Wednesday, May 5, 2010

“எப்” பிரிவில் இந்தியா “சூப்பர் 8” சுற்று நாளை தொடக்க

“எப்” பிரிவில் இந்தியா “சூப்பர் 8” சுற்று நாளை தொடக்க

20 ஓவர் ஐ.சி.சி. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நடைபெற்று வருகிறது.

இதில் 12 நாடுகள் பங்கேற்றன. தரவரிசை அடிப்படையில் அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் 3 நாடுகள் இடம்பெற்றன.

“லீக்” முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் “சூப்பர் 8” சுற்றுக்கு நுழையும். இன்றுடன் “லீக்” ஆட்டங்கள் முடிகிறது. இன்று நடைபெறும் கடைசி “லீக்” ஆட்டங்களில் ஆஸ்திரேலியா - வங்காளதேசம் (“ஏ” பிரிவு), தென்ஆப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் (“சி” பிரிவு) அணிகள் மோதுகின்றன.

“சூப்பர் 8” சுற்று ஆட்டம் நாளை (6-ந்தேதி) தொடங்குகிறது. இதில் தகுதி பெறும் 8 அணிகளும் “இ”, “எப்” என 2 பிரிவாக பிரிக்கப்படும். “இ” பிரிவில் ஏ1, பி2. சி1, டி2 அணிகளும், “எப்” பிரிவில் பி1, ஏ2, சி2, டி1 அணிகளும் இடம்பெறும்.

“சி” பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா 2 வெற்றியை பெற்று முன்னிலையில் இருந்தாலும் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ளது. இதன் காரணமாக சி2-வாக இந்தியா உள்ளது. இதனால் இந்திய அணி “சூப்பர்8” சுற்றில் “எப்” பிரிவில் இடம்பெற்று உள்ளது.

இந்தியா இடம்பெற்றுள்ள பிரிவில் வெஸ்ட்இண்டீஸ் (டி1), இலங்கை (பி1) ஆஸ்திரேலியா அல்லது வங்காளதேசம் (ஏ2) ஆகிய அணிகள் இடம்பெறும்.

“இ” பிரிவில் பாகிஸ்தான் அல்லது வங்காளதேசம் (ஏ1), நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா அல்லது ஆப்கானிஸ்தான் (சி1), இங்கிலாந்து (டி2) ஆகிய அணிகள் இடம் பெறும்.

வங்காளதேசமும், ஆப்கானிஸ் தானும் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு குறைவே. இதனால் பாகிஸ்தான் (ஏ1), ஆஸ்திரேலியா (ஏ2), தென் ஆப்பிரிக்கா (சி1) ஆகிய அணிகள் தகுதி பெறும்.

No comments:

Post a Comment