Tuesday, May 18, 2010

தமிழகத்தில் சிகிச்சைக்கு அனுமதிக்காதது ஏன்? பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் உருக்கம்; இலங்கை ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

இலங்கையில் தனிநாடு கேட்டு போராடிய விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டதாக அந்நாட்டு ராணுவம் கடந்த ஆண்டு இதே நாளில்தான் அறிவிப்பு வெளியிட்டது.


விடுதலைப்புலிகளுடனான போர் முடிவுக்கு வந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு பெற்று விட்டது. ஆனால் இலங்கை தமிழர்களின் வாழ்க்கை போராட்டம் மட்டும் இன்னும் முடிவுக்கு வராமலேயே உள்ளது. வெளிநாட்டில் வாழும் உரிமையை இழந்து உயிர் பிழைப்பதற்காக இலங்கை தமிழர்கள் அகதிகளாக வெளிநாடுகளுக்கு தப்பி ஓடுவதும், அங்கு சிறை பிடிக்கப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது.


தமிழர்களின் உரிமைப் போராட்டம் ஒடுக்கப்பட்டது. மகன் பிரபாகரனின் மரணச் செய்தி, மற்றும் கணவர் வேலுப்பிள்ளையின் மரணம் ஆகியவற்றால் பிரபாகரனின் தாய் பார்வதி அம்மாள் மிகுந்த மனவேதனை அடைந் தார். ஏற்கனவே பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த பார்வதி அம்மாளின் உடல் நிலை மேலும் மோசம் அடைந்தது. சிகிச்சைக்காக அவர் மலேசியா சென்றார்.


அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சென்னை சென்று சிகிச்சை பெற்றால் பார்வதி அம்மா ளின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும் என்று கூறினர். இதனை தொடர்ந்து பார்வதி அம்மாள் சென்னையில் சிகிச்சை பெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. இதற்கான விசாவும் மத்திய அரசால் வழங்கப்பட்டது.


ஆனால் கடைசி நேரத்தில் பார்வதி அம்மாள் சென்னையில் சிகிச்சை பெற அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் முதல்-அமைச்சர் கருணாநிதி இதில் தலையிட்டு மத்திய அரசுடன் பேசினார். இதன் பிறகு பார்வதி அம் மாள் சென்னையில் தங்கி சிகிச்சை பெற அனுமதி அளிக்கப்பட்டது. ஒரு சில நிபந்தனைகளுடன் அனு மதி வழங்கப்பட்டதால் பார் வதி அம்மாள் அதனை நிராகரித்தார்.


சென்னைக்கு வராமல் சிகிச்சைக்காக அவர் இலங்கை சென்று விட்டார். வல்வெட்டி துறையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டுள்ள பார்வதி அம்மாளுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அரசு மருத் துவ அலுவலர் டாக்டர் மயி லேறும் பெருமாள், பார்வதி அம்மாளின் உடல்நிலையில் தனி கவனம் செலுத்தி வருகி றார். உதவிக்காக அருகில் இருந்து கவனித்து வருகிறார்கள்.


தன்னை பார்க்க வருப வர்களிடம் பார்வதி அம் மாள் ஏக்கத்துடனேயே பேசுகிறார். தமிழ்நாட்டில் தங்கி இருந்து சிகிச்சை பெற எனக்கு ஏன் அனுமதி அளிக்கவில்லை என அடிக்கடி கேட்கும் பார்வதி அம்மாளின் கண்களில் கண்ணீர் பொங்குகிறது. அவரது உடல் நிலை தற்போது தேறி வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment