Saturday, April 24, 2010

நாட்டில் வசூலிக்கப்படாத வரித்தொகை ரூ.2 லட்சம் கோடி


இந்திய தொழிலதிபர் ஒருவர் ரூ 71,874 கோடி வரி பாக்கி வைத்திருக்கிறார் என்ற உண்மையை 'கம்ட்ரோலர் அண்ட் ஆடிட்டிங் ஜெனரல்' எனப்படும் இந்திய தலைமைக் கணக்குத் துறை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, கடந்த நிதியாண்டில் மட்டும் வசூலிக்கப்படாமல் உள்ள வருமான வரியின் அளவு ரூ.2 லட்சம் கோடி என்றும் அறிவித்துள்ளது. 2008-2009ம் ஆண்டில் வசூலிக்கப்பட்டதை விட 65 சதவிகிதம் குறைவாகவே 2009-2010ம் நிதியாண்டில் வருமான வரி வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் சிஏஜி அறிக்கை தெரிவிக்கிறது. இந்த வரிபாக்கி முழுவதுமாக வசூல் செய்யப்பட்டால் நாட்டின் நிதிப் பற்றாக்குறையில் மூன்றில் இரண்டு பங்கு சரிகட்டப்பட்டு விடும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், புனேயைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் மட்டும் ரூ 71,874 கோடி பாக்கி வைத்துள்ளார். அவர் பெயர் ஹஸன் அலி. இதே பெயரில் பண்ணை மற்றும் பல தொழில்களை நடத்துபவர். இவரிடம் வரி வசூலிக்க ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தலைமைக் கணக்குத் துறை கேள்வி எழுப்பியுள்ளது.

No comments:

Post a Comment