Wednesday, May 19, 2010

பொய் சொல்வதில் ஆண்கள் சாதனை

லண்டன் : ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு சூழலில் பொய் சொல்வது வழக்கமான ஒன்று. ஆனால், பெண்களைவிட ஆண்கள்தான் அதிக அளவில் பொய் சொல்வதாக ஒரு ஆய்வு முடிவு கூறுகிறது. அதாவது சராசரியாக ஒரு நாளைக்கு ஆண்கள் 3 முறையும், பெண்கள் 2 முறையும் பொய் பேசுகிறார்களாம்.
ஒன்போல் நிறுவனம், இதுகுறித்து ஒரு ஆய்வு நடத்தியது. 3000 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதன் விவரம்:


ஒரு ஆண்டில் ஆண்கள் சராசரியாக 1,092 தடவையும், பெண்கள் 728 முறையும் பொய் பேசுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது சாக்குபோக்கு சொல்லி சமாளிப்பதில் பெண்களைவிட ஆண்கள் முன்னிலை வகிக்கின்றனர்.
அதேசமயம், பொய் சொல்வது தவறு என்ற கருத்து பெண்களிடத்தில் அதிகமாகவும், ஆண்களிடம் குறைவாகவும் உள்ளது. பொய் சொல்லும்போது மனசாட்சி உறுத்துவதாக 82 சதவீத பெண்கள் கூறி உள்ளனர். ஆனால் ஆண்களில் இது 70 சதவீதம்தான்.


மது குடிக்கும் பழக்கத்தை மறைப்பதற்காகத்தான் பொய் சொல்கிறோம் என பெரும்பாலான ஆண்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக தனது அம்மாவிடம் அதிக அளவில் ரீல் விடுவதாக 25 சதவீத ஆண்களும், 20 சதவீத பெண்களும் தெரிவித்துள்ளனர்.


மற்றவர்களை திருப்திபடுத்துவதற்காக பொய் சொல்வதாக 75 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். நல்ல வேளை, தங்கள் காதலரை ஏமாற்றுவதற்காக பொய் சொல்பவர்கள் 10% பேர் தானாம். சிக்னல் கிடைக்கவில்லை, நான் பயணம் செய்கிறேன்Õ, டிராபிக்கில் சிக்கி உள்ளேன்Õ இவையெல்லாம் காதலர்களின் வழக்கமான பொய்மொழிகள்Õ.


வாழ்க்கையில் பொய் சொல்வது தவிர்க்க முடியாதது. சமுதாய தொடர்புக்கு அவசியமும் கூட. எனினும், பொய் சொல்வதற்கு காரணமாக அமைவது அவர்களுடைய மரபணுவா அல்லது வளர்ப்பு முறையா என்பது குறித்து இன்னும் அறியப்படவில்லை என லண்டனில் உள்ள அறிவியல் மியூசியத்தின் அதிகாரி கேட்டி மேக்ஸ் தெரிவித்தார்.

No comments:

Post a Comment