Thursday, May 6, 2010

கடற்படை கப்பல் மூழ்கடிப்பு: தென்கொரியா- வடகொரியா போர் ஏற்படுமா? எல்லையில் 50 ஆயிரம் வீரர்கள் குவிப்பு

தென் கொரியா- வட கொரியா ஆகிய நாடுகள் பரம்பரை எதிரி நாடுகளாக உள்ளன. இந்த நிலையில் வடகொரிய கடற்பகுதியில் சென்று கொண்டிருந்த தென் கொரிய நாட்டு போர் கப்பல் ஒன்று மர்மமான முறையில் கடலில் மூழ்கியது. மார்ச் மாதம் 26-ந்தேதி இந்த சம்பவம் நடந்தது. இதில் 46 வீரர்கள் உயிர் இழந்தனர்.
கப்பல் எப்படி மூழ்கியது என்பது மர்மமாக இருக்கிறது. வடகொரியா ஏதேனும் சதி செய்து கப்பலை மூழ்கடித்து இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
தென்கொரியா அந்த கப்பலை மீட்டு எடுத்து எப்படி மூழ்கியது என்று ஆய்வு செய்து வருகிறது.
கப்பலை வடகொரியாதான் தகர்த்தது என்று தெரிந்தால் உடனே தென்கொரியா, வடகொரியா மீது போர் தொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதட்டம் ஏற்பட்டுள்ளது.
போர் ஏற்பட்டால் அதை சமாளிக்கும் வகையில் வட கொரியா எல்லை முழுவதும் 50 ஆயிரம் வீரர்களை குவித்துள்ளது.Bold
இதை தொடர்ந்து தென் கொரிய அதிபர் அந்த நாட்டு உயர் ராணுவ அதிகாரிகள் 150 பேருடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.

No comments:

Post a Comment