Monday, September 27, 2010

யாரு டீமுல யாரு? சென்னை டீம்ல யாரு?

ஐபிஎல் 3-ஐ அடுத்து எதிர்பார்க்கப்பட்ட சாம்பியன்ஸ் லீக்கையும் கைப்பற்றிவிட்ட சந்தோஷத்தில் உள்ள சென்னை ரசிகர்களுக்கு, ஞாயிற்றுக்கிழமை கோப்பையை வென்ற பின் கேப்டன் தோனி பத்திரிகையாளர்களிடம் இறுதியாக தெரிவித்த ஒரு விஷயம் பெரும் கவலையை ஏற்படுத்திவிட்டது.http://www.vikatan.com/vc/cmspic/I_1289.jpg

"வீரர்களின் கூட்டு முயற்சியால் வெற்றி பெற்ற நாங்கள் அடுத்த ஐபிஎல் தொடரில் யார் யார் சென்னை அணியில் இருப்பார்கள் என்பது தன்னால் இப்போது கணிக்க முடியவில்லை," என்று கூறியிருந்தார். அப்போது அவர் முகத்தில் தெரிந்த சிறிய ஏமாற்றம் யாரும் கவனிக்காமல் இல்லை.

காரணம்... சென்னை உரிமையாளர்களும், சென்னை சூப்பர் கிங்ஸ் தேர்வாளர்கள் தோனியின் கருத்து இல்லாமல் இறுதி முடிவு எடுத்ததில்லை. கிட்டத்தட்ட கேப்டன் தோனி மற்றொரு சென்னை உரிமையாளராகவே வலம் வந்தார். அவரது கருத்துப்படியும் சென்னை அணி செயல்பட்டது. அதற்கு ஒரு சிறு எடுத்துக்காட்டு...

முதல் ஐபிஎல் போட்டியில் இறுதி ஆட்டம் வரை சென்ற சென்னை அணி, இரண்டாவது ஐபிஎல் போட்டியில் அரையிறுதியுடன் வெளியேறியது. போதுமான வேகப்பந்து வீச்சு இல்லாததையே இது உணர்த்தியதால் மூன்றாவது ஐபிஎல் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் போலிங்கர் அணியில் சேர்க்கப்பட்டார். அதுவும் மூன்றாவது ஐபிஎல் போட்டி தொடர் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் வேகமாக இடையில் சேர்க்கப்பட்டவர்தான் போலிங்கர்.

முன்னதாக இது தொடர்பான உள் தேர்வு நிகழ்ச்சியில் தோனியின் முடிவு எது என்பதால் சென்னை அணியின் முக்கிய தலைவரான சீனிவாசன் உடனடியாக போலிங்கரை அணுகி அவரை உடனடியாக சென்னை அணியில் இணைத்தார். அதன் பிறகுதான் சென்னை அணி பந்து வீச்சில் வலு பெற்று வெற்றிகள் குவித்தது.

இதுவரை தோனியின் கருத்துக்கும் ஆசைக்கும் முழு ஆதரவு கொடுத்த சென்னை அணியில் தோனியே தொடர்ந்து இருப்பாரா என்ற கேள்வியும் கூடவே எழுந்துள்ளது. காரணம், தோனி ஜார்க்கண்டை சேர்ந்தவர். அவரை தக்க வைத்தாலும் அவர் முடிவு செய்த வீரர்கள் தொடர்ந்து சென்னை அணியில் நீடிப்பார்களா என்ற கேள்வியும் எழுகிறது.

இப்போது இருக்கும் ஐபிஎல் விதிமுறைப்படி ஒரு அணியில் நான்கு முக்கிய வீரர்களை மட்டுமே வைத்துக்கொள்ளலாம். அதாவது, சென்னையை சேர்ந்த வீரர்களை தவிர்த்து சுரேஷ் ரெய்னா, ஜகாட்டி, ஜோகிந்தர் சர்மா, கோனி என்று உள்நாட்டு வீரர்களை குறிப்பிட்டு சொன்னாலும், இவர்களை தவிர வெளிநாட்டு வீரர்களான மேத்யூ ஹெய்டன், மைக்கெல் ஹசி, ஆல்பி மோர்கள், போலிங்கர், முரளிதரன், துஷாரா, சுரேஷ் பெரேரா என வரிசையாக அணி வகுக்கும் நட்சத்திர வீரர்களின் வரிசையில் சென்னை அணி எந்த நான்கு வீரருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் என்றும் தெரியவில்லை.

கேப்டன் தோனியே மற்ற அணி விலை பேச வாய்ப்பு உள்ளதால், அவரை எந்த விலைகொடுத்தும் தக்க வைக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முயலும். அப்படி அதிக விலை பேசி இவரை ஒப்பந்தம் செய்தால் மற்ற வீரர்களை வாங்க போதுமான பணம் இருக்குமா என்ற ஐயமும் எழுந்துள்ளது. இதற்காக ஒரு குறிப்பிட்ட விலையையும் ஐபிஎல் நீர்ணயிக்கும் என்று கூறப்படுகிறது.

அதே வேளையில் வெளிநாட்டு வீரர்களில், முக்கியமாக இரண்டு வேகப்பந்து வீச்சாளார்கள் முரளிதரன், போலிங்கர், துஷாரா, மக்காயா நிட்டினி ஆகியோரில் யாரை தக்க வைக்க முடியும்? பந்து வீச்சியில் இப்படியென்றால் பேட்டிங் வரிசையில், மேத்யூ ஹெய்டன், மைக்கெல் ஹசி, சுரேஷ் பெரேரா, ஆல்ரவுண்டரில் ஆல்பி மோர்கள், ஜேக்கப் ஓரம், ஆண்ட்ரூ பிலிண்டாப் என இந்த லிஸ்ட் நீழுகிறது. இதில் பிலிண்டாப் மீண்டும் எடுக்க வாய்ப்பு இல்லை.

வெளிநாடு வீரர்கள் தான் இப்படி என்றால், உள்நாட்டு வீரர் சுரேஷ் ரெய்னாவை வாங்க அனைத்து ஐபிஎல்லில் உருபினர்களும் இவரை எந்த விலை கொடுத்தும் வாங்க தயாராக உள்ளனர். இவரை தக்க வைக்கவும் சென்னை அணி அதிக விலை கொடுக்க வேண்டியது இருக்கும். ஆரம்பத்தில் ஒன்று ரெண்டு வீரர்கள் வைத்துக்கொண்டு அவர்களின் திறமையாக மெருகேற்றி சமாளித்து வந்த மற்ற அணிகள் கூட தற்போது சிறந்த வீரர்களை அணியில் சேர்க்கவே விரும்புகின்றனர்.

முன்னதாக சென்னை அணியிலிருந்து யார் யார் வெளியேறுவார்கள் என்ற கேள்வி எழுந்த போது மேத்யூ ஹெய்டன், சென்னை தன் தாய் வீடு போன்றது என்றும், நான் சென்னை அணியை விட்டு எந்த அணிக்கும் மாற தயாராக இல்லை எனக் கருத்து கூறினார்.

நேற்று போட்டி முடிவடைந்த உடன் மைக்கெல் ஹசி, நாங்கள் ஒன்றினைந்து முழு அர்பணிப்புடன் விளையாடியதால் ஐபிஎல் மற்றும் சாம்பியன் லீக்கை கைப்பற்ற முடிந்தது. தன்னை இதுவரை உற்சாகமாகவும், மரியாதையாகவும் நடத்திய சென்னை அணியை விட்டு போக மனமில்லை. ஆனால் அது என் கையில் இல்லையே என வேதனையுடன் குறிப்பிட்டார்.

இவர் இப்படியென்றால் தமிழகத்தின் மருமகன் முரளிதரனை கேட்கவே வேண்டாம். சென்னை நகரமும், ரசிகர்களும் தன்னை இதுவரை பிரித்து பார்த்ததே இல்லை. தான் இன்னும் தன் தாய் நாட்டுக்கு விளையாடுவது போன்றுதான் உணருகிறேன். இறுதி வரை சென்னை அணிக்கு விளையாடவே விரும்புகிறேன் என்று ஐபிஎல் 3-ஐ கைப்பற்றியதும் வெளிப்படையாகவே தன் கருத்து தெரிவித்தார்.

ஒட்டு மொத்தத்தில் சென்னை அணி கோப்பை வென்ற மகிழ்ச்சியை விட தற்போது யார் யாரை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற டென்ஷன் தான் பெரிதாக எழுந்துள்ளது.

அதே நேரத்தில் சென்னை அணியும் மற்ற அணிகளில் இடம் பெற்று சிறந்த வீரர்களை வாங்கவும் முயற்சி செய்யும்.

சச்சினின் எதிப்பு...

சென்னைக்கு மட்டுமல்ல மற்ற அணிகளும் இந்த கவலை தற்போது எழுந்துள்ளது. ஐபிஎல் விதிமுறைக்கு மும்பை அணித்தலைவர் சச்சின் டெண்டுல்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தன் அணியில் தற்போது தான் ஒன்றிணைத்து முழு சிறந்த அணியாக மாற்றியுள்ளளோம். இந்த நிலையில் நான்கு வீரர்கள் மட்டுமே அணியில் தக்க வைக்க முடியும் என்பது ரொம்ப கஷ்டமான பணி என கருத்து தெரிவித்துள்ளார்.

சரி... சென்னை அணியில் எந்தெந்த வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம்? நீங்களே யோசனை சொல்லுங்களேன்...

No comments:

Post a Comment