Wednesday, May 12, 2010

புடவை கட்டச் சொன்னதற்காக கணவனிடம் விவாகரத்து கோரி பெண் வழக்கு; மும்பை ஐகோர்ட்டு நிராகரிப்பு



மும்பையை சேர்ந்தவர் ஆனந்த். இவரது மனைவி அல்கா. ஓமியோபதி டாக்டர்.இவர்களுக்கு கடந்த 2003-ம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது.


இதைத் தொடர்ந்து அல்கா அங்குள்ள குடும்ப நல கோர்ட்டில் கணவனிடம் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தார். அதில் எனக்கு மிகவும் பிடித்த உடை சல்வார்கமிஸ். ஆனால் எனது கணவர் என்னை புடவை கட்டச் சொல்லி தினமும் கொடுமைப்படுத்தி வருகிறார். அவரது 2 சகோதரிகளும் அவருடன் சேர்ந்து கொண்டு புடவை கட்டுமாறு கூறி சித்ரவதை செய்கின்றனர்.


மேலும் அவர்கள் என்னிடம் அதிக வரதட்சணையும் கேட்கிறார்கள். என்னை புடவை கட்டுமாறு வற்புறுத்தும் கணவரிடம் இருந்து எனக்கு விவாகரத்து வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.


இவ்வழக்கை விசாரித்த குடும்ப நல கோர்ட்டு புடவை கட்டுமாறு வற்புறுத்தியதற்காக விவாகரத்து வழங்க முடியாது என்று கூறியது.
ஆனாலும் அல்கா விட வில்லை. மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டும் புடவை கட்டும் பிரச்சினைக்காக விவாகரத்து வழங்க முடியாது என்று தீர்ப்பு கூறியது.


இதை கேட்டதும் அல்கா அதிர்ச்சி அடைந்தார்.

No comments:

Post a Comment