Wednesday, May 26, 2010

அகில இந்திய அளவில் ஐ.ஐ.டி. நுழைவு தேர்வில் சென்னை மாணவர் முதலிடம்

மத்திய அரசு நாடு முழுவதும் ஐ.ஐ.டி. நுழைவு தேர்வை நடத்தியது. 15 ஐ.ஐ.டி.கல்லூரியில் சேருவதற்கான நுழைவு தேர்வு கடந்த ஏப்ரல் மாதம்
11-ந் தேதி நடந்தது.
9509 இடங்களுக்கு மொத்தம் 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்வு எழுதினார்கள்.

இதில் 13 ஆயிரத்து 103 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் சென்னை மாணவர் அனுமுலா ஜிதேந்தர் ரெட்டி அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து உள்ளார்.

மும்பை மண்டலத்தில் அதிக பட்சமாக 3145 பேரும், சென்னை மண்டலத்தில் 2619 பேரும், டெல்லி மண்டலத்தில் 2264 பேரும், கராக்பூர் மண்டலத்தில் 1481 பேரும், கான்பூர் மண்டலத்தில் 1341 பேரும், ரூர்கே மண்டலத்தில் 1305 பேரும், கவுகாத்தி மண்டலத்தில் 521 பேரும் வெற்றி பெற்றுள்ளனர்.

மாணவிகள் 1 லட்சத்து 13 ஆயிரம் பேர் நுழைவு தேர்வு எழுதினார்கள். அதில் 1476 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதில் அகான்ஷா முதலிடம் பிடித்துள்ளார். அகில இந்திய அளவில் அவர் 18-வது இடம் பிடித்து உள்ளார்.

இதர பிற்படுத்தப்பட் டோரில் 2357 பேரும் தாழ்த் தப்பட்டோரில் 1773 பேரும், பழங்குடியினர் பிரிவில் 517 பேரும், ஊனமுற்றோரில் 174 பேரும் வெற்றி பெற்று உள்ளனர்.


மாணவர்களுக்கு இணையதளம் மூலம் கவுன்சிலிங் நடைபெறும். கவுன்சிலிங் இணையதளம் நாளை திறக்கப்பட்டு ஜூன் 12-ந் தேதி மூடப்படும்.

பொது வகுப்பினர் கவுன்சிலிங்குக்கு நேரடியாக செல்ல தேவை இல்லை. ஆனால் இதர பிற்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்கு டியினர், ஊனமுற்றோர் நேரடியாக செல்ல வேண்டும்.

No comments:

Post a Comment