Thursday, May 6, 2010

விபசார வேட்டைக்கு சென்ற சப்- இன்ஸ்பெக்டரை காரில் கடத்திய கும்பல்: சினிமாவில் வருவது போல பரபரப்பு சம்பவம்

கிண்டி பஸ் நிலையம் அருகே விபசார கும்பலின் நடமாட்டம் இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. காரில் சுற்றி வந்து வாலிபர்களுக்கு வலைவிரிக்கும் இக்கும்பலை பிடிக்க அண்ணாநகர் பகுதியில் பணிபுரியும் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் களத்தில் இறங்கினார். கிண்டி பஸ் நிலையம் அருகே விபசார கும்பலின் வருகைக்காக சப்-இன்ஸ்பெக்டர் மப்டியில் காத்து இருந்தார்.


அப்போது சான்ட்ரோ கார் ஒன்று இவரது அருகில் வந்து நின்றது. டிரைவர் மெதுவாக கண்ணாடியை கீழே இறக்கி, சப்-இன்ஸ்பெக்டரிடம் பேச்சு கொடுத்தார். இதையடுத்து அழகிகளுடன் உல்லாசம் அனுபவிக்க செல்லும் வாடிக்கையாளர் போல சப்- இன்ஸ்பெக்டர் காரில் ஏறிக்கொண்டார். காருக்குள் 3 அழகிகள் இருந்தனர்.


கார் சிறிது தூரம் சென்றதும் சப்-இன்ஸ்பெக்டர் தனது வேலையை தொடங்கினார். துணை கமிஷனர் ஒருவரின் சிறப்பு படையில் இருக்கும் இவர் சட்டென்று குரலை உயர்த்தி தான் ஒரு சப்- இன்ஸ்பெக்டர் என்பதை காட்டத் தொடங்கினார்.


கார் டிரைவரை பார்த்து, டேய் நேராக கிண்டி போலீஸ் நிலையத்துக்கு காரை ஓட்டு என்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த கார் டிரைவர் சுஜித், நான் யார் என்று தெரியாமலேயே என்னை பிடிக்க வந்து விட்டாயா? என்று கூறிய சுஜித், உனக்கு சாவு நெருங்கிவிட்டது. பக்கத்தில்தான் எனது ஆட்கள் இருக்கிறார்கள். உன்னை என்ன செய்கிறேன் பார் என்று கூறியபடியே காரை மின்னல் வேகத்தில் ஓட்டினார். அண்ணா பல்கலைக்கழகம் நோக்கி “ஜெட்” வேகத்தில் கார் பறந்தது.


நிலைமை விபரீதமாவதை உணர்ந்த சப்-இன்ஸ்பெக்டர், டிரைவர் சுஜித்தை எச்சரித்தார். ஆனால் சுஜித் இதனை கண்டு கொள்ளவில்லை. அப்போது அண்ணா பல்கலைக்கழகம் முன்பு கார் சென்று கொண்டிருந்தது.


உடனடியாக கார் கண்ணாடியை உடைத்த சப்- இன்ஸ்பெக்டர் பின் இருக்கையில் அமர்ந்தபடியே டிரைவர் சுஜித்தின் கழுத்தில் கையை போட்டு இறுக்கினார்.இதனால் நிலை குலைந்த சுஜித் காரை மேற்கொண்டு ஓட்ட முடியாமல் நிறுத்தினார்.
கார் நின்றதும் அழகிகள் 3 பேரும் காரில் இருந்து குதித்து தப்பினர். சுஜித் மட்டும் மாட்டிக்கொண்டார். இது குறித்து தகவல் கிடைத்ததும் கோட்டூர்புரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சுஜித்தை பிடித்தனர். கார் பறிமுதல் செய்யப்பட்டது. சுஜித் விபசார புரோக்கர் என்பது தெரிய வந்தது. மதுரையைச் சேர்ந்த சுஜித் வந்த கார் யாருடையது. விபசார கும்பலின் பின்னணி என்ன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


சினிமாவில் வருவது போன்று நடைபெற்ற இச்சம்பவம் கோட்டூர்புரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தப்பி ஓடிய விபசார அழகிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment