Sunday, May 9, 2010

'பந்த்'தில் அ.தி.மு.க., - ம.தி.மு.க., பின்வாங்கியது ஏன்?

Latest indian and world political news information

விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலையேற்றம் ஆகியவற்றை கண்டித்து, தேசிய அளவில் நடந்த பொது வேலை நிறுத்தத்தில், தமிழகத்தில் அ.தி.மு.க.,- ம.தி.மு.க., இரு கம்யூ., கட்சிகள் பங்கேற்பதாக அறிவித்தன.இதற்காக தெருமுனை பிரசாரம், நோட்டீஸ் வினியோகம் என பலவற்றையும் கம்யூ., கட்சிகள் மட்டுமே ஆர்வத்துடன் செய்தன. பிரசார கூட்டம் நடத்துதல், ஆட்டோ பிரசாரம் போன்றவைகளில் எப்போதும் அ.தி.மு.க., அதிக அக்கறை எடுத்துக் கொள்ளும். ஆனால், இம்முறை பெயரளவில் அறிவிப்பை வெளியிட்டுவிட்டு, தமிழக அளவில் அடக்கி வாசித்துள்ளனர்.


'பந்த்'துக்கு முன்னதாக, பல்வேறு இடங்களில் கம்யூனிஸ்ட் கட்சிகள் பிரசார இயக்கங்களை நடத்த, அ.தி.மு.க.,- ம.தி.மு.க.,வினர் கடைசி வரிசையிலும், பார்வையாளர்கள் கூட்டத்திலும் நின்று சமாளித்தனர். தொழிற்சங்க ரீதியாக எடுத்துக் கொண்டாலும், கம்யூனிஸ்ட் தொழிற் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பணியை புறக்கணித்தும், போராட்டங்களில் பங்கேற்றும் தங்கள் உணர்வை வெளிப்படுத்தினர். இதிலும், அ.தி.மு.க., -ம.தி.மு.க., தொழிற்சங்கங்கள், 'எஸ்கேப்'.


கம்யூனிஸ்ட் கட்சிகளில் உள்ள முக்கிய நிர்வாகிகள், மறியலில் ஈடுபட்டு கைதாகினர். அ.தி.மு.க.,-ம.தி.மு.க., நிர்வாகிகள், கோஷம் போட்டதுடன் தங்களது எதிர்ப்பை முடித்துக் கொண்டனர். ஆவேசமாக முழங்கினால் சிறைக்கு செல்ல வேண்டும் என்பதால், அதை தவிர்த்தனர்.இப்போராட்டம் முக்கியமாக மத்திய அரசை கண்டித்து நடந்ததாலும், பெரும் பாலான கோரிக்கைகள் மத்திய அரசுடன் தொடர்புடையவை என்பதாலும், அ.தி.மு.க., மற்றும் ம.தி.மு.க.,வினர் மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பாமல், மாநில அரசையும், மாநில நிர்வாகத்தையும் மட்டுமே மையமாக வைத்து கோஷம் எழுப்பினர். அதிலும், தஞ்சை உட்பட பல இடங்களில், 10 நிமிடங்களுக்கும் குறைவாகவே ஆர்ப்பாட்டம் செய்தனர். முக்கிய பொறுப்புக்களில் உள்ள பெரும்பாலானோர் பங்கேற்கவில்லை.வரும் சட்டசபை தேர்தலில், காங்கிரஸ்-அ.தி.மு.க., கூட்டணி உருவாவதற்கான சூழல் எழுந்திருப்பது தான், 'பந்த்'தில் ஜெயலலிதா 'ஜகா' வாங்கியதற்கு காரணம் என, அக்கட்சி பிரமுகர்கள் தெரிவிக்கின்றனர்.


தி.மு.க.,வின் உட்கட்சி பூசல், வரும் சட்டசபை தேர்தலில் பெரிய அளவில் எதிரொலிக்க வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் கருதுகிறது. தி.மு.க.,வுடன் யார் கூட்டணி அமைத்தாலும் அவர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் காங்., நினைக்கிறது.காங்கிரஸ், ஆட்சியை பிடிக்கும் அளவிற்கு தனிப்பெரும் பலம் இல்லை என்றாலும், மதில்மேல் பூனையாக இருந்துகொண்டு, இக்கட்சி எந்தப் பக்கம் சாய்கிறதோ, அக்கட்சி ஆட்சியை பிடிக்கின்ற வரலாறு தான் தொடர்ந்து நடக்கிறது. வரும் தேர்தலில், காங்கிரஸ் எந்தப் பக்கம் சாயும் என்பது போக போகத் தான் உறுதியாக தெரியும்

No comments:

Post a Comment