Wednesday, May 12, 2010

தாக்கவந்தவர்களை சுட முயன்ற போது சப்-இன்ஸ்பெக்டர் மீது தவறுதலாக குண்டு பாய்ந்தது; கைதான ஏ.டி.எம். காவலாளி வாக்குமூலம்




தஞ்சை மாவட்டம் பாபநாசம் தெற்கு வீதியில் பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். உள்ளது. இங்கு நேற்று மதியம் மோட்டார் சைக்கிளில் வந்த 2பேர் பணம் எடுக்க குடிபோதையில் வந்துள்ளனர்.அப்போது வங்கி ஏ.டி.எம்.மில் பணம் வைப்பதற்காக ஜீப்பில் 4 ஊழியர்கள் மற்றும் மன்னார்குடியை சேர்ந்த தனியார் செக்யூரிட்டி ராஜேந்திரன் (52) ஆகியோர் வந்தனர்.


காவலாளி ராஜேந்திரன், ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் வைத்த பிறகு உள்ளே செல்லுங்கள் என்று அங்கு காத்திருந்தவர்களிடம் கூறினர். இதில் செக்ïரிட்டி ராஜேந்திரனுக்கும், அங்கு இருந்தவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது.
நான் சொல்வதை கேட்க விட்டால் துப்பாக்கியால் சுட்டு விடுவேன் எனக்கு லைசென்சு உள்ளது என கூறியவாறு டபுள் பேரல் துப்பாக்கியால் கூட்டத்தினர் மீது ராஜேந்திரன் சரமாரியாக சுட்டார்.


இதில் அதே பகுதியை சேர்ந்த பாரதிதாசன்(28) சீனிவாசன்(38), சாமிநாதன் (60), சத்துணவு அமைப்பாளர் சோமநாதராவ்(40) கட்டிட மேஸ்திரி ராஜராஜன்(55) ஆகியோர் படுகாயமடைந்தனர். 5 பேரும் ஆம்புலன்சு வேனில் ஏற்றப்பட்டு தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அப்போது ஏ.டி.எம்.முன்பு கூடி இருந்த பொதுமக்கள், செக்யூரிட்டி ராஜேந்திரனை, தாக்க ஓடி வந்தனர். இதனால் பயந்து போய் அவர் துப்பாக்கியுடன் ஏ.டி.எம். அறைக்குள் சென்று பதுங்கி கொண்டார்.
இதுபற்றி தகவல் அறிந்த பாபநாசம் டி.எஸ்.பி. அண்ணாதுரை, போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் ஆகியோர் அங்கு வந்தனர்.


கூடி இருந்த பொது மக்கள் கூட்டத்தை விலக்கி விட்டு விட்டு ஏ.டி.எம். அறைக்கு சென்று செக்யூரிட்டி ராஜேந்திரனிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்து சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் வெளியே அவரை அழைத்து வந்தார். அப்போது பொதுமக்கள், ராஜேந்திரனை தாக்க ஆவேசமாக வந்தனர். திடீரென செக்யூரிட்டி, ராஜேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் கையில் வைத்திருந்த துப்பாக்கியை பிடுங்கினார். அப்போது துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு சீறி பாய்ந்தது. அந்த குண்டு சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வத்தின் குரல்வளை வழியாக துளைத்து சென்று தலை வழியாக வந்தது. இதில் அதே இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தார்.


உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, மற்றும் போலீசார் செக்ïரிட்டி ராஜேந்திரனை பிடித்து ஜீப்பில் ஏற்றி, கும்பகோணம் மேற்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். ஏ.டி.எம். காவலாளி ராஜேந்திரனை துப்பாக்கியுடன் போலீசார் கைது செய்தனர்.


அப்போது அவர் அளித்த வாக்கு மூலம் வருமாறு:-


ஏ.டி.எம். மையத்தில் பணம் வைப்பதற்காக வேனில் லட்சக்கணக்கான பணம் எடுத்து வந்தோம். ஏ.டி.எம். வரும்போது தகராறு நடந்து கொண்டிருந்ததால் பணம் கொள்ளை போய் விடக்கூடாது என்பதற்காக துப்பாக்கியால் சுட்டேன். அதில் 5 பேர் மீது குண்டு பாய்ந்து விட்டது.


உடனே என்னை தாக்க ஒரு கும்பல் ஓடி வந்தது. இதனால் ஏ.டி.எம். மையத்தில் புகுந்து ஷட்டரை மூடிவிட்டேன். சிறிது நேரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் வந்து கதவை திறக்கும்படி கூறினார். கதவை திறந்ததும் அவர் என்னிடம் இருந்து துப்பாக்கியை கைப்பற்றி கொண்டார். அவர் என்னை அழைத்து வெளியே வந்த போது என்னை கொல்ல ஒரு கும்பல் பாய்ந்தது. என் உயிரை காப்பாற்ற சப்-இன்ஸ்பெக்டரிடம் பிடுங்கி துப்பாக்கியால் சுட்டபோது தவறுதலாக சப்-இன்ஸ்பெக்டர் மீது குண்டு பாய்ந்து விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.


இன்று பிற்பகலுக்குள் அவர் பாபநாசம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

No comments:

Post a Comment