Sunday, April 25, 2010

87 வயதிலும் லச்சகனக்கில் சம்பலம் வாங்கும் ஒரே கலைஞன் - கலைஞர் மட்டுமே


'இளைஞன்' திரைப்படம் மூலம் கிடைத்த 45 லட்சம் ரூபாயை, தமிழக அரசின் முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கினார் கருணாநிதி.இது குறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கடந்த 2004-05ம் ஆண்டில் 'மண்ணின் மைந்தன்' சினிமா படத்திற்கு நான் திரைக்கதை வசனம் எழுதியதன் மூலம் கிடைத்த ஊதியம் ரூ.11 லட்சம். 'கண்ணம்மா' சினிமா படத்தின் மூலம் கிடைத்த ஊதியம் ரூ.10 லட்சம். ஆக மொத்தம் 21 லட்சம் ரூபாயை, சுனாமி நிவாரணத்திற்காக அன்றைய முதல்வர் ஜெயலலிதாவிடம், ஸ்டாலின் நேரில் வழங்கினார்.

கடந்த 2008ம் ஆண்டு 'உளியின் ஓசை' படத்தின் மூலம் கிடைத்த ஊதியம் ரூ. 25 லட்சத்தில், வருமான வரி போக மீதி 18 லட்சம் ரூபாயை திரைத்துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றும் மூத்த கலைஞர்களுக்கு நானே நேரடியாக வழங்கினேன்.அந்த வரிசையில் தற்போது தயாரிக்கப்படும் 'பெண் சிங்கம்' திரைப்படத்திற்காக எனக்கு கிடைத்த 50 லட்சம் ரூபாயும் தமிழக அரசின் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 2009ம் ஆண்டில் வழங்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள அருந்ததிய சமுதாய மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளிலும், பொறியியல் கல்லூரிகளிலும் சேர்ந்து படிக்க, முதல்வர் நிவாரண நிதியிலிருந்து அரசு உதவ வேண்டுமென்று என்னிடம் வைத்த கோரிக்கையை ஏற்று, முதல்வர் நிவாரண நிதிக்கு நான் வழங்கிய தொகை 50 லட்சம் ரூபாய், தூய்மைப் பணிபுரிவோர்(அருந்ததியர்) நல வாரியத்தின் மூலமாக அருந்ததிய மாணவர்களின் உயர்கல்விக்காக வழங்கப்பட்டது.


தற்போது தயாரிக்கப்படும் 'இளைஞன்' திரைப்படத்திற்காக நேற்று(24ம் தேதி) அளிக்கப்பட்ட 45 லட்சம் ரூபாயை தமிழக அரசின் முதல்வர் நிவாரண நிதிக்கே ஒப்படைக்கிறேன். இந்தத் தொகையை, தமிழகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நல வாரியத்திலே ஒப்படைத்து, அதன் மூலமாக இந்தத் தொகை மாற்றுத் திறனாளிகளின் நலன்களுக்காகச் செலவிடப்படும் என்பதையும் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.இவ்வாறு முதல்வர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment