Sunday, May 23, 2010

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக சையது முனீர்ஹோடா நியமனம்: தமிழக அரசு உத்தரவு

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-


தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக பணிபுரிந்த டி.சந்திரசேகரனின் பதவிக்காலம் கடந்த 21-ந் தேதியுடன் முடிவடைந்துள்ளது.

தற்போது சையது முனீர்ஹோடா தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக நியமனம் செய்து கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா இன்று (நேற்று) ஆணையிட்டுள்ளார்.

சையது முனீர்ஹோடா மாநில தேர்தல் ஆணையராக பொறுப்பேற்கும் நாள் முதல், 2 ஆண்டு காலத்திற்கு இப்பதவியில் பணிபுரிவார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய பதவி ஏற்று கொள்ளும் சையது முனீர்ஹோடா தற்போது மின்விசை நிதி கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக பணியாற்றி வருகிறார். தலைமை செயலாளர் அந்தஸ்து பெற்ற உயர் அதிகாரி இவர்.

1976-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியான சையது முனீர்ஹோடா தமிழ், ஆங்கிலம், இந்தி, உருது போன்ற பல மொழிகளை பேசும் சிறந்த புலமை மிக்கவர்.

மிகவும் எளிமை, நேர்மை, கண்டிப்பு, கடின உழைப்பு கொண்ட அதிகாரியான இவர் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர், பி.சி.அலெக்சாண்டர், பீஷ்மநாராயண சிங் ஆகியோர் கவர்னராக இருந்த போது அவர்களது செயலாளர், தமிழக அரசில் மக்கள் நல்வாழ்வு துறை, உள்துறை, போக்குவரத்து துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை ஆகிய துறைகளின் செயலாளர் பொறுப்பு உள்பட பல முக்கிய பதவிகளை வகித்தவர்.

முதல்-அமைச்சராக தற்போது கருணாநிதி 5-வது முறையாக பொறுப்பேற்ற போது, அவரது முதன்மை செயலாளராக பணியாற்றியவர்.

கோப்புகள் பார்க்கும்போது அதை தீவிரமாக ஆய்ந்து, உரிய முடிவுகளை கூர்மையான குறிப்பாக எழுதும் அவரது பாங்கை அரசு அதிகாரிகள் பலரும் பாராட்டுகிறார்கள்.

No comments:

Post a Comment