Sunday, May 23, 2010

மங்களூர் விமான விபத்துக்கு காரணம் என்ன?

உலகில் உள்ள ஆபத்தான விமான நிலையங்களில் மங்களூர் விமான நிலையமும் ஒன்று.இந்த விமான நிலையத்தில் ஓடுபாதை முழுவதுமே சமதள பகுதி கிடையாது. ஓடு பாதையை ஒட்டியே பள்ளத்தாக்கு பகுதி ஆரம்பித்து விடுகிறது.


இந்த மாதிரி விமான நிலையத்தை “மேஜை மேல் பகுதி” (டேபிள் டாப்) விமான நிலையம் என்று அழைக்கிறார்கள். இந்த விமான நிலையங்களில் ஓடு பாதையை விட்டு சற்று விலகி விட்டாலே விமானங்கள் பெரும் ஆபத்தை சந்திக்க வேண்டியது வரும். நேற்று அந்த மாதிரி தான் விபத்து நடந்து உள்ளது.

விமானத்தை ஓட்டிய பைலட் ஸ்லாட்கோ குளுசிகா, துணை பைலட் அலுவாலியா இருவரும் விமானம் ஓட்டுவதில் சிறந்த அனுபவம் பெற்றவர்கள். அப்படி இருந்தும் விபத்து நடந்து உள்ளது.

விமான ஓடுபாதையை அவர்கள் சரியாக கணிக்காமல் இறக்கியதால்தான் விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.

தரை இறங்கும்போது குறிப்பிட்ட உயரத்தில் இருந்து குறிப்பிட்ட வேகத்தில் குறிப்பிட்ட கோணத்தில் இறங்க வேண்டும் இதில் ஏதோ தவறு நடந்து இருக்கவேண்டும் என்று கருதப்படுகிறது.

ஏர் இந்தியா நிறுவனத்தில் பைலட்டுகள் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. தேவையை விட 150 பைலட்டுகள் குறைவாக உள்ளனர். போதுமான பைலட்டுகள் இல்லாவிட்டாலும் இவர்களையே மாற்றி மாற்றி அனுப்பி விமானத்தை இயக்குகிறார்கள். இதனால் பைலட்டுகளுக்கு போதுமான ஓய்வு கிடைப்பது இல்லை. அது அவர்களை மிகவும் சோர்வடைய செய்து விடுகிறது. இதுவும் விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

No comments:

Post a Comment