Friday, May 14, 2010

கல்வி கட்டண பிரச்சினை: தனியார் பள்ளி மிரட்டலுக்கு அரசு பணியாது; அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

கல்வி கட்டண பிரச்சினை: தனியார் பள்ளி மிரட்டலுக்கு அரசு பணியாது; அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு:

சட்டசபையில் இன்று பா.ம.க. உறுப்பினர் வேல்முருகன், பேசும்போது தனியார் பள்ளிகளுக்கான கட்டணங்களை அரசு நிர்ணயித்துள்ளது. கோர்ட்டும் அதை அமுல்படுத்த உத்தரவிட்டுள்ளது.


ஆனால் சில தனியார் பள்ளி நிர்வாகிகள் இந்த கட்டணம் போதாது பள்ளிகளை ஜூன் மாதம் திறக்கமாட்டோம் என்று கூறி உள்ளனர்.


அரசின் உத்தரவை மதிக்காத இந்த பள்ளிகளை அரசுடமையாக்க வேண்டும் அல்லது அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றார்.


இதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பதில் வருமாறு:-


தனியார் பள்ளிகளுக்கு எவ்வளவு கட்டணம் நிர்ணயிக்கலாம் என்பது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையிலானகுழு நிர்ணயம் செய்துள்ளது.


10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்த பள்ளிகள் அனைத்திலும் பள்ளிகளை நடத்த ஆகும் செலவு, அந்த பள்ளியில் உள்ள வசதிகள் எவ்வளவு கட்டணம் வாங்கலாம் என்ற அவர்களது கருத்து எல்லாவற்றையும் கேட்டு அறிந்த பிறகே ஒவ்வொரு பள்ளிக்கும் தனித்தனி கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை கோர்ட்டும் எற்றுள்ளது.


கலைஞர் அரசின் இந்த நடவடிக்கைக்கு சாதாரண ஏழை எளிய மக்களிடம் பாராட்டும் வரவேற்பும் கிடைத்துள்ளது. எந்த பள்ளியாவது கட்டணம் குறைவாக உள்ளது என்று கருதினால் சம்பந்தப்பட்ட குழுவிடம் முறையீடு செய்யலாம். அது பரிசீலிக்கப்படும். அதை விடுத்து மிரட்டல் விடுத்தால் அதற்கு இந்த அரசு பணியாது.


இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment