Monday, May 10, 2010

சிங்கிள் பெட்ரூமுக்கு ரூ.5ஆயிரம்: சென்னை வாசிகளை வதைக்கும் வீட்டு வாடகை உயர்வு; கட்டுப்படுத்த கோரிக்கை
வரவு எட்டணா.... செலவு பத்தணா...அதிகம் ரெண்டணா... கடைசியில் துண்டணா... துண்டணா.. பாமா விஜயத்தில் டி.எஸ். பாலையா பாடுவார்.
இதே நிலைதான் சென் னைக்கு விஜயம் செய்யும் வெளியூர் வாசிகளின் நிலையும். வளர்ந்து விட்ட சென்னை மாநகரம் பலரது வாழ்க்கை சக்கரம் ஓடுவதற்கு அச்சாணியாக விளங்குகிறது.


அரசு வேலை, தனியார் நிறுவன வேலை, வியாபாரம், சுய தொழில் உள்பட பல வழிகளில் உழைப்பதற்காக மக்கள் நாடி வருவது சென்னை. தமிழகம் மட்டுமின்றி பல மாநிலத்தை சேர்ந்தவர்களும் இங்கு சங்கம மாகி வாழ்கிறார்கள். இவர்களுக்கு பெரும் பிரச்சினையாக இருப்பது வீடு கிடைப்பதுதான்.

வீடுகளின் தேவையை அறிந்து வீட்டு உரிமையாளர்கள் வீட்டு வாடகையை கன்னா பின்னா என்று உயர்த்தி வருகிறார்கள்.
ஒரே ரூம். அதற்குள்ளேயே சமையல் செய்து கொள்ள வேண்டும். 4 அல்லது 5 வீடுகளுக்கு பொதுவான ஒரு கழிவறை, குளியலரை இருக்கும். இந்த மாதிரி ரூம்களுக்கு வாடகை ரூ.3 ஆயிரம்.

சிங்கிள் பெட்ரூம், ஹால், கழிவறை, குளியலரை இணைந்து இருந்தால் வாடகை ரூ.5 ஆயிரம்.
இரண்டு பெட்ரூம் வீடுகள் ரூ.7 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை. இந்த வாடகை சென்னையை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு மட்டும்தான் பொருந்தும்.

சென்னையின் மையபகுதிகளான புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், கோடம் பாக்கம், வடபழனி, தேனாம் பேட்டை, ஆழ்வார்பேட்டை, அடையார், சைதாப்பேட்டை போன்ற பகுதிகளில் இதைவிட அதிகம். வசூலிக்கிறார்கள். தேனாம்பேட்டை டி.எம்.எஸ். பகுதியில் 400 சதுர அடி பிளாட் வீடு வாடகை ரூ.10 ஆயிரம்.

பெரம்பூர், வியாசர்பாடி, கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, கொடுங்கையூர், உள்பட வட சென்னை பகுதியில் சாதாரண கூலி தொழி லாளர்கள் வசிக்கும் குடிசை வீடுகளுக்கு ரூ.2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரை வாடகை வசூலிக்கிறார்க்ள.

வாடகை கொடுத்துவிட்டு அதற்கு வட்டி கொடுப்பது போல் மின் கட்டணம் கொடுக்க வேண்டி உள்ளது. ஒரு யூனிட்டுக்கு ரூ.4 முதல் ரூ.6 வரை மின் கட்டணம் வசூலிக்கிறார்கள்.

இதுக்கெல்லாம் காரணம் தமிழக அரசின் பாடாவதி பொருளாதாரக் கொள்கையே தவிர வேறொன்றும் இல்லை!.எந்த தொழிற் சாலைகளை திறந்தாலும் சென்னையிலேதான தொரக்கனும்???வேற இடமே இல்லையா? சாப்டுவேர் கம்பெனிக்கு எதுக்கு சென்னை?எந்த இடத்திலேயும் அதை நடத்த முடியும் இணையதள சேவை மற்றும் மின்சாரம் மட்டுமே தேவை அதை செய்யாத குருட்டு அரசாங்கம்.இந்த சேவைகள் இருந்தால் பல கிராமங்களிலே சாப்டுவேர் கம்பனி தொடங்கலாம்.என்ன இப்போ அங்கதான் திறமையானவர்கள் உள்ளனர்.(ஜாவா பலகுருசாமியின் கூற்று )


ஒரு காலத்தில் இளைஞர் களுக்கு வீடு கொடுக்க தயங்குவார்கள். இப்போது இளைஞர்களுக்கு வீடு கொடுக்கவே விரும்பு கிறார்கள். சிங்கிள் பெட்ரூம் வீட்டில் 4 பேரை தங்க வைத்து ரூ.10 ஆயிரம் வாடகை பார்க்கிறார்கள்.

சாப்ட்வேர் நிறுவனங்களின் வளர்ச்சியே வாடகை உயர்வுக்கு முக்கிய காரண மாக அமைந்ததை யாராலும் மறுக்க முடியாது.
ஆனால் சென்னையில் சாப்ட்வேர் நிறுவனங்களில் கை நிறைய சம்பாதிப்பவர்கள் ஒரு சதவீதம் பேர்தான்.

பெரும்பாலானவர்கள் குறைந்த பட்ச சம்பளம் வாங்குபவர்களாகவே இருக்கிறார்கள். ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை மாத சம்பளம் வாங்குபவர்கள் வீட்டு வாடகையாக ரூ.5 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் கொடுக்கிறார்கள். மீதி சம்பளத்தில் வீட்டு செலவு, குழந்தைகளை படிக்க வைப்பது, மருத்துவ செலவு உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் சமாளிக்க வேண்டும். முடியுமா?


ஏற்கனவே விலைவாசி உயர்வு, குழந்தைகளின் படிப்பு செலவுகளை தாங்க முடியாமல் தவிக்கும் பெற்றோர் வீட்டு வாடகை உயர்வையும் சேர்த்து தாங்க முடியாமல் விழி பிதுங்குகிறார்கள்.

வாடகை உயர்வு காரணமாக பலர் புறநகர் பகுதிகளுக்கு படையெடுக்கிறார்கள். கூடுவாஞ்சேரி, மறை மலைநகர், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு பகுதிகளில் குடியேறு கிறார்கள். இதனால் அங்கும் வாடகையை உயர்த்தி வருகிறார்கள்.

புறநகர் பகுதிகளில் இருந்து 2 மணி நேரம் பயணம் செய்து சென்னையில் வேலைபார்க்க வருகிறார்கள். மாலையில் வேலை முடிந்து வீடு திரும்ப இரவு 9 மணிக்கு மேல் ஆகிவிடுகிறது.

இதில் வேலை பார்க்கும் பெண்களின் நில அந்தோ பரிதாபம். இரவு 9 மணிக்கு வீடு திரும்பிய பிறகுதான் சமையல், மறு நாள் காலை4 மணிக்கே எழுந்து தயார் ஆனால்தான் குறித்த நேரத்தில் அலுவலகம் செல்ல முடியும். இதனால் குடும்பங்களில் குழந்தைகளை சரிவர கவனிக்க முடியாமல் மனோ ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வசதி படைத்தவர்கள்தான் சென்னையில் வாழ முடியும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நடுத்தர மக்களும், ஏழைகளும் செய்வதறியாமல் திகைத்து போய் இருக்கிறார்கள்.

கல்வி கட்டணத்துக்கு கிடுக்கிப்பிடி, காலாவதி உணவு பொருட்கள், காலாவதி மருந்துகள் விற்பனைக்கு அதிரடி நடவடிக்கை என்று பல நடவடிக்கை கள் எடுத்து வரும் அரசின் பார்வை வீட்டு வாடகை பக்கமும் திரும்ப வேண்டும் என்பது பலரது எதிர்பார்ப்பு.

ஏற்கனவே சென்னை மாநகராட்சி கூட்டத்தில் காங்கிரஸ் கவுன்சிலர் லயோலா லாசர் வீட்டு வாடகை நிர்ணயத்துக்கு தனி குழு அமைக்க வலியுறுத்தினார். அந்த கோரிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளது.

சதுர அடிக்கு இவ்வளவு வாடகைதான் வசூலிக்க வேண்டும். அரசு நிர்ணயித்த மின் கட்டணமே வாடகைக்கு குடியிருப்பவர்களும் செலுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை அரசு கொண்டு வர வேண்டும்.

முடிந்த வரை கறந்து விடுவோம் என்ற கண்ணோட்டத்தோடு வருடம் தோறும் கண்மூடித்தனமாக வாடகையை உயத்துகிறார்கள். தறிகெட்டு ஓடும் குதிரையைப்போல் வேகமாக உயர்த்தப்படும் வீட்டு வாடகை உயர்வுக்கு கடிவாளம் போடாவிட்டால் பலரது வாழ்க்கையே கேள்வி குறியாகிவிடும்

6 comments:

  1. அக்கிரமம்தானுங்க

    ReplyDelete
  2. It is difficult to post comment in your blog.

    ReplyDelete
  3. thank for ur comment kandaswamy & britto.. now u can post easily dr p.k

    ReplyDelete
  4. அவசியமான பகிர்வு.வீட்டு உரிமையாளர்களின் இந்த அக்கிரமபோக்கு மாறவேண்டும்.

    ReplyDelete
  5. உங்கள் வருகைக்கு நன்றி ஷாதிகா

    ReplyDelete