Monday, May 17, 2010

தலையங்கம்: ​தெரிந்தா...?​ தெரி​யா​மலா...?

​ஒரு சில முக்​கி​ய​மான சம்​ப​வங்​கள் போதிய அளவு கவ​னம் செலுத்​தப்​ப​டா​மல் மறந்​து​வி​டப்​ப​டும் அவ​லம் இந்​தி​யா​வுக்கே உள்ள தனித்​தன்மை என்று
தோன்​று​கி​றது.​


நம்​மை​வி​டப் பல துறை​க​ளில் பின்​தங்​கிய நாடான இந்​தோ​னே​ஷி​யா​வில் நடந்த ஒரு சம்​ப​வ​மும்,​​ கடந்த மாதம் தில்​லி​யில் நடந்த ஒரு சம்​ப​வ​மும் எந்த அள​வுக்கு நம்​மை​விட மற்​ற​வர்​கள் முன்​ஜாக்​கி​ர​தை​யா​க​வும்,​​ சுறு​சு​றுப்​பா​க​வும் இருக்​கி​றார்​கள் என்​ப​தற்கு எடுத்​துக்​காட்​டாக அமை​கி​றது.


​வரும் ஆகஸ்ட் 17-ம் தேதி இந்​தோ​னே​ஷியா தனது சுதந்​திர தினத்​தைக் கொண்​டா​டும் வேளை​யில் மும்​பை​யில் நடந்த தாக்​கு​தல்​போல ஒரு தாக்​கு​தலை நடத்தி,​​ இந்​தோ​னே​ஷிய அதி​பர் சுசீலோ பம்​பாங் ​ உத​ய​ணா​வை​யும் மற்​ற​வர்​க​ளை​யும் படு​கொலை செய்​ய​வும்,​​ இந்​தோ​னே​ஷி​யாவை ஓர் இஸ்​லா​மிய நாடாக அறி​விக்​க​வும் நடந்த முயற்​சி​களை அந்த நாட்​டுக் காவல்​துறை முறி​ய​டித்​தி​ருக்​கி​றது.​ சதித்​திட்​டம் முறி​ய​டிக்​கப்​பட்​ட​து​டன்,​​ சதி​யில் ஈடு​பட்​ட​வர்​க​ளும் கைது செய்​யப்​பட்​டி​ருக்​கி​றார்​கள்.​ முன் யோச​னை​யு​ட​னும்,​​ முன்​னெச்​ச​ரிக்​கை​யு​ட​னும் இந்​தோ​னே​ஷிய அரசு செயல்​ப​டு​கி​றது என்​ப​தற்கு இது உதா​ர​ணம்.​


நமது இந்​தி​யா​வில்,​​ மார்ச் மாதம் 12-ம் தேதி தில்லி மாயா​புரி பகு​தி​யில் உள்ள பழைய சாமான்​கள் வியா​பாரி தீபக் ஜெயின் என்​ப​வர்,​​ ஃப​ரீ​தா​பாத் தொழிற்​பேட்டை பகு​தி​களி​லி​ருந்து பழைய இரும்​புக் கழி​வு​களை வாங்கி வந்து தமது கிடங்​கில் வைக்​கி​றார்.​ அந்​தப் பழைய இரும்​புச் சாமான்​கள் அடங்​கிய சாக்கை ராஜேந்​தர் பிர​சாத் என்​கிற கடை ஊழி​யர் பிரித்து அடுக்​கு​கி​றார்.​


அன்று முதல் தொடங்​கி​யது வினை.​ஒரு​வர் பின் ஒரு​வ​ராக தீபக் ஜெயி​னும் அவ​ரது கடை​யில் வேலை பார்க்​கும் நான்கு ஊழி​யர்​க​ளும் தலை​சுற்​றல்,​​ வாந்தி என்று உடல்​ந​லக் குறைவு ஏற்​பட்டு அவ​திப்​ப​டத் தொடங்​கு​கி​றார்​கள்.​ கார​ணமே தெரி​யா​மல் அவர்​கள் அனை​வ​ரு​டைய உடலி​லி​ருந்து ரோமம் உதி​ரத் தொடங்​கு​கி​றது.​ கடு​மை​யான தலைவலி,​​ ஜு​ரம் குறைய மறுக்​கி​றது.​ என்​ன​தான் பிரச்னை என்​பது மருத்​து​வர்​க​ளுக்​கும் தெரி​ய​வில்லை.​ எல்​லோ​ரும் ஒரு​வர்​பின் ஒரு​வ​ராக அப்​போலோ மருத்​து​வ​ம​னை​யி​லும்,​​ அகில இந்​திய மருத்​து​வக் கழக மருத்​து​வ​ம​னை​யி​லும் அனு​ம​திக்​கப்​பட்டு பரி​சோ​த​னை​கள் மேற்​கொள்​ளப்​ப​டு​கின்​றன.​ஹிமான்​ஷு ஜெயின் என்​கிற இன்​னொரு பழைய சாமான் வியா​பா​ரி​யும் இதே அறி​கு​றி​க​ளு​டன் மருத்​து​வ​ம​னை​யில் அனு​ம​திக்​கப்​பட்​ட​வு​டன்​தான் சந்​தே​கம் வலுத்து,


​​ பழைய சாமான்​க​ளின் கிடங்​கு​கள் உள்ள மாயா​புரி பகு​தி​யைப் பரி​சோ​திக்க முற்​ப​டு​கி​றார்​கள் காவல் துறை​யி​ன​ரும்,​​ தில்லி மாந​க​ராட்​சி​யி​ன​ரும்.​ பாதிக்​கப்​பட்​ட​வர்​கள் கோபால்ட்-​60 ​ என்​கிற கதிர் வீச்​சால் பாதிக்​கப்​பட்​டி​ருப்​பது தெரி​கி​றது.​ அந்​தப் பகு​தியே தனி​மைப்​ப​டுத்​தப்​பட்டு,​​ அங்​கு​லம் அங்​கு​ல​மா​கப் பரி​சோ​திக்​கப்​ப​டு​கி​றது.​ ஃப​ரீ​தா​பாதி​லி​ருந்து வாங்​கப்​பட்ட இரும்​புக் கழி​வு​க​ளில் கதிர் வீச்சு உள்ள இந்த கோபால்ட்-​60 இருப்​பது தெரிய வரு​கி​றது.​கோபால்ட்-​60 பழைய இரும்​புச் சாமான்​க​ளு​டன் எடைக்கு விற்​கப்​பட்​டி​ருக்​கி​றது என்றே வைத்​துக் கொள்​வோம்.​


இந்​தக் கதிர் வீச்​சுப் பொருளை விற்​பது தடை செய்​யப்​பட்​டி​ருக்​கி​றதே,​​ பிறகு எப்​படி விற்​கப்​பட்​டது?​ தில்லி பல்​க​லைக்​க​ழ​கத்​தின் வேதி​யி​யல் ஆய்​வுக்​கூ​டத்​தில் பொருள்​களை ஏலத்​தில் எடுத்​த​போது இந்த கோபால்ட்-​60 கடைக்கு வந்​த​தாக விசா​ர​ணை​யில் தெரி​ய​வந்​த​பின்​ன​ரும் நட​வ​டிக்கை இல்​லையே,​​ ஏன்?​1983-ல் மெக்​ஸி​கோ​வில்,​​ ஒரு ரேடியோ தெரபி இயந்​தி​ரம் பிரிக்​கப்​பட்டு,​​ கோபால்ட்-​60 ​ கதிர் வீச்​சு​டன் சுமார் 600 டன் இரும்​பு​கள் உருக்​கப்​பட்டு விட்​டது.​ உருக்​கப்​பட்ட இரும்​பி​னால் செய்​யப்​பட்ட கம்​பி​கள் அமெ​ரிக்கா,​​ மெக்​ஸிகோ,​​ கனடா போன்ற நாடு​க​ளில் வீடு கட்​டக் கம்​பி​க​ளாக உப​யோ​கப்​ப​டுத்​தப்​பட்​டன.​ விப​ரீ​தம் வெளிப்​பட்டு,​​ அந்த வீடு​க​ளில் வசித்​த​வர்​கள் பெரும் அவ​திக்கு உள்​ளாக நேரிட்​டது.​ பல வீடு​கள் இடிக்​கப்​பட்​டன.


​ அது​மு​தல்,​​ பழைய இரும்பு உருக்​கு​வது மிகுந்த கவ​னத்​து​ட​னும்,​​ கடு​மை​யான பரி​சோ​த​னைக்​குப் பிற​கும் மட்​டுமே மேலை நாடு​க​ளில் அனு​ம​திக்​கப்​ப​டு​கின்​றன.​இது​போன்ற கதிர் வீச்சு உள்ள பொருள்​கள் சிறிய கம்​பி​க​ளா​க​வும்,​​ துகள்​க​ளா​க​வும் பரி​சோ​த​னைக்கு உள்​ப​டா​மல் தப்​பித்து விடு​வது மிகப்​பெ​ரிய அச்​சு​றுத்​த​லாக மாறி இருக்​கி​றது.​ தீவி​ர​வா​தி​கள் இது​போன்ற பொருள்​களை அதிக அள​வில் மக்​கள் கூடும் இடத்​தில் வைக்க முற்​பட்​டால் ஏற்​பட இருக்​கும் விளை​வு​களை நினைத்​துப் பார்க்​கவே அச்​ச​மாக இருக்​கி​றது.​ நமது நாட்​டில் கூட்​டத்​துக்​கும்,​​ மக்​கள்​தொ​கைக்​கும்​தான் பஞ்​சமே கிடை​யாதே...!​தில்​லி​யில் மட்​டும் ஆண்​டொன்​றுக்கு சுமார் 5,000 டன் அபா​ய​க​ர​மான கழி​வு​கள் பாது​காக்​கவோ,​​ முறை​யாக அழிக்​கவோ வச​தி​யில்​லாத நிலை​யில் வெளி​யேற்​றப்​ப​டு​கின்​றன.​


ஏனைய இந்​திய மாந​க​ரங்​க​ளி​லும் இதே நிலை​தான்.​ இறக்​கு​ம​தி​யா​கும் கழி​வு​க​ளுக்​கும் முறை​யான பரி​சோ​த​னை​கள் மேற்​கொள்​ளப்​ப​டு​வ​தில்லை.​ கழி​வு​க​ளைக் கையா​ளக்​கூ​டக் கையா​லா​கா​த​வர்​க​ளாக நாம் இருக்​கி​றோம் என்​ப​து​தான் வேத​னை​யான உண்மை.​


பாது​காப்பு அச்​சு​றுத்​தல்​கள் எல்லா நாடு​க​ளுக்​கும்​தான் இருக்​கின்​றன.​ அந்த அச்​சு​றுத்​தல்​களை விலை​கொ​டுத்து வாங்​கும் ஒரே நாடு நமது பழம்​பெ​ரும் பாரத பூமி​யாக இருந்​து​வி​டக் கூடாது!

No comments:

Post a Comment