Friday, May 7, 2010

மும்பை ஆஸ்பத்திரியில் ஏ.ஆர்.ரகுமான் மகள் அனுமதி
பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு கதிஜா (14), ரஹீமா (11) என்ற 2 மகள்களும், அமீன் (5) என்ற மகனும் உள்ளனர். கடந்த வாரம் ரஹீமாவுக்கு திடீரென இதய கோளாறு ஏற்பட்டது.


இதையடுத்து ரஹிமா மும்பையில் உள்ள ஏசியன் ஹார்ட் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை அருகில் இருந்த 3 தினங்களாக ஏ.ஆர்.ரகுமான் கவனித்து கொண்டார்.

தற்போது ரஹீமா உடல் நலம் நன்கு தேறி விட்ட தாகவும், தன்னை தொடர்பு கொண்டு இது பற்றி விசாரித்த உறவினர்கள், நண்பர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஏ.ஆர்.ரகுமான் டிவிட்டர் இணையத் தளத்தில் கூறி உள்ளார்...........

No comments:

Post a Comment