Sunday, June 6, 2010

தமிழரை ஒழித்துக்கட்டிய கருணாநிதி!: டி.ஆர் தாக்கு

தமிழின கூட்டமைப்பு 'தமிழர் மீட்சி மாநாட்டை' விரைவில் நடத்தவிருக்கிறது.

இம்மாநாடு குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் டி.ராஜேந்திரன் பேசுகையில் முதல்வர் கருணாநிதி மற்றும்செம்மொழி மாநாட்டை தாக்கி பேசினார்.

அவர் பேசியதாவது:

'தமிழர் மீட்சி மாநாடு என்று சொன்னால்... இன்று செம்மொழி மாநாடு நடக்கவிருக்கிறது. அது செம்மொழி மாநாடு அல்ல. அது ஒரு ஆட்சி மாநாடு. ஆளும் தமிழரின் மாநாடு. ஆனா இவர்கள் இலங்கைத் தமிழர் விஷயத்தில் என்ன செய்தார்கள்?


தெலுங்கானா என்றால் இந்தியா அதிர்கிறது. கர்நாடகத்தில் தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் தரமாட்டோம் என்று அனைத்துக் கட்சிகளையும் அழைத்தால் அனைத்துக் கட்சியும் அங்கே வரணும். அப்படி வரவில்லையென்றால் அந்தக் கட்சி அங்கே கட்சியாகவே இருக்க முடியாது. அந்த கன்னட மொழி உணர்வினை நான் மதிக்கிறேன். தமிழ் இந்தி தெலுங்கு படங்களை கன்னடத்தில் டப்பிங் செய்து கர்நாடகத்தில் திரையிட முடியாது.


ஆனால் இங்கே என்ன வாழுது? இலங்கையில் தமிழர்கள் செத்தார்கள். ஒரே நாளில் 40 ஆயிரம் தமிழர்கள் சாகடிக்கப்பட்டார்கள். இங்கே இருக்கிற 6.5 தமிழர்கள் என்ன பண்ணாங்க? இதைவிட பெரிய இழிநிலை வேண்டுமா?


கருணாநிதியின் பிறந்தநாளுக்கு கூட நான் போகாமல் வெளியே நிற்கிறேன். காரணம் நான் கொள்கை பரப்பாளராக இருந்த இடத்தில் குஷ்பு வந்திருக்காங்க. கருணாநிதியை என் தலைவராக நான் போற்றிய போது அவர் தமிழ்மொழியைச் சுமந்துகொண்டிருந்தார். இப்போதோ அவர் இலங்கைத் தமிழனை ஒழித்துக் கட்டிய பழியைச் சுமக்கிறார்.


மாவீரனை பெற்ற தாயை தமிழ்நாட்டில் சிகிச்சை பெற வைப்பதில் கூட இவர் தேடியது விளம்பரம்தான். இலவச போதைக்கு அடிமையாகி தமிழன் காணாமல் போகிறான். தமிழன் தன்னுடைய மரபியலை மறந்துவிட்டான். கலாச்சாரத்தை விட்டுவிட்டான்' என்று பேசினார்.

--

No comments:

Post a Comment