Sunday, May 9, 2010

தனக்கு தானே கொள்ளி வைத்து கொண்ட முதியவர்.. மகன்கள் கைவிட்டதால் விபரீதம்

ஆந்திர மாநிலம் கரீம்நகர் மாவட்டம் பொந்துபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடராம ரெட்டி (வயது 82). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர் ஆரம்ப காலத்தில் 2 ஏக்கர் நிலம் மட்டுமே வைத்திருந்தார். அதில் விவசாயம் செய்து உழைத்து சம்பாதித்து 40 ஏக்கர் நிலம் வாங்கினார்.

இந்த 40 ஏக்கர் நிலத்தையும் தனது மகன்களுக்கு ஆளுக்கு 20 ஏக்கர் என பிரித்து கொடுத்தார். ஏற்கனவே தான் வைத்திருந்த 2 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து பிழைப்பை ஓட்டினார். இதற்கிடையே 2 ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடராம ரெட்டியின் மனைவி இறந்தார். அதன் பிறகு அவர் வைத்திருந்த 2 ஏக்கர் நிலத்தையும் மகன்கள் எடுத்து கொண்டனர். பாங்கி யில் வைத்திருந்த ரூ.2 லட்சம் பணத்தையும் பிடுங்கிக் கொண்டனர். அவரை கவனிக்காமல் கைவிட்டனர். சாப்பாடு கூட கொடுப்பதில்லை. இதனால் வெங்கடராம ரெட்டி வறுமை யில் வாடினார். உணவு கிடைக்காமல் தவித்தார்.

இதற்கிடையே அவரது 2 மகன்களும் ஒருவருக் கொருவர் அடித்துக் கொண்டனர். சொத்து தக ராறும் ஏற்பட்டது. தம்பி மீது அண்ணன் கொலை பழி சுமத்தினார். இதனால் வெங்கடராமரெட்டியின் இளைய மகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதைப் பார்த்து அவர் வேதனை அடைந்தார்.


இதனால் தற்கொலை செய்ய முடிவெடுத்தார். சம்பவத்தன்று தான் படுக் கும் கட்டிலின் அடியில் விறகு கட்டைகளை அடுக்கி வைத்தார். பின்னர் உடலில் மண்எண்ணை ஊற்றி கட்டிலில் படுத்துக் கொண்டு, தனக்கு தானே தீவைத்தார். இதில் உடல் கருகி கட்டிலுடன் எரிந்து பிணமானார். அவரது வீடும் தீப்பற்றி எரிந்தது. அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.

பின்னர் வெங்கடராம ரெட்டியின் இறுதிச் சடங்கு நடந்தது. அப்போதும் அண்ணன் - தம்பி இடையே மோதல் ஏற்பட்டது. இருவரும் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டனர். இதை கிராம மக்கள் வேடிக்கைப் பார்த்தனர்.

No comments:

Post a Comment