Wednesday, May 5, 2010

துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளுக்கு இரட்டை குழந்தை; ஆண்-பெண் குழந்தைகள் பிறந்தன

துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளுக்கு இரட்டை குழந்தை; ஆண்-பெண் குழந்தைகள் பிறந்தன

துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி என்ற மகனும், செந்தாமரை என்ற மகளும் உள்ளனர். உதயநிதியின் மனைவி கிருத்திகா. அவர்களுக்கு 4 வயதில் இன்பநிதி என்ற மகன் உள்ளார்.
செந்தாமரையின் கணவர் சபரீஸ். செந்தாமரை நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
நேற்று அவர் பிரசவத்துக்காக ஆயிரம்விளக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை 6.15 மணிக்கு அவருக்கு அழகான இரட்டை குழந்தைகள் பிறந்தன.
அறுவை சிகிச்சை மூலமாக ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் பிறந்தன. 2 குழந்தைகளையும் இன்குபேட்டரில் வைத்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று பேரக் குழந்தைகளை பார்த்து உள்ளம் மகிழ்ந்தார். தனது தந்தையும் முதல்- அமைச்சருமான கருணாநிதியை சந்தித்து இனிப்பான தகவலை பரிமாறிக் கொண்டார்.
செந்தாமரைக்கு இரட்டை குழந்தை பிறந்த தகவல் அறிந்ததும் துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலை பேசியில் தொடர்பு கொண்டு நண்பர்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment