Wednesday, May 12, 2010

பொருளதார நெருக்கடியால் அதுவும்!!!!!!!!!!!!!! குறைந்து போனது................

சம்பளம் குறைந்ததால் பாலியல் தொல்லையும் குறைந்தது

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update

நியூயார்க் : நாற்பதுக்கு மேல் தான் பாலியல் விவகாரத்தில் ரொம்பவும் ஈடுபாடு காட்டுவார்கள் அமெரிக்கர்கள்; ஆனால், பொருளாதார நெருக்கடி இதிலும் மண்ணைப் போட்டு விட்டது.


ஆம். ஒரு வகையில் அமெரிக்கர்களை எந்த அளவுக்கு பொருளாதார நெருக்கடி வாட்டி வருகிறதோ, பாலியல் விஷயத்தில் அவர்களை திருத்தியுள்ளது என்பதே உண்மை.
எப்படி தெரியுமா? நாற்பது வயதுக்கு மேல் உள்ள ஆண்கள், பெண்கள் பாகுபாடின்றி, திருமணம் செய்தவர்களாக இருந்தாலும், செய்யாமல் இருந்தாலும், அத்துமீறிய , அளவுக்கு மீறிய பாலியல் ஈடுபாடு அதிகம் வைத்திருப்பர்.

அவர்கள் தான் இப்போது பெரிதும் திருந்தி உள்ளனர். இவர்களின் அத்துமீறிய, அளவு மீறிய பாலியல் ஈடுபாடுகள் வெகுவாக குறைந்து விட்டதாக, பாலியல் தொடர்பாக சர்வே எடுத்ததில் தெரியவந்துள்ளது.


அமெரிக்காவின் நியூயார்க் நகரில், பிரபல ஏஏஆர்பி என்ற சர்வே நிறுவனம் இது
தொடர்பாக சமீபத்தில் பல நகரங்களில் சர்வே நடத்தியது. சர்வேயில் தெரியவந்த சில வித்தியாசமான தகவல்கள்:


அமெரிக்கர்களில், இளம் வயதினரை விட, நாற்பது வயதுக்கு மேல் உள்ளவர்கள் தான் பாலியல் விஷயத்தில் அதிக ஈடுபாடு காட்டுகின்றனர். திருமணம் செய்தாலும், மனைவியுடன் பாலியல் உறவு கொள்வதுடன், வெளியிலும் பலரிடம் பாலியல் உறவில் ஈடுபடுவது அவர்களுக்கு ‘அடங்காத’ பொழுதுபோக்கு.


நாற்பது வயதிலும், பல ஆண்களும், பெண்களும் திருமணம் செய்யாமலேயே ‘லிவ் இன் அரேஞ்மென்ட்’ பாணியில் ஒரே வீட்டில் தாலி கட்டாத தம்பதியாக உள்ளனர். இந்த ஜோடிகள் அடிக்கடி ஆளை மாற்றுவதும் வாடிக்கை தான். ஆனால், எப்படியிருந்தாலும் பாலியல் விஷயத்தில் மட்டும் பாரபட்சம் இல்லை. அது கிடைத்தே ஆக வேண்டும்.


நாற்பது வயதை தாண்டிய திருமணம் ஆன ஆண்கள் 1670 பேரிடம் சர்வே நடத்தியதில், பத்தாண்டில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 1999 ல் நடத்திய சர்வேயில், திருமணத்துக்கு வெளியே பாலியல் வைத்துக்கொள்வது தவறு என்று 41 சதவீதம் பேர் கூறியிருந்தனர்; இப்போது, அந்த கருத்தை சொன்னவர்கள் 22 சதவீதம் பேர் தான். அந்த அளவுக்கு திருமணத்தை தாண்டிய பாலியல் தாகத்தில் உள்ளவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


ஆனால், பொருளாதார நெருக்கடியால் பலருக்கு வேலை போச்சு; சாதா வேலையில் சேர்ந்ததால் சம்பளமும் குறைந்து விட்டதால், இவர்களின் அத்துமீறிய பாலியல் விவகாரங்க ளுக்கு பணம் போதவில்லை. அதனால், வாரத்துக்கு நான்கு முறை பாலியல் உறவு கொள்வது போய், ஒரு முறை தான் வைத்துக்கொள்ள முடிகிறது என்றும் புலம்பி உள்ளனர்.


இப்படி புலம்பியுள்ளவர்கள் எண்ணிக்கை 40 சதவீதம் பேர்; ‘என்ன செய்வது, நிலைமைக்கு ஏற்ப இதை குறைத்துக்கொள்ளத்தான் வேண்டும் என்று சமாதானம் செய்து கொள்பவர்கள் எண்ணிக்கை 32 சதவீதம்.


திருமணத்தை தாண்டிய பாலியல் விவகாரங்களை நிறுத்தி விட்டதாக 10 சதவீதம் பேர் கூறியுள்ளதே பெரும் மாற்றம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு பொருளாதார நெருக்கடிக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.


எங்களுக்கு திருமண வாழ்க்கையை தாண்டிய பாலியல் தேவையில்லை. நெருக்கடியில் கடுமையாக வேலை செய்கிறோம்; போதுமான சம்பளம் கிடைக்கிறது. அதில் நிம்மதியாக வாழ்கிறோம் என்று இந்தியர்களை போல சொல்வர்களும் உள்ளனர்.

No comments:

Post a Comment