Saturday, May 15, 2010

விசாரணைக்கு பெங்களூர் வர முடியாது!!!!!!!!!!!!!!

பெங்களூர் : சாமியார் நித்யானந்தா வழக்கின் முக்கிய சாட்சியான நடிகை ரஞ்சிதா, கர்நாடக சி.ஐ.டி. போலீசின் விசாரணைக்கு ஆஜராக முடியாது என்று தனது வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.


சாமியார் நித்யானந்தாவுடன் நடிகை ரஞ்சிதா நெருக்கமாக இருந்த வீடியோ காட்சிகள் வெளியானதைத் தொடர்ந்து, சாமியார் மீதான வழக்குகளில் அவர் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டு உள்ளார். நித்யானந்தா மீது பாலியல் பலாத்காரம், பண மோசடி உட்பட பல்வேறு புகார்களை 135 பேர் கூறியுள்ளனர். அவர்களில் 80 சதவீதம் பேரிடம் கர்நாடக சி.ஐ.டி. போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். ரஞ்சிதா விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வருகிறார். நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கும்படி சி.ஐ.டி. போலீசார் அவருக்கு 3வது முறையாக நோட்டீஸ் அனுப்பி இருக்கின்றனர்.


இந்த நிலையில், சென்னையை சேர்ந்த தனது வழக்கறிஞர் சுதா ராமலிங்கத்தின் மூலமாக இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 160வது பிரிவை சுட்டிக்காட்டி கர்நாடக சி.ஐ.டி. போலீசாருக்கு ரஞ்சிதா நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், ‘160வது பிரிவின்படி பெண் சாட்சியை விசாரணைக்கு வரும்படி நோட்டீஸ் அனுப்பக் கூடாது. வாக்குமூலம் தேவைப்பட்டால் அவருடைய வீட்டுக்குச் சென்று பெற வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
சி.ஐ.டி. மறுகடிதம்: இந்த நோட்டீசை பார்த்து அதிர்ச்சி அடைந்த சி.ஐ.டி. அதிகாரிகள், ‘உங்களுடைய முகவரியை கொடுங்கள். நாங்களே நேரில் வந்து வாக்குமூலம் பெறுகிறோம்’ என்று ரஞ்சிதாவுக்கு நேற்று கடிதம் எழுதினர்.


இந்த கடிதம் அவருடைய வழக்கறிஞர் சுதா ராமலிங்கத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

சட்டப் பிரிவு 160 சொல்வது என்ன?



இந்த குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (சி.ஆர்.பி.சி.) 160வது பிரிவு என்ன சொல்கிறது?
இந்த சட்டத்தின்படி, எந்த போலீஸ் சரகத்தில் குற்றம் நடந்து வழக்குப் பதிவு செய்யப்படுகிறதோ, அந்த போலீஸ் நிலைய அதிகாரி அல்லது சிறப்பு அதிகாரி, வழக்கில் முக்கிய சாட்சியாக கருதப்படுவோருக்கு நோட்டீஸ் அனுப்பி, அவர்களை அழைத்து வாக்குமூலம் பெறலாம். ஆனால், 15 வயதுக்கு குறைவானர்கள் மற்றும் பெண்களுக்கு நோட்டீஸ் அனுப்பி போலீஸ் நிலையம் அல்லது விசாரணைக்காக அமைக்கப்பட்டுள்ள அலுவலகத்துக்கு அழைக்கக் கூடாது. பெண் சாட்சியின் வீட்டுக்கே சென்று வாக்குமூலம் பெற வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment