Saturday, May 29, 2010

அ.தி.மு.க.வில் இருந்து முத்துசாமி நீக்கம்: ஜெயலலிதா அறிவிப்பு; ஆதரவாளர்

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தன்னை வளர்த்து விட்ட அ.தி.மு.க. கழகத்திற்கு துரோகம் புரிந்து சுய நலத்திற்காக தி.மு.க.வில் போய்ச்சேர திட்டமிட்டு தனக்கு மனக்குறை இருப்பதாக சொல்லிக்கொண்டு, நேரில் வந்து சந்தித்துப் பேசுமாறு கழகப் பொதுச் செயலாளர் பலமுறை அழைத்தும் வராமல், கழக செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் செயற்குழு கூட்டம் முடிந்த பின்னர் ஒரு கடிதத்தை அனுப்பி வைத்து அதைப் படித்துப் பார்த்த பிறகு மீண்டும் கழகப் பொதுச்செயலாளர் நேரில் வந்து பேசுமாறு அழைப்பு விடுத்ததும் வராமல் உண்மைக்கு புறம்பான பல தகவல்களை தொடர்ந்து பல்வேறு பத்திரிகைகளில் பரப்பி கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், சு.முத்துசாமி (கழக அமைப்புச் செயலாளர், ஈரோடு மாநகர் மற்றும் நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர், முன்னாள் அமைச்சர்) மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்டு கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் தலைமை கழகத்தாலும் கழக பொதுச்செயலாளராலும் அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சிகளையும் புறக்கணித்து கழக தலைமைக்கு எதிராக கழக உடன்பிறப்புகளை தூண்டிவிடும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு, கழக ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் கழகப் பொதுச் செயலாளர் பற்றிய அவதூறு பிரசாரம் செய்து வரும் கரூர் சின்னசாமி (அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைத் தலைவர், முன்னாள் அமைச்சர்) வி.கே.சின்னசாமி (ஈரோடு புறநகர் மாவட்டக் கழக அவைத் தலைவர், முன்னாள் எம்.பி.இஎம்.எல்.ஏ.)
ஈரோடு சி.மாணிக்கம் (ஈரோடு மாநகர் மாவட்ட விவசாயப் பிரிவுத் தலைவர், முன்னாள் எம்.எல்.ஏ.) ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்ப்டை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந் தும் நீக்கி வைக்கப்ப்டுகிறார்கள்.


கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment