Wednesday, May 12, 2010


16 வயது மாணவனை மணந்த 30 வயது பெண்; மகனை மீட்டுத்தரக் கோரி தாயார் மனு


ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் சன்னிபென்டா பகுதியைச் சேர்ந்தவர் சைதம்மா. இவரது மகன் சித்தய்யா (16). இவன் ஸ்ரீசை லத்தில் உள்ள ஐ.டி.ஐ. ஒன்றில் படித்து வருகிறான். இவனது நண்பன் அசோக்.

சித்தய்யா அடிக்கடி அசோக் வீட்டுக்கு செல்வான். அப்போது அசோக்கின் சித்தி பாத்திமா (30)வுடன் (பெயர் மாற்றம்) பழக்கம் ஏற்பட்டது. 30 வயதாகியும் பாத்திமாவுக்கு திருமணம் ஆகவில்லை.

இந்நிலையில் இருவருக்கும் இடையே இருந்த நட்பு காதலமாக மாறியது. வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் காதலை வளர்த்தனர். இதையறிந்த அசோக்கின் தந்தை ஆதாமு இருவருக்கும் திரு மணம் செய்ய முடிவு செய்தார். இதன்படி அங்குள்ள கோவில் ஒன்றில் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர்.

இதையறிந்த சித்தய்யாவின் தாயார் சைதம்மா, “சிறுவனான என் மகனுக்கு 30 வயது பெண்ணை எப்படி திருமணம் செய்து வைக்கலாம்?” என்று ஆவேசம் அடைந்தார்.

பின்னர் தனது மகனை பாத்திமாவிடம் இருந்து மீட்டுத் தரக்கோரி மனித உரிமை ஆணையத்தில் புகார் கொடுத்தார். அதில் “என் மகனை ஏமாற்றி பாத்திமா திருமணம் செய்துள்ளார். இந்த திருமணத்தால் அவன் படிப்பு பாழாவதுடன் எதிர்காலம் நாசமாகி விடும். என் மகனை கட்டாய தாலி கட்ட வைத்த பாத்திமா, ஆதாமு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என் மகனை மீட்டு என்னிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

No comments:

Post a Comment