Monday, May 3, 2010

நண்பர் மனைவி கற்பழிப்பு கர்நாடக மந்திரி கைது ஆகிறார்............

நண்பர் மனைவி கற்பழிப்பு கர்நாடக மந்திரி கைது ஆகிறார்; கவர்னரிடம் புகார் கொடுத்ததால் நடவடிக்கை


கர்நாடகாவில் உணவு மற்றும் சிவில் சப்ளைஸ் துறை மந்திரியாக இருந்தவர் ஹர்தல் ஹாலப்பா. கடந்த நவம்பர் மாதம் இவர் ஷிமோகா மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அன்று இரவு தனது நண்பர் வெங்கடேச மூர்த்தி வீட்டில் தங்கினார். அதிகாலை 3.30 மணிக்கு தனக்கு ரத்த அழுத்தம் அதிகரித்து விட்டதாக கூறிய ஹாலப்பா உடனடியாக மாத்திரை வாங்கி வருமாறு வெங்கடேச மூர்த்தியை வெளியில் அனுப்பினார். பிறகு அவர் வெங்கடேச மூர்த்தியின் மனைவி சந்தி ராவதியை வலுக்காட்டாயமாக கற்பழித்து விட்டதாக கூறப்படுகிறது.

மாத்திரை வாங்க வெளியில் சென்றிருந்த வெங்கடேசமூர்த்தி திரும்பி வந்த போது, சந்திராவதி அழுது கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். நடந்ததை அறிந்ததும் அவர் ஹாலப்பாவை தாக்கினார்.

உடனே ஹாலப்பா மன்னிப்பு கேட்டார். சந்திராவதியின் காலில் விழுந்து கெஞ்சினார். இந்த காட்சிகளை வெங்டேச மூர்த்தி தன் செல்போன் காமிராவில் பதிவு செய்தார். அரைகுறை ஆடையுடன் ஹாலப்பா, படுக்கை அறையில் இருந்து எழுந்து ஓடும் காட்சிகளும் அந்த காமிராவில் பதிவானது.

மந்திரி ஹாலப்பாவின் இந்த செக்ஸ் லீலை பற்றி நேற்று கன்னட நாளிதழில் செய்தி வெளியானது. இதனால் ஹாலப்பாவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. அவர் தன் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை முதல்- மந்திரி எடியூரப்பா உடனடியாக ஏற்றுக் கொண்டார்.

இந்த நிலையில் ஹாலப்பாவின் ஆதரவாளர்கள் வெங்கடேசமூர்த்தியையும் அவரது குடும்பத்தினரையும் கொலை செய்யப்போவதாக மிரட்டியதாக தெரிகிறது. இதையடுத்து வெங்கடேச மூர்த்தியும், சந்திராவதியும் நேற்று கர்நாடக போலீஸ் டி.ஜி.பி. அஜய்குமார் சிங்கை சந்தித்து மனு கொடுத்தார். அந்த மனுவில் சந்திராவதி கூறி இருப்பதாவது:-

அமைச்சர் ஹாலப்பாவும், என் கணவர் வெங்கடேச மூர்த்தியும் கடந்த 7 ஆண்டுகளாக நண்பர்களாக பழகி வந்தனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26-ந் தேதி ஹாலப்பா ஷிமோகா நகரில் நடந்த கூட்டத்தில் பேச வந்தார். அன்றிரவு எங்கள் வீட்டுக்கு வந்தார்.

எனது கணவரும் ஹாலப்பாவும் சாப்பிட்டு விட்டு இரவு 12 மணி வரை பேசிக் கொண்டிருந்தனர். பிறகு மாடியில் உள்ள அறைக்கு ஹாலப்பா தூங்க சென்று விட்டார். நானும் எனது கணவரும் கீழ் தளத்தில் உள்ள அறையில் படுத்திருந்தோம்.

அதிகாலை 3.30 மணிக்கு ஹாலப்பா அலறும் சத்தம் கேட்டது. என் கணவர் மாடிக்கு ஓடிச் சென்று பார்த்தார். அப்போது ஹாலப்பா தனக்கு ரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகவும், விருந்தினர் மாளிகைக்கு சென்று, அங்கிருக்கும் தன் உதவியாளரிடம் மாத்திரை வாங்கி வருமாறும் கூறினார். இதை நம்பி எனது கணவர் காரில் ஏறி வெளியில் சென்றார்.

அதன் பிறகு ஹாலப்பா எனது படுக்கை அறைக்குள் வந்தார். என்னிடம் தவறாக நடக்க முயன்றார். கற்பழிக்கும் நோக்கத்துடன் அவர் இருந்தார். என்னை விடுவித்துக் கொள்ள நான் அவரிடம் கடுமையாகப் போராடினேன்.

சுமார் 20 நிமிடம் நான் அவரிடம் சிக்கி தவித்தேன். அந்த சமயம் எனது கணவர் திரும்பி வந்து விட்டார். அவரிடம் நான் அழுது கொண்டே நடந்த சம்பவத்தை கூறினேன்.

அதிர்ச்சியும், ஆவேசமும் அடைந்த என் கணவர் ஹாலப்பாவை அடித்து உதைத்து தாக்கினார். இதில் ஹாலப்பா மயங்கி விழுந்தார். அவர் செத்து போய் இருப்பாரோ என்று பயந்தோம்.

அவரது முகத்தில் தண்ணீர் தெளித்ததும் மயக்கம் தெளிந்து எழுந்தார். என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். பிறகு என் அறையில் இருந்து வெளியில் சென்று விட்டார்.

ஹாலப்பா என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதையும், பிறகு உடைகளை சரி செய்தபடி எழுந்து செல்வதையும் எனது கணவர் தன் செல்போனில் படம் பிடித்தார். நான் ஹாலப்பா அணிந்திருந்த வேட்டியை எடுத்து பத்திரமாக வைத்துக் கொண்டேன்.

இந்த சம்பவம் பற்றி வெளியில் சொல்லக் கூடாது என்று ஹாலப்பாவும் அவரது அடியாட்களும் எங்களை மிரட்டினார்கள். கடந்த சில தினங்களாக இந்த மிரட்டல் அதிகரித்தது. இதனால் நான் 2 தடவை தற்கொலை செய்து கொள்ள முயன்றேன்.

ஹாலப்பாவின் அச்சுறுத்தல் அதிகரித்ததால் வேறு வழியின்றி போலீசை நாடி உள்ளோம். ஹாலப்பாவை கைது செய்து உரிய தண்டனை கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் சந்திராவதி கூறி உள்ளார். டி.ஜி.பி.யிடம் மனு கொடுத்த பிறகு வெங்கடேசமூர்த்தியும், சந்திராவதியும் கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் பரத்வாஜ்ஜின் உதவியாளர்களிடமும் மனு கொடுத்தனர். அதிலும் ஹாலப்பாவை கைது செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து வெங்கடேச மூர்த்தி பத்திரிகை நிருபர்களை சந்தித்து சி.டி.க்களை வினியோகம் செய்தார். அந்த சி.டி.யில் சுமார் 40 நிமிட காட்சிகள் உள்ளது. அதில் இரவு உடையில் சந்திராவதி அழுது கொண்டிருப்பது போலவும், அவர் அருகில் இருந்து ஹாலப்பா எழுந்து செல்வது போலவும் காட்சிகள் உள்ளன.

இந்த சி.டி.ஆதாரத்தின் அடிப்படையில் ஹாலப்பா கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது. இதற் கான நடவடிக்கைகளை பெங்களூர் போலீசார் எடுத்துள்ளனர்.

நிருபர்களிடம் சி.டி.யை கொடுத்த பிறகு வெங்கடேச மூர்த்தி கூறியதாவது:-

ஹாலப்பாவின் ஆட்கள் எனது குழந்தைகளிடம் மிரட்டியுள்ளார். உன் தந்தையை கொல்லப்போகிறோம் என்று கூறி உள்ளனர். இதனால் என் குழந்தைகள் கதறி அழுதனர்.

இதன் காரணமாகத்தான் நான் இந்த விஷயத்தை வெளியில் சொல்லவேண்டியதாயிற்று. எனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் தினமும் வந்தபடி உள்ளது.

ஷிமோகாவில் நியாயம் கிடைக்காது என்பதால் தான் பெங்களூர் வந்துள்ளேன். சம்பவம் நடந்த அன்றே ஹாலப்பாவை கொன்று விட நினைத்தேன். அதிகாரபலம், ஆள்பலத்தால் தப்பி விட்டான். அவனுக்கு உரிய தண்டனை கொடுக்க வேண்டும்.

இவ்வாறு வெங்கடேச மூர்த்தி கூறினார்.

வெங்கடேசமூர்த்தியும் சந்திராவதியும் கூறியுள்ள குற்றச்சாட்டுக்களை ஹாலப்பா மறுத்துள்ளார். அவர் கூறியதாவது:-

நான் அப்பாவி, யாரிடமும் நான் பாலியல் முறைகேடு செய்யவில்லை. நான் செய்த ஒரே தவறு, என் நண்பன் வீட்டில் இரவில் தங்கியது தான்.

பா...வில் உள்ள எனக்கு வேண்டாதவர்களும், என் அரசியல் எதிரிகளும் என்னை இப்படி ஒரு சிக்கலில் மாட்டி விட்டுள்ளனர். பா... எம்.எல்.. கோபால கிருஷ்ணன், பங்காரப்பா அவரது மகன்கள் தான் என் மீது இத்தகைய பாலியல் சதி திட்டத்தை அரங்கேற்றி உள்ளனர்.

பாரதீய ஜனதாவுக்கும், முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கும் நெருக்கடி வந்து விட கூடாது என்பதற்காக நான் பதவியை ராஜினாமா செய்துள்ளேன்.

இவ்வாறு ஹாலப்பா கூறினார்.

No comments:

Post a Comment