Monday, May 10, 2010

பாகிஸ்தானில் ஷீ வெடிகுண்டு” விமான பயணி கைது; தலிபான் தீவிரவாதியா?

பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் இருந்து ஓமன் நாட்டுக்கு நேற்று ஒரு தாய் ஏர்வேஸ் விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் பயணம் செய்வதற்காக கடைசி நிமிடத்தில் ஒரு வாலிபர் அவசரம் அவசரமாக வந்தார்.

ஸ்கேனிங் கருவி வழியாக அவர் சென்ற போது அலாரம் ஒலித்தது. இதனால் அதிகாரிகள் அவரை சோதித்தனர். அப்போது அவர் அணிந்திருந்த ஷீ மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஷீ வை கழற்றி பார்த்த போது 4 பேட்டரிகள் மற்றும் வயர்கள், எலக்ட்ரிக் சர்க்கி யூட்கள் இருந்தன.


விசாரணையில் அந்த வாலிபரின் பெயர் பயாஸ் முகம்மது என்று தெரிந்தது. கராச்சியை சேர்ந்த அவர் பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தில் இருந்து வருவதாக கூறினார். அந்த மாகாணம் தலிபான் தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த மாகாணம் ஆகும்.

எனவே பயாஸ் முகம்மது தலிபான் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. வெடி பொருட்கள் எதுவும் சிக்க வில்லை.

என்றாலும் அவர் ஷீ வில் வைத்திருந்த பேட்டரி சர்க்கியூட் மூலம் எந்த ஒரு பொருளையும் விமானத்துக்குள் வைத்து வெடிக்க செய்ய முடியும். எனவே அவர் ஷீ வெடி குண்டு தீவிரவாதியாக சந்தேகிக்கப்படுகிறார்.

மஸ்கட் வழியாக வேறு நாடுகளுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

No comments:

Post a Comment