Friday, May 7, 2010

எதிர்க்கட்சிக்கு அதிக இடங்கள் இங்கிலாந்து தேர்தலில் இழுபறி; கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்பு.......
எதிர்க்கட்சிக்கு அதிக இடங்கள்    இங்கிலாந்து தேர்தலில் இழுபறி;    கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்பு
பாராளுமன்ற பதவி காலம் முடிந்ததை அடுத்து அங்கு தேர்தல் நடந்தது. ஆளுங்கட்சியான தொழிலாளர் கட்சி, கன்சர்வேடிவ் கட்சி, லிபரல் ஜனநாயக கட்சி உள்பட பல கட்சிகள் போட்டியிட்டன. இதில் தொழிலாளர் கட்சிக்கும் கன்சர்வேடிவ் கட்சிக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவியது. லிபரல் ஜனநாயக கட்சியும் ஓரளவு செல்வாக்குடன் திகழ்ந்தது.


இங்கிலாந்தில் மொத்த தொகுதி களின் எண்ணிக்கை 650. இவற்றில் 649 தொகுதி களில் தேர்தல் நடந்தது. 4150 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.


நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை ஓட்டுப்பதிவு நடந்தது. ஓட்டுப்பதிவு முடிந்ததும் 11 மணிக்கே ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.


இன்று காலையில் முடிவுகள் வெளி வரத்தொடங்கின. தொடக்கத்தில் இருந்தே எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி பல இடங்களில் முன்னணியில் இருந்தது.


இன்று மதியம் 601 தொகுதிகளுக்கு முடிவுகள் வெளி வந்திருந்தன. அதில் கன்சர் வேடிவ் கட்சி 286 தொகுதி களை பிடித்து முதலிடத்தில் இருந்தது. தொழிலாளர் கட்சிக்கு 236 இடங்களும், லிபரல் ஜனநாயக கட்சிக்கு 51 இடங்களும் கிடைத்து இருந்தன. இதர இடங்களை சிறு கட்சிகள் பிடித்து இருந்தன.


இன்னும் 48 தொகுதிகளுக்கு முடிவுகள் வரவேண்டியது உள்ளது.

எந்த கட்சிக்கு 326 இடங்கள் கிடைக்கிறதோ அந்த கட்சி தனி மெஜாரிட்டி பெற்று ஆட்சி அமைக்கலாம். ஆனால் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்க வாய்ப்பு இல்லை.


இருந்தாலும் கன்சர் வேடிவ் கட்சி அதிக இடங்களை பிடித்த கட்சியாக உள்ளது. அந்த கட்சிக்கு 300-ல் இருந்து 310 இடங்கள் வரை கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்சி அமைக்க 15 -ல் இருந்து 20 இடங்கள் வரை தேவைப்படலாம்.


எனவே கன்சர் வேடிவ் கட்சி கூட்டணி ஆட்சி அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. லிபரல் ஜனநாயக கட்சிக்கு 50 இடங்கள் கிடைத்துள்ளன. அவர்களை கூட்டணியில் சேர்த்து கொண்டால் எளிதாக ஆட்சி அமைத்து விடலாம் எனவே அந்த கட்சியுடன் பேச்சு வார்த்தை யை தொடங்கி உள்ளனர்.


சிறு கட்சிகளும் 27 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று உள்ளன. அவர்களை சேர்த்து கொண்டாலும் ஆட்சி அமைத்து விடலாம். அவர்களை இழுக்கும் முயற்சியும் நடக்கிறது.


ஆனால் பிரதமர் கார்டன் பிரவுன் நாங்களும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க முயற்சிப்போம் என்று அறிவித்து உள்ளார். லிபரல் ஜனநாயக கட்சி மற்றும் சிறு கட்சிகளையும் சேர்த்தால் மட்டுமே கார்டன் பிரவுன் ஆட்சி அமைக்க முடியும்.


கன்சர்வேடிவ் கட்சிக்கு குறைவான எம்.பி.க்களே தேவைப்படுவதால் அந்த கட்சியே ஆட்சி அமைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்த கட்சி ஆட்சி அமைத்தால் கட்சி தலைவர் டேவிட் கேமரூன் பிரதமர் ஆவார்.


தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சியில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் பிரீத்திபட்டீல் வெற்றி பெற்றுள் ளார். இன்னொரு இந்திய வம்சாவளி பெண் வலேரி லாஷ், அவரது சகோதரர் கெய்த்வாஷின் ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment