Saturday, May 8, 2010

நிகர ரன்ரேட் -2.450 நெருக்கடியில் இந்தியா வெஸ்ட் இண்டீசுடன் நாளை மோதல்


நிகர ரன்ரேட் -2.450    நெருக்கடியில் இந்தியா    வெஸ்ட் இண்டீசுடன் நாளை மோதல்


“சூப்பர் 8” சுற்றில் இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் மிகவும் மோசமாக தோற்றதால் நெருக்கடியில் உள்ளது.
அரை இறுதிக்கு தகுதி பெற வேண்டுமானால் இந்திய அணி அடுத்து நடை பெறும் எஞ்சிய 2 ஆட்டங்களிலும் வெற்றி பெறவேண்டிய கட்டாயம் உள்ளது. நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் மோசமாக விளையாடியதால் ரன் ரேட் -2.450 ஆக உள்ளது.
“சூப்பர் 8” சுற்றில் இந்திய அணி 2-வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசை நாளை (ஞாயிற்றுக்கிழமை) எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு இந்தப்போட்டி தொடங்குகிறது.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அரை இறுதிக்கான வாய்ப்பில் இருக்க முடியும். தோல்வி அடைந்தால் போட்டியில் இருந்து வெளியேற்றப்படும் நிலை உருவாகும். இதனால் இந்திய வீரர்கள் அனைவரும் முழு திறமையை வெளிப்படுத்த வேண்டும்.
நேற்றைய ஆட்டத்தில் இந்திய வீரர்களின் பந்து வீச்சு மோசமாக இருந்தது. இதை சரி செய்யவேண்டிய நிலைமை உள்ளது.
“எப்” பிரிவில் நாளை நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் இலங்கை-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுமே முதல் ஆட்டத்தில் வென்றதால் நெருக்கடி இல்லை.

“இ” பிரிவில் இன்று நடைபெறும் ஆட்டங்களில் பாகிஸ்தான்-நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்ற

ன.........................



No comments:

Post a Comment