா நடத்தப்பட்டது. இதில் எஸ்.ஏ.சந்திரசேகர் கலந்து கொண்டு பாடல்களை அறிமுகப்படுத்தி பேசினார்.


திருச்சியில் நடந்த விழாவில் அவர் பேசுகையில், நடிகர்களை நம்பி படம் எடுக்காமல் கதாபாத்திரத்தை நம்பி படம் எடுப்பது என்னுடைய வழக்கம். கதாபாத்திரத்தை நம்பி படம் எடுத்தால் யாரை வேண்டுமானாலும் வைத்து படம் எடுக்கலாம். படத்தில் ஏதாவது விஷயத்தை சொல்ல நினைப்பவன் நான். இப்போது படம் எடுப்பது ரொம்ப எளிது. ஆனால் அந்த படத்தை மக்களிடம் கொண்டு சென்று, வெற்றி பெறுவது கடினம். இதை எப்படி சமாளிப்பது என்று திரைஉலகம் திணறி கொண்டு இருக்கிறது, என்றார்.


அதன் பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாடு முழுவதும் நடிகர் விஜய் ரசிகர் மன்றம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நடிகர் விஜய் எனக்கு மகனாக கிடைத்ததற்காக கடவுளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நடிகர் விஜய் தற்போது அரசியலுக்கு வருவதற்கு அஸ்திவாரம் போட்டு உள்ளார். அவர் நடிக்கும் படங்களுக்கு மக்களிடையே மிகுந்த வரவேற்பு உள்ளது. இதனால் அவரது செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விஜய் அரசியலில் ஈடுபடுவது தவிர்க்க முடியாதது. உரிய நேரத்திற்காக அவர் காத்து இருக்கிறார். நான் இயக்கிய "நான் சிகப்பு மனிதன்'' படத்தை `ரீமேக்' செய்து தயாரிக்க இருக்கிறேன். அதில் விஜய்யை நடிக்க வைக்க உள்ளேன். இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்து நான் படத்தை மட்டும் தயாரிக்க இருக்கின்றேன். இது போன்று என்னுடைய பழைய படங்கள் சிலவற்றை இந்த காலத்துக்கு ஏற்ப `ரீமேக்' செய்ய இருக்கிறேன், என்று கூறினார்.


மதுரையில் நடந்த விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும்போது, படத்தில் பிரபல நடிகர் நடித்திருந்தாலும் நல்ல கதை இருந்தால்தான் அந்த படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும். இது தமிழகத்தில் ஒரு ஆரோக்கியமான வளர்ச்சி ஆகும். ஒரு கருத்தை மட்டுமே படமாக எடுக்க முடியாது. ஒரு நல்ல கருத்தை எளிமையாக கதையம்சத்துடன் இளைஞர்களை கவரும் வகையில் எடுக்க வேண்டும். இன்றைய இளைஞர்களின் தேவை தன்னம்பிக்கை. தோல்வியை தாங்கும் மனப்பக்குவம்தான், என்றார்.