Thursday, May 6, 2010

பொருளாதார நெருக்கடி: கிரீஸ் நாட்டில் பயங்கர கலவரம்; 3 பேரை பொது மக்கள் கொன்றனர்

ஐரோப்பா கண்டத்தில் வளமான நாடுகளில் ஒன்றாக திகழ்ந்தது கிரீஸ் நாடு. அந்த நாடு திடீரென பொருளாதார நெருக்கடியை சந்தித்து உள்ளது.


பொருளாதார நெருக்கடியால் கிரீஸ் நாட்டில் ரூ.21 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின் உள்நாட்டு உற்பத்தி 3 சதவித அளவுக்கு குறைந்துவிட்டது. பண மதிப்பும் வீழ்ச்சி அடைந்துள்ளது.


நிலைமையை சமாளிக்க அரசு பல்வேறு வரிகளை உயர்த்தி உள்ளது. இதனால் விலைவாசி உயர்ந்துவிட்டது. மக்களிடம் பணபுழக்கம் குறைந்துவிட்டது. பாங்கிகள் திவால் ஆகும் நிலைமை உருவாகி உள்ளது.


பொருளாதார நெருக்கடி மக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது. அவர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் குதித்து உள்ளனர்.


தலைநகரம் ஏதென்சில் 10 லட்சம் பேர் திரண்டு வந்து போராட்டத்தில் குதித்தனர். அவர்கள் வன்முறையிலும் இறங்கினார்கள். அரசு அலுவலகம், வாகனங்களுக்கு தீவைத்தனர். பாங்கிகளும் அடைக்கப்பட்டன.


வன்முறையில் ஈடுபட்டவர்களை தடுக்க முயன்ற போலீசாரை எதிர்த்து தாக்கினார்கள். இதனால் கண்ணீர் புகை குண்டு வீச்சு, துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்தன.


பாங்கி ஒன்றுக்கு தீவைத்தில் கர்ப்பிணி பெண் ஊழியர் உள்பட 3 பேர் பலியானார்கள்.


பல்வேறு இடங்களிலும் அரசு ஊழியர்கள், பாங்கி ஊழியர்கள் தாக்கப்பட்டனர்.


இந்த சம்பவத்தை அடுத்து கலவரகாரர்களுக்கு அதிபர் கரோலஸ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இதில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ஐரோப்பிய யூனியன் நாடுகள் உதவ முன்வந்து உள்ளன. அந்த நாடுகள் சுமார் ரூ.6 லட்சம் கோடி வரை கொடுக்க உள்ளன. பன்னாட்டு நிதியில் ரூ.2 லட்சம் கோடி வழங்க உள்ளது.

No comments:

Post a Comment