Tuesday, May 11, 2010

உடன்பாடு ஏற்படவில்லை: இங்கிலாந்தில் கூட்டணி ஆட்சி அமைப்பதில் சிக்கல்
இங்கிலாந்து பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடந்தது. இதில் எந்த ஒரு கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்க வில்லை. கன்சர்வேடிவ் கட்சி தனிப்பெரும் கட்சியாக திகழ்கிறது. எனவே இக்கட்சி லிபரல் ஜனநாயக கட்சியுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கிறது.


அதற்கான நடவடிக்கையில் கன்சர்வேடிவ் கட்சி தலைவர் டேவிட் கேமரோன் ஈடுபட்டுள்ளார். லிபரல் ஜனநாயக கட்சி தலைவர் நிக்கிளெக்குடன் தொடர்பு கொண்டு பேசினார்.

இதையடுத்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த இரு கட்சிகளின் சார்பிலும் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவினர் நேற்று மீண்டும் சந்தித்து சுமார் 5 1/2 மணி நேரம் பேசினார்கள்.

ஆனால் ஆட்சி அமைப் பது குறித்து இரு கட்சிகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்படவில்லை. எனவே டேவிட் கேமரோனும், நிக்கிளெக்கும் டெலிபோனில் சுமார் 70 நிமிடம் ஆலோசனை நடத்தினார்கள்.

அப்போது லிபரல் ஜனநாயக கட்சிக்கு அமைச்சரவையில் முக்கிய இலாகாக்களுடன் 6-க்கும் மேற்பட்ட கேபினட் மந்திரிகள் தருவதாக பிரதமர் பிரவுன் உறுதி அளித்தார். மேலும் லிபரல் ஜனநாயக கட்சி வலியுறுத்திவரும் தேர்தல் சீர்திருத்த கொள்கை போன்றவற்றை செயல் படுத்த ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் லிபரல் ஜனநாயக கட்சி தலைவர் நிக்கிளெக் பிரதமரும் தொழிலாளர் கட்சி தலைவருமான கார்டன் பிரவுனுடன் ஆட்சி அமைப்பது குறித்து ரகசியமாக சந்தித்து பேசி வருகிறார்.

இதை தொடர்ந்து பேச்சுவார்த்தை ஆட்சி அமைக்கும் அளவில் சாதகமாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது என அறிவிக்கப்பட்டது.

எனவே கார்டன் பிரவுனின் தொழிலாளர் கட்சியுடன் லிபரல் ஜனநாயக கட்சி ஆட்சி அமைக்கும் வாய்ப்பும் உள்ளது. இதற்கிடையே தற்போது எம்.பி.க்களை விலைக்கு வாங்கும் குதிரை பேரமும் நடைபெற தொடங்கியுள்ளது. எனவே கன்சர்வேடிவ் கட்சியின் கூட்டணி ஆட்சி அமைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


என்ன தான் அங்கே தேர்தல் அமைதியாக நடந்தாலும் , மந்திரி பதவி, காபினட் பதவி , பனம் கொளிக்கும் துறை என கூட்டனி என்ற பெயரில் பேரம் நடத்துவது இந்தியாவுக்கு சலைக்காமல் போட்டி போடுகிறது.


எங்க முதல்வர் அய்யாவை கூப்பிடுங்கபா லன்டன்க்கு நேர்லயே வந்து எல்லாத்தையும் தீர்த்து வைச்சிருவாரு.. ஆனா கனிமொழி, அழகிரிக்கும் அமைச்சர் பதவி வேனும் நாங்க என்ன இழிச்சவாயங்கலா ஹா ஹா(ஒரு நகைசுவைக்கு).

No comments:

Post a Comment